AR Rahman, Ilaiyaraja என் பாடல்களை திருடிட்டாங்க - இக்பால் பேட்டி

நீயா நானா இக்பால் பேட்டி.
இக்பால்
இக்பால் டைம்பாஸ்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய பாடல்களை திருடிவிட்டதாக புதுக்கோட்டைச் சேர்ந்த முஹம்மது இக்பால் என்பவர் குற்றம் சாட்ட அவரை நேரில் சந்தித்து பேசினேன். மனுஷன் சீரியஸா பேசுவாருனு பார்த்தா அவர் சொன்ன தகவல் எல்லாம் குபீர் சிரிப்பு ரகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினம்தான் தம்பி எனக்கு சொந்த ஊர். பெயின்டிங் வேலை பாக்குறேன். சின்ன வயசுல இருந்தே பாட்டு எழுதி, கம்போஸ் பண்றதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். பாடவும் செய்வேன். ஒரு பாடலை உருவாக்க குறைஞ்சது பத்துப் பேராவது வேணும். ஆனா, நான் தனியாளாவே உருவாக்குவேன். 16 ராகங்களும் எனக்கு அத்துபடி. அதுபோக கோடிக்கணக்குல இருக்கிற கிளை ராகங்களும் தெரியும். என்னுடைய பாடல்கள் பெரும்பாலும் அமிர்தவர்ஷினி ராகத்திலேயே அமையும். இதுவரை ஆயிரம் பாடல்களுக்கும் மேலே நான் உருவாக்கியிருக்கேன்'' என்றவர் மெயின் மேட்டருக்கு வந்தார்.

இக்பால்
'விஜய் படத்துகாக என் பாட்ட திருடிட்டாங்க' - நீயா நானா இக்பால் பேட்டி

''அப்படி நான் கஷ்டப்பட்டு உருவாக்கின பாடல்களைத் திருடுவதையே ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு வேலையா வெச்சுருக்கார். நான் செளதியில வேலை பார்க்கும்போது என் மனைவியை நினைச்சு உருக்கமா எழுதின பாட்டுதான் 'கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை'. அதை எப்படியோ திருடி 'பம்பாய்' படத்துல பாட்டா வெச்சுட்டார். ஒருநாள் சைக்கிள்ல போய்க்கிட்டு இருந்தேன்." 

"வழியில ஒரு மயில் வந்துச்சு. அதைப் பார்த்து மயிலிறகே மயிலிறகேன்னு பாட, அதைத் திருடி 'அன்பே ஆருயிரே' படத்துல வெச்சுட்டார். என் பாட்டைத் திருடுறதுக்காகவே ஊரைச்சுத்தி அவர் ஆள் போட்டிருக்கார். அந்த டீம் என் பின்னாலேயே சுத்தி  நான் பாடல் உருவாக்கும்போது ரகசியமா திருடி அவர்கிட்ட கொடுத்திடுறாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க, சாட்டிலைட் மூலமாவும் என்னை பாலோ பண்ணி திருடுறாங்க 'தாய்மண்ணே வணக்கம்' பாட்டுகூட என்னோடதுதான். அதை ரஹ்மான் நேரடியாவே வந்து திருடினார்.

எப்படின்னா எக்மோர் காமாட்சி லாட்ஜ்லதான் நான் அந்தப் பாடலை கம்போஸ் பண்ணினேன். காமாட்சி லாட்ஜுக்கு பக்கத்துலதான் ரஹ்மான் மாமியார் வீடும் இருக்கு. அவர் அடிக்கடி அங்கே வந்து போறப்போ நான் கம்போஸ் பண்றதை கவனிச்சிருக்கார். என் ரூமூக்கு பக்கத்துலயே ஒரு ரூம் போட்டு நான் அசந்த நேரம் பார்த்து ஜன்னல் வழியா என் டியூனை தூக்கிட்டு போய்ட்டார். அவர் பெயர்ல வெளியான முக்கால்வாசிப் பாட்டு என்னோடதுதான்."

இக்பால்
'அப்டியே திருமாவளவன் மாதிரி இருக்காரே' - பண்ருட்டி ரமேஷ் பேட்டி

என் பாட்டைத் திருடி இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்கீங்க, எனக்கு ஏதாவது நஷ்டஈடு கொடுங்கன்னு 20 வருஷமா அவருக்கு லெட்டர் போடுறேன். இதுவரைக்கும் அவர்கிட்ட இருந்து எந்தப் பதிலும் வரல, இக்பாலை வெச்சு நாம இவ்வளவு சம்பாரிச்சிருக்கோமே அவருக்கு ஏதாவது செய்வோம்னு அவரும் யோசிச்சது இல்லை.
ரஹ்மான் வாங்கின அந்த ஆஸ்கர் அவார்டுகூட நான் வாங்க வேண்டியது. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா  அந்த ஆஸ்கர் அவார்ட்லயே என் உருவம்தான் இருக்கு. என் முகத்தை மாடலா வெச்சுதான் அதையே டிசைன் பண்ணிருக்காங்க.

எங்க ஊர்லகூட சொன்னாங்க, 'ரஹ்மான் மேல கேஸ் போட்டா, உனக்கு நியாயம் கிடைக்கும்னு, நான்தான் எதுக்கு அவரை கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்தணும்னு விட்டுட்டேன்' என்ற இக்பால் அடுத்து குறி வைத்தது இசைஞானியை.

