'ஒரு கோடிப்பே ரீல்ஸ் பண்ணி ஓஹோனு ஃபேமஸ் ஆனேன்' - 75 வயது வைரல் பாட்டியின் பேட்டி

"எங்களால குனிஞ்சு நிமிரக்கூட முடியல. முதுகுவலி, மூட்டுவலின்னு அவஸ்தைப் படுறோம். நீ எப்படி இன்னும் சின்னப்பொண்ணு மாதிரி ஓடுற, ஆடுற"ன்னு ஆச்ச்சரியப்படுறாங்க.
ராஜாமணி பாட்டி
ராஜாமணி பாட்டிடைம்பாஸ்

இன்ஸ்ட்டா ரீல்ஸ் எங்க ஏரியானு ரொம்பத்தான் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க இந்த 2k கிட்ஸ். அந்தக் கோட்டைக்குள்ளேயே ஒரு 75 வயசு பாட்டி என்ட்ரி கொடுத்து கெத்து காட்டி கலக்கிட்டு இருக்காங்க. நயன்தாரா, திரிஷா மாதிரி நடிச்சு 2k கிட்ஸ்களின் வீடீயோக்களையே ஓவர் டேக் பண்ணி வியூஸ் அள்ளும் ராஜாமணி பாட்டியையும், அவங்கள வெச்சு வீடியோ எடுத்து பேமஸாக்கிவிட்ட அவருடைய பேரன் தெளஃபீக்கையும் சந்தித்து பேசியதில்

இந்த வயசுல ரீல்ஸ் பண்ற ஐடியா எப்படி வந்தது ?

"என் பேரன் தெளஃபீக் வீட்ல எப்பவும் போனும் கையுமாவே சுத்திட்டு இருப்பான். வேலைக்கு எதுவும் போகாம வீடியோ எடுக்குறேன்னு வீட்டையே ரெண்டாக்குவான். ஒருநாள் "அதுல அப்படி என்னடா இருக்கு உருப்படுற வழியப் பாருன்னு சொன்னேன்.

"என்ன பாட்டி இப்படி சொல்லிட்ட இது ஒண்ணும் அவ்ளோ ஈஸினு நினைக்காத, எங்க நீ இந்த டயலாக்க சொல்லு பாப்போம்னு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'ல இருந்து ''ஒரு கோடிப்பே" டயலாக்கை சொல்லச் சொன்னான். நானும் சொன்னேன். "சூப்பர் பாட்டி"னு பாராட்டினவன் அன்னைல இருந்து என்னையும் அவன்கூட சேர்த்துக்கிட்டான். இப்படித்தான் நான் இதுக்குள்ள வந்தேன்."

எங்க வீடியோவுக்கு எங்க குடும்பத்தோட முழு ஒத்துழைப்பும் இருக்கு. நானும், இவனும் நடிக்க என்னோட இன்னொரு பேரன் அதை வீடியோவா எடுப்பான். எனக்கு லிப்ஸ்டிக், மேக்கப் எல்லாம் என் மகள் போட்டு விடுவா, காஸ்ட்யூமும் அவளே டிசைன் பண்ணிக் கொடுக்கிறா.

இவங்களோட சப்போர்ட் எல்லாம் இருக்கிறதாலதான் என்னால இந்த வயசுல இவ்ளோதூரம் சாதிக்க முடிஞ்சிருக்கு.

நான் பெருசா ரீச்சானதுக்கு 'சந்திரமுகி' ரீல்ஸ் வீடியோதான் காரணம். அந்த வீடியோ அப்படி ஒரு பேர் வாங்கிக் கொடுத்துச்சு. அதுக்கப்பறம் என் முகம் எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சது.

வீட்ல எனக்கு டச் போன் வாங்கிக் கொடுத்திருக்காங்க, அதுல என் வீடியோவுக்கு வர்ற கமெண்ட்ஸ் எல்லாம் கண்ணாடி போடாமலே படிப்பேன். நிறைய பேர் பாராட்டுவாங்க, 'சமீபத்துல 'பீஸ்ட்' விஜய் 'விக்ரம்' கமல் மாதிரி நடிச்ச ரீல்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. என் வீடியோ பார்த்த சிவகார்த்திகேயன், மாதவன், எல்லாரும் "சூப்பர் பாட்டி"னு பாராட்டியிருக்காங்க.

