கயல் ஆனந்தி செய்த இந்த காரியத்தைப் பார்த்தீர்களா..? | Shocking gestures

'பரியேறும் பெருமாள்' படத்தில் ஆதிக்க சாதிப் பெண்ணாக நடித்திருந்த ஆனந்தி, இப்படி செய்திருப்பது அவர்மீதான மதிப்பை உயர்த்திருக்கிறது. 
kayal anandhi
kayal anandhitimepass

தமிழ் சினிமாவில் அழகான நடிகைகளைப் பட்டியலிட்டால் அதில் முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுபவர்தான் கயல் ஆனந்தி. 26- வயதான கயல் ஆனந்தி, தெலுங்கு சினிமாவிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர்.  'பரியேறும் பெருமாள்', 'கயல்', 'பொறியாளன்', 'விசாரணை', 'சண்டி வீரன்', 'த்ரிஷா இல்லைனா நயன் தாரா' போன்ற பல படங்களில் நடித்தவர். அண்மையில் அவர் நடிப்பில் சாந்தனுவுக்கு ஜோடியாக  'இராவணக் கோட்டம்' என்ற படம் வெள்ளித்திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே இரண்டு வருடங்களுக்கு முன் சினிமா உதவி இயக்குநர் சாக்ரடீஸ் என்பவரைக் கரம்பிடித்து திருமண வாழ்வில் செட்டில் ஆனார் ஆனந்தி.

இந்தத் தம்பதியருக்கு அழகான ஆண்குழந்தை ஒன்றும் உள்ளது. சமீபத்தில் இரண்டாம் ஆண்டு திருமண நாலை விமரிசையாக கொண்டாடியிருக்கிறார் ஆனந்தி. அழகான போட்டோஷூட் ஒன்றையும் வெளியிட்டதோடு,  சமீபத்தில் 'இராவணக் கோட்டம்' படத்தின் பிரஸ் மீட்டில் அவர் சொன்ன தகவல் எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

தன் மகனுக்கு சாதி இல்லாதவன் என்று சான்றிதழ் வாங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறார். 'பரியேறும் பெருமாள்' படத்தில் ஆதிக்க சாதிப்பெண்ணாக நடித்திருந்த ஆனந்தி, இப்படி செய்திருப்பது அவர்மீதான மதிப்பை உயர்த்திருக்கிறது. 

'இதனால சாதி ஒழிஞ்சிடுமான்னு தெரியலை. ஆனால், எங்க கயல் ஆனந்தி பண்ணினது சிறப்பான சம்பவம்!' என்று ஆரவாரம் செய்கிறார்கள் அவர் ரசிகர்கள். 

- சமர்

kayal anandhi
Lovers day : காதலால் இணைந்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் !

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com