"ரஹ்மான் மட்டும் கிடையாது, இளையராஜா 1971-ல இருந்தே என்கிட்ட பாடல் திருடிக்கிட்டு இருக்கார். இன்னும் சொல்லப்போனா அவர் அறிமுகமானதே என்னுடைய பாடலை காப்பியடிச்சுத்தான். 'காதலுக்கு மரியாதை', 'சின்னத்தம்பி'னு அவருடைய ஆல் டைம் பெஸ்ட் ஹிட்ஸ் எல்லாம் என்னோடது. அதுக்காக எல்லாமே என்னோடதுன்னு சொல்ற அளவுக்கு நான் மோசம் இல்லை. சில பாடல்களை அவர் சொந்தமாவும் போட்டுருக்கார்.

இக்பால்
'குடிகாரர்கள் குழந்தை மாதிரினு யார் சொன்னா?' - குடிகாரன் யூசப் பேட்டி

"'கபாலி' படத்துல வந்த நெருப்புடா பாட்டுகூட என்னோடதுதான். அது திருடுபோன கதையைக் கேட்டா நீங்களே ஃபீல் பண்ணுவீங்க, எங்க ஏரியாவில ஒருத்தன் பானிபூரி கடை வெச்சுருந்தான். அவன் பீடி குடிக்கும்போதும் நெருப்பு அவன் சட்டைல விழுந்துடுச்சு. நான் நெருப்புடான்னு கத்த நம்மைச் சுற்றித்தான் ஸ்பை இருக்காங்களே, உடனே அது கபாலி படத்துல பாட்டா வந்திருச்சு. விசாரிச்சதுல அந்த பானிபூரி பையன் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு நெருக்கமாம். அந்த ஒரு வார்த்தையை அவன் ஒரு கோடி ரூபாய்க்கு வித்துருக்கான்.

இந்த பேட்டி மூலமா நீங்கதான் அவனைக் கண்டுபிடிச்சு எனக்கு சேரவேண்டிய பங்கை வாங்கிக் கொடுக்கணும். இவங்களைத் தவிர அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், எஸ்.ஏ ராஜ்குமார், சிற்பி, தீனானு ஏகப்பட்ட பேர் என் பாட்டைத் திருடியிருக்காங்க.  அதனுடைய மொத்த மதிப்பு 1 லட்சம் கோடி. இந்தத் திருட்டு தொல்லையால நான் இப்போ பாட்டு கம்போஸ் பண்றதையே விட்டுட்டேன். இதுக்காக விஜய் டிவி நீயா நானா வரைக்கும் போய் நீதி கேட்டு பார்த்துட்டேன். ஒண்ணுமே நடக்கல

"இன்னொரு முக்கியமான விஷயம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த குழந்தையே நான்தான் தெரியுமா. எங்க அம்மா ஜெயலலிதா ஒரு முஸ்லீம். அவங்க பேர்ல இருக்குற லலிதாவை திருப்பிப் போட்டா 'தலிலா'னு வரும். அம்மாவும் அப்பாவும் இத்தனை வருசமா என்னை ரகசியமா வளத்திருக்காங்க. சமீபத்துலதான் இந்த விஷயமே எனக்கு தெரிஞ்சது.

சின்னவயசுல எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா போட்டோ பார்த்தா எனக்கு புல்லரிக்கும் அதுக்கு காரணம் இப்போதான் எனக்கு புரியுது. என்னை வாரிசா அவங்க அறிவிக்கிற நேரத்துலதான் அம்மா இறந்து போய்ட்டாங்க. நான் சொல்றது பொய்னு நீங்க நினைச்சா என்னை கூட்டிட்டு போய் DNA டெஸ்ட் பண்ணிப் பாருங்க உண்மை தெரியும்"

அதுமட்டுமா தொழிலதிபர் ரத்தன் டாடா என்னோட சித்தப்பாதான். தமிழ் நாட்டுல உள்ள டாடா கம்பெனி சொத்துக்கள் என் பேர்லதான் இருக்கு. எங்க அப்பா எம்.ஜி.ஆரோட சொந்த தம்பிதான் ரத்தன் டாடா. என் பேர்ல இருக்குற டாடா சொத்துகள் மட்டும் 75 லட்சம் கோடி! ஆனா, இன்னும் அது என் கைக்கு வரல அதான் இப்படி கஷ்டப்படுறேன். நான் யாருன்னு அரசியல்வாதிகளுக்கு நல்லாவே தெரியும். முதல்வர் ஸ்டாலினே "ஆட்சி அமைக்கட்டுமா?"னு என்கிட்டதான் அனுமதி கேட்டாரு நான் ஓகே சொன்னதும்தான் அவர் அந்த முதல்வர் சீட்லயே உக்காந்தாரு தெரியுமா சரி சாயந்தரம் ஒரு பெயிண்டிங் வேலை இருக்கு மீதியை அப்பறம் பேசுவோம்" என பிரஸ்ஸும் கையுமாக கிளம்பினார் இக்பால்.

ஒரு மனுஷன் பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்காப் பொய் சொல்லக்கூடாது!

- ஜூல்ஃபிஹார் அலி. படம்: தீட்ஷித்.

இக்பால்
'வசூல் ராஜா' பிரகாஷ் ராஜ் போல வாழும் மனிதர்' - சிரிப்பானந்தா பேட்டி

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com