
ஒருமுறை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நடிகர் பிரஷாந்த் குறித்து பேசும்போது, பிரசாந்த்திற்கும் அவரது அப்பா தியாகராஜனுக்கு இடையிலான உறவு குறித்து பேசினார்.
அதில், "நான் பிரசாந்த் சாருடன் 'சாக்லெட்' என்ற படத்தில் மட்டும்தான் பணிபுரிந்தேன். ஆனால் பல படங்களில் பணிபுரிந்த அளவிற்கு எங்களிடம் நல்ல பழக்கமும் நல்ல புரிதலும் தொடர் நட்பும் உள்ளது. அன்று முதல் அவருடன் நான் தொடர்ந்து பயணம் செய்கிறேன். திரையுலகில் ஒரு பேச்சு உள்ளது."
"பிரசாந்தைக் கெடுப்பதே அவரது அப்பாதான் என்று. இதை என்னிடம் பலர் நேரில் நேரிலேயே கூறியிருக்கிறார்கள். இது பற்றி நானும் பிரசாந்த் சாரும் பேசிக் கொண்டிருந்த போது தியாகராஜன் சார் மௌனமான ஒரு சிரிப்பு சிரித்தார். அப்போது பிரசாந்த் கூறியதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'எந்தத் தந்தையாவது தன் மகன் வாழ்க்கையைக் கெடுக்க விரும்புவாரா? அவரின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வாரா? எனக்கு என் அப்பாதான் எல்லாம்' என்றார். அந்த நொடியே அவர் மீது எனக்கு இருந்த மதிப்பு மேலும் அதிகரித்தது" என்றார் ஏ.வெங்கடேஷ்.