பிரபலமானதுக்கு அப்பறம் முன்னமாதிரி என்னால வெளியே போக முடியல, எல்லாரும் அன்பு டார்ச்சர் பண்றாங்க, செல்ஃபி எடுக்க கூட்டமா வந்திடுறாங்க, குறிப்பா குழந்தைகள் அவ்ளோ பாசம் காட்டுறாங்க என்னை செல்லமா "டிக்டாக் பாட்டி"னு கூப்பிடுறாங்க "கெத்து கிரேன்மா"னும் சிலர் சொல்றாங்க, சரி நானே ரொம்ப பேசிட்டு இருக்கேன் இவன்கிட்டயும் ஏதாவது கேளுங்க என தெளஃபீக்கை கோர்த்து விட்டார் பாட்டி.

பாட்டியை இந்த வயசுல ஏன் இப்படி பாடாப் படுத்துறீங்கனு யாராவது கேட்டிருக்காங்களா ?

"நிறைய பேர் கேட்டிருக்காங்க ஆனா, உண்மையைச் என்னன்னா பாட்டிதான் என்னை பாடாப் படுத்துறாங்க டயலாக்கெல்லாம் அவங்க அசால்ட்டா சொல்லிடுவாங்க.

ஆனா டான்ஸ்தான் அவங்ககிட்ட சிக்கல்"னு சொல்ல குறுக்கே பாய்ந்த பாட்டி "என்னை நயன்தாரா மாதிரி ஆடுன்னு சொல்றான் எனக்கு எப்படிங்க நயன்தாரா மாதிரி ஆட வரும்? இந்த வயசுல நான் இவ்ளோ ஆடுறதே பெரிசு

என் வயசுல உள்ளவங்க எல்லாம் என்னைப் பார்த்து "எங்களால குனிஞ்சு நிமிரக்கூட முடியல, முதுகுவலி, மூட்டுவலின்னு அவஸ்தைப் படுறோம். நீ எப்படி இன்னும் சின்னப்பொண்ணு மாதிரி ஓடுற,ஆடுற"ன்னு ஆச்ச்சரியப்படுறாங்க. எனக்குன்னு எந்த டயட்டும் கிடையாது இஷ்டப்பட்டதை சாப்பிடுறேன்.

நீச்சல், வாக்கிங் ரெண்டும் தொடர்ந்து பண்றேன். வாழ்க்கையை ரசிச்சு வாழ்றேன். முக்கியமா மனச இளமையா வெச்சிருக்கேன் இதெல்லாம்தான் நான் இப்படி இருக்கக் காரணம்.

உங்களுடைய வசந்த் அன் கோ காலத்துக்கும் இப்போ உள்ள காலத்துக்கும் என்ன வித்யாசத்தை பாக்குறீங்க?

இப்போ உள்ள டெக்னாலஜி எல்லாம் அப்போவே இருந்திருந்தா நான் இன்னும் முன்னாடியே முன்னுக்கு வந்திருப்பேன்னு தோணுது. அதே மாதிரி எங்க காலத்துல ஒரு பையனும், பொண்ணும் நட்பா சாதாரணமா பேசக்கூட முடியாது. ஆனா, இப்போ எந்த வித்யாசமும் இல்லாம நட்பா பழகுறத பாக்கும்போது எனக்கே ஆசையா இருக்கு, இதெல்லாம் இந்தக்காலத்துல நல்லவிசயமா நான் பாக்குறேன்

சினிமா ஆசை இருக்கா ?

அது இல்லாம எப்படி இருக்கும். இதுவரைக்கும் எங்களை போன் ஸ்க்ரீன்ல பார்த்த நீங்க கூடிய சீக்கிரமே தியேட்டர் ஸ்க்ரீன்லயும் பார்க்கப் போறீங்க. அதர்வா ஹீரோவா நடிக்கிற படத்துல நாங்களும் நடிச்சிருக்கோம். சீக்கிரமே அது ரிலீசாகப்போகுது. அதேமாதிரி நான் கமல் சாருடைய மிகப்பெரிய ரசிகை. இந்த வயசுலயும் 'விக்ரம்'ல அவரோட நடிப்பை பார்த்து மிரண்டுட்டேன். அவர்கூட ஒரு சின்ன கேரக்டர்லயாவது நடிக்கணும் இதுதான் என்னுடைய நீண்டநாள் ஆசை என்கிறார் ராஜாமணி பாட்டி.

ஆண்டவர் கண்ணில்படும்வரை சேர் செய்யவும்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com