சொந்தப் படம் எடுத்து ’சூனியம்’ வைத்த நடிகர்கள் - ஒரு லிஸ்ட்

சின்னா ஆத்தாலே சிக்கெடுக்க முடியாம தவிக்கிறப்போ அப்பத்தாளுக்கு ஆர்யமாலா கொண்டை போட்ட மாதிரி கடன் கண்ணைப் பிதுக்கிறப்போ கனவு படத்தை எடுத்தே தீருவேன்னு ஒத்தக்கால்ல ஒண்டியா நிக்கிறாரு விஷால்.
நடிகர்கள்
நடிகர்கள் டைம்பாஸ்

வாங்குற சம்பளத்தை பகுமானமா சேர்த்து வெச்சி, நாலு வீடு வாங்குனமா, ரெண்டு நிலத்தை வாங்கிப் போட்டமான்னு ஓய்ஞ்சுபோன காலத்துல புள்ளக்குட்டியோட சந்தோஷமா இருந்தமான்னு இல்லாம… சொந்த படம் எடுக்கிறேன்னு மொத்த துட்டையும் முச்சந்தியில கொட்டுன மாதிரி, கட்டுற துணிக்கும், திங்கற சோத்துக்குமே பிரச்சனை பிடில் வாசிக்க, கடனாளியான நடிகர்களோட எண்ணிக்கை ரொம்பவே அதிகம். அதுல சிலர்…

1 . அந்த வரிசைல சந்திரபாபுன்னு கோல்டுபிளாக் குடிச்ச ஒரு ஓல்டு நடிகர். படங்கள்ல ரப்பர் பந்து மாதிரி குஷியா குதிச்சிக்கிட்டு இருந்தவரை காத்து போன பலூனாட்டம் முடக்கிப் போட்டதுக்குக் காரணம். சொந்தமா படம் எடுக்கிறேன்னு சொத்தை வித்ததுதான். ’கூடியே சுத்துறியே செவ்வாழை புத்திமதி சொல்லக்கூடாதா..?’ ன்னு சொல்லவும் ஆளில்லாம,. சொன்னாலும் கேட்காம, தானா போயி தகன மேடையில குந்துன மாதிரி ’மாடிவீட்டு ஏழை’ ன்னு மூவிய ஆரம்பிச்சி முடங்கிப் போனவர்தான் சந்திரபாபு..

நடிகர்கள்
தமிழ் சினிமா க்ரூப் டான்சர்ஸ் - ஹெவியா லைக் பண்ண வச்சவங்க லிஸ்ட்

பெட்டர்மாஸ் லைட்டேதான் வேணும்னு பெட்ரூமுக்கே காரை கொண்டுபோய் நிறுத்துற அளவுக்கு வசதி பண்ணி வெச்சிருந்த மாடிவீட்டை வித்து ஏழையான கதைதான் இவரோடது. இவரை இந்த நிலமைக்கு கொண்டுவந்ததுல வாரிக்கொடுக்கும் வள்ளல், வறுமை ஒழிப்பு தலைவன், ஏழைகளின் தோழன் எம்.ஜி.ஆருக்கும் பங்குண்டுன்னு அப்போ பேசிக்கிட்டாங்க.

2 . செவண்டி கிட்ஸ் காதுகளில் புகுந்துப் புறப்பட்ட ’அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’, ’சபாஷ் சரியான போட்டி’, ’இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்’ போன்ற பிரபலமான அரியவகை ’பஞ்ச்’ டயலாக்குகளை பேஸ்புக் வராத காலத்துலேயே பட்டித்தொட்டி எல்லாம் பரப்பினது. பி.எஸ்.வீரப்பாதான். சிரிப்பும், முறைப்பும் சரிவர கலந்த மிரட்டல் மிராசுதாரர் இவர்.

நடிச்சி சம்பாதிச்ச பணத்தை கெடுத்து குழி பறிக்கிற கூட்டம் எந்த காலத்துலயும் இருக்கும். அப்படி ’பர்ஸுல இருக்கிற பணத்தை படத்துல போடுங்க. கொட்டுற பணத்தை கூடையில அள்ளலாம்’ னு ஆசைய, தோசையா ஊத்திக்கொடுக்க… இந்தியில ’ஆத்மி’ ன்னு ஒரு படத்தை சொந்த செலவுல எடுத்தார். பெரிய பட்ஜெட். போட்ட முதலுக்கு போஸ்டர் செலவுக்குக் கூட தேரலை. படத்துல பணத்தைப் போட்டதால தலையில துண்டைப் போட்ட நடிகர்களில் பி.எஸ்.வீரப்பாவும் ஒருவர்.

3 . முதன் முதலா எடுத்த படத்துக்கு ’மழை’ னு டைட்டில் வெச்சி ஊத்திக்கிட்டவர் எஸ்.பி.பி..சரண். குருவி கொத்துற மாதிரி நடிச்சி வர்ற பணத்துல நாக்குதான் வழிக்கணும்னு, பொக்லைன்ல அள்ளிப் பொட்டலம் கட்டுற கனவோட முதலீட்டை மூவியில போட்டாரு. காலைல ’மழை’ படத்தை ரிலீஸ் பண்ணிட்டுப் பாத்தா சாயங்காலமெல்லாம் சங்கு சத்தம் கேட்க ஆரம்பிச்சிருச்சி. சரின்னு விட்டாரா மனுஷன்.

நடிகர்கள்
தமிழ் சினிமா கத்துக்கொடுத்த இங்கிலீஷ் - ஒரு லிஸ்ட்

’சென்னை – 28’ படத்தை எடுத்து, மாட்டுக்குப் போட்ட பருத்திக்கொட்டைக்கு பாலு மிச்சம்ங்கிற மாதிரி ஏதோ கொஞ்சம் வந்தாலும், ’மழை’யோட கடன், வட்டின்னு பெய்ஞ்சி ஓயலை. பல்லிக்குப் பயந்தவன் பாம்பு புத்துல படுத்த மாதிரி அடுத்ததா எடுத்ததுதான் ’ஆரண்ய காண்டம்’, இந்த படத்துக்கு ‘இந்தா புடி தேசிய விருது’ ன்னு கெடைச்சாலும் பட்ட கடன் இன்னமும் பாய் விரிச்சி ’பப்பரக்கா’ ன்னு படுத்துட்டுதான் இருக்கு. ’நல்லவாய் பாடி நாரவாய் அழிச்ச கதைன்னா இதுதான்.

4 . ’வாங்குன கடனை வட்டியோட கட்டு, இல்லன்னா சொத்து மதிப்பை சொல்லு’ன்னு விஷால் குடுமியைக் கோர்ட்டு பிடிச்சிருக்கு. ’அங்க கடன் இங்க கடன், எனக்கு தரணும் உனக்கு தரணும்’னு நாலா பக்கமும் நாக்கு புடிங்கிற அளவுக்கு கடன் தொல்லை கழுத்தை நெரிக்க, சொந்தப்படம் எடுத்து சூடு பட்டுக்கொண்டவர்தான் விஷால்.

இறுதியாக லைக்கா நிறுவனத்திடம் லைவாக சென்று பெருந்தொகையை கடனாக வாங்கி சில்லரை கடன்களை செட்டில் செய்திருக்கிறார். வாங்குன பணத்தை வாயில போட்டுக்கலாம்னு பார்த்தா லைக்கா நைசா கோர்ட்டு படியேறி விஷால் மேல பிராது கொடுத்திருக்கு.

சின்னா ஆத்தாலே சிக்கெடுக்க முடியாம தவிக்கிறப்போ அப்பத்தாளுக்கு ஆர்யமாலா கொண்டை போட்ட மாதிரி கடன் கண்ணைப் பிதுக்கிறப்போ கனவு படத்தை எடுத்தே தீருவேன்னு ஒத்தக்கால்ல ஒண்டியா நிக்கிறாரு இந்த மிஸ்கினால் பாராட்டப்பட்ட மிஸ்கின் தோஸ்த்து விஷால்.

நடிகர்கள்
காணாமல் போன கதாநாயகிகள் - ஒரு லிஸ்ட்

5 . நாயக நமைச்சல் நடுமண்டையில பிராண்ட ’வேல்முருகன் போர்வெல் கம்பெனி’ ன்னு ஒரு படம். ’கஞ்சா’ கருப்புதான் கதாநாயகன். கேட்கவே நாராசமா இருக்கில்ல. சரி.. ஊர்லேர்ந்து பூண்டு வித்துட்டு வந்த புரெடியூசர் யாரையாச்சும் புடிக்காம.. நடிச்சு சம்பாதிச்ச பணத்தை படிச்சுப் படிச்சு சொல்லியும் கேட்காம, படத்துல பணத்தைப் போட்டதோட விளைவு, போர்வெல் ஓடி சம்பாதிச்சிக் கொடுக்கும்னு பாத்தா அது பாறையில சிக்கி பல்லை இழிச்சிருச்சி.. சொந்தப் படம் எடுத்து சொத்து வாங்குன காலமெல்லாம் போயி, இப்போ சேத்து சேத்து கட்டுன வீட்டை சேட்டுகிட்டையும், பாத்துப் பாத்து கட்டுன வீட்டை பைனான்ஸிலயும் விக்கிற நிலமைக்கு வந்துருச்சி.

கருத்தா இல்லாமப்போனதால இப்போ வாடகை வீட்டுக்கு குடிவந்து வாய்ப்பு தேடுற நிலமைக்கு வந்துட்டாரு கருப்பு. யாராச்சும் ’கதாநாயகனா நடிக்க வர்றியா..?’ ன்னு காமெடிக்கு கேட்டாலும் கல்லை எடுத்துக்கிட்டு அடிக்க ஓடுறாரு மனுஷன்.

6 . ’’நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..?’ ங்கிற வடிவேலோட டயலாக் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ.. நம்ம சசிகுமாருக்கு பொருந்தும். எத்தனையோ படம் எடுத்து, போட்ட பணம் வந்தும் வராம போனாலும், பாதிப்பைப் பத்திக் கவலைப்படாம, புயல் அடிச்சப்பவும் பொத்தி வெச்சி பொரிகடலை வித்துகிட்டு இருந்தாரு. ஆனா, ’தாரை தப்பட்டை’ ன்னு ஒரு படம் தயாரிச்சாரு பாருங்க. அடிச்சிக் கிழிச்சி தோல் தோலாத் தொங்க விட்டுருச்சி..

பாலா இயக்கம்னதுமே சசிகுமார் சிக்கி சீரழியப் போறது கண்ணு முன்னாடி கண்ணாடி மாதிரி தெரிஞ்சது. கடற்கரையில கடலையும், மகாபலிபுரத்துல மலையையும் செட்டுப் போட்டாகணும் சேட்டை பண்றவர்தான் பாலா. ’அதான் எல்லாம் அங்கையே இருக்கே அதுலயே எடுக்கலாம்’ னு சொன்னா கோக்குமாக்கா ’பேக்கப்’ சொல்ற ஆளுகிட்ட மாட்டி சின்னாப்பின்னமான சசிகுமார் கதையவே படமா எடுத்தா செமையா ஓடும்.

- எம்.ஜி.கன்னியப்பன்.

மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com