Tamil Cinema : Buildup குமார்களின் பீலா சேட்டைகள் - ஒரு லிஸ்ட் !

போக்கிரி படத்துல நமக்கு இருக்கிற ஒரே வருத்தம் இன்ஸ்பெக்டர் கொடுத்த விஜய் – அசின் காதல் டிடெக்டிவ் ஆபரேசன்ல ஒரு ஸ்பாட்லயாவது தலையில இருந்த கொண்டைய வடிவேலு மