HBD Atlee : From Short Film to Bollywood - Atlee என்கிற அசுர வளர்ச்சியின் கதை! | SRK

அட்லி எழுதிய இயக்கிய ராஜா ராணி படத்தில் முதலில் சிவகார்த்திகேயன், ஜெய்யை வைத்து படத்தை எடுத்த முடிவு செய்திருந்தார். ஆனால்... நடன இயக்குநராக வேண்டுமென்ற கனவோடு கலா மாஸ்டரின் நடன குழுவில் இணைகிறார்.
Atlee
Atleetimepass

யார் இந்த அட்லீ...? ராஜா ராணி முதல் ஜவான் வரை ஒரு வெற்றி இயக்குனராக வலம் வருகிறார் நம்ம அட்லீ, இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் ஆக தனது சினிமா பயணத்தை தொடக்கி, இப்போது பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் பண்ணுற அளவுவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். 

அட்லீ, இவர் பூர்விகம் மதுரையாக இருந்தாலும், இவரின் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது, இவர் சென்னையில் செப்டம்பர் 21, 1986 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பள்ளி பருவத்திலேயே சினிமாவில் ஒரு பெரிய நடன இயக்குநராக வேண்டுமென்ற கனவோடு இருந்தார். அதற்காக நடன இயக்குநர் கலா நடத்திவரும் நடன பயிற்சி குழுவின் இணைகிறார். இதன் மூலம் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடன குழுவின் பணியாற்றினார்.

இதனால் சினிமாவின் ஆர்வம் அதிகரித்து, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் Visual Comunication படிக்கிறார். இவர் கல்லூரி படிக்கும் போது பல்வேறு குறும்படங்களை இயக்கி, அதனை வெளியிடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக நடன இயக்குநராக ஆக வேண்டுமென்ற கனவில் இருந்து திரைப்பட இயக்குநராக ஆசைப்பட்டார், 

தான் எடுத்த குரும்படத்தை காண்பித்து இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அப்போது ஷங்கர் நடிகர் ரஜினியை வைத்து எந்திரன் படம் எடுக்கும் முடிவில் இருந்தார். அப்போது அட்லீக்கு வேலையில் இருந்த கவனமும், நேர்த்தியும் ஷங்கரை வியப்படைய வைத்தது. இதனால் சங்கருக்கு பிடித்தமான உதவி இயக்குநராக அட்லீ இருந்தார்.

Atlee
Tamil Cinema : கட்சி தொடங்கி ’கண்டமான’ ஹீரோக்கள் - ஒரு லிஸ்ட் !

அதன் பின் ஷங்கரிடம் இருந்து வெளியேறிய அட்லீ சிவகார்த்திகேயன் உடன் இணைந்து முகப்புத்தகம் என்ற குரும்படதை இயக்கினார். அந்த குரும்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. எனவே இதை தொடர்ந்து அட்லீ முழு திரைப்படம் இயக்குவாதற்க்கு வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அதை தொடர்ந்து நண்பன் படம் இயக்குவதற்கு ஷங்கரிடம் சரியான உதவி இயக்குநர்கள் இல்லாதால் மீண்டும் ஷங்கருடன் நண்பன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். நண்பன் படப்பிடிப்பின்போது தான் அட்லீக்கு விஜயிடம் அறுமுகம் கிடைத்தது. பிறகு நண்பன் படத்தின் வேலைகளை முடித்த பிறகு மீண்டும் தன்  படவேலைகளை தொடங்கினார் அட்லீ.

அப்போது எழுதிய கதை தான் 2013ல் வெளிவந்த ராஜா ராணி, இந்த படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் மற்றும் ஜெய்யை வைத்து படத்தை எடுத்த முடிவு செய்திருந்தார், பின் தொலைக்காட்சியில் வேலை செய்து கொண்டு இருந்த மகேந்திரன் என்பவரின் யோசனையால் ஆர்யா மற்றும் ஜெய்யை வைத்து படத்தை எடுக்க முடிவு செய்த அட்லீ, அவரின் உதவியுடன் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் ராஜா ராணி படத்தை வெற்றிகரமாக இயக்கினார்.

இந்த படம் ஒரு காதல் படமாக வெளிவந்து இளைஞர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் நல்ல விமர்சனத்தைப் பெற்றது. முதல் படத்திலேயே நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா உள்ளிட்ட பிரபலங்களை வைத்து இயக்கி வெற்றிக்கொடுத்தது சினிமா உலகின் பார்வையை அட்லீ பக்கம் திருப்பியது.

அட்லீயின் இரண்டாவது படமாக தெறி படம் அமைந்தது. ராஜா ராணி வெற்றி மற்றும் நண்பன் படத்தின் உதவி இயக்குநர் என்பதால் இப்படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டார். 2016ஆம் ஆண்டு விஜயவுடன் சேர்ந்து கலைப்புலி S. தாணு தயாரிப்பில் தெறி என்ற மெகா பிளாக் பஸ்டர் படத்தை இயக்கிறனார். இது எமோஷனல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக அமைந்தது.

Atlee
Tamil Cinema : மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

2015 இல் ஜூலை தொடக்கத்தில் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் வேலைநிறுத்தம் மற்றும் சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக படம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது. கூடுதலாக, சீனாவின் மோசமான தட்பவெப்ப நிலைகள், அங்குள்ள காட்சிகளை படமாக்குவதற்கான யோசனையை குழு கைவிட வேண்டியிருந்தது. அதற்கு பதிலாக பாங்காக்கில் படப்பிடிப்பைத் தேர்ந்தெடுத்தது. சிரமங்கள் இருந்தாலும் 2016 ஜனவரிக்குள் படம் முடிக்கப்பட்டு, பின் ஏப்ரல் 14, 2016 ஆம் ஆண்டு வெளியிட்டப்பட்டு சினிமா விமர்சகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மீண்டும் விஜயுடன் இணைந்து 2017ஆம் ஆண்டு மெர்சல் என்ற மெகா பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தார். இந்த படம் தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக அமைந்தது. இந்த மெர்சல் திரைப்படம் 18 அக்டோபர் 2017 அன்று தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளிவந்து. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படம் உலகம் முழுவதும் 260 கோடி வசூலித்தது, அந்த நேரத்தில் விஜய்யின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாகவும் இருந்தது.

மூன்றாவதும் முறையாக விஜயுடன் இணைத்த கூட்டணி ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிகில் என்ற மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு 25 அக்டோபர் 2019  தீபாவளி அன்று வெளியானது. இதில் விஜய்யின் நடிப்பு, அதிரடி காட்சிகள், சமூக கருத்து ஆகியவற்றுக்காக விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், இப்படம் 2019 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக உருவானது. இது வெளியானவுடன் சுமார் ₹285–300 கோடிகளை வசூலித்தது. மேலும் அந்த நேரத்தில் இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த விஜய்யின் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்தது.

Atlee
Tamil Cinema : வித்தியாசமான தமிழ் சினிமா வில்லன்கள் !

அட்லீ, என்னதான் வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி இருந்தாலும், நெட்டிசன்களின் விமர்சம் இவரை விட்டு வைக்கவில்லை. இவரின் ராஜா ராணி முதல் பிகில் வரை மற்ற திரைப்படங்களில் கதையை திருடி எடுத்துள்ளார் என்று விமர்சனம் செய்யப்பட்டு, இருந்தாலும் இந்தனை பற்றி கவலைப்படாத அட்லீ இவற்றையெல்லாம் எளிதாக கடந்து வந்தார்.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் பிறகு தற்போது முதல் முறையாக பாலிவுட்டில் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன்  நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்கு வெளியிடப்படுவதால், அனைவரின் கவனமும் அட்லீ பக்கமே உள்ளது.

- மு.குபேரன்.

வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.

Follow us : https://bit.ly/3Plrlvr

Atlee
தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா - வித்தியாசங்கள பார்ப்போமா?

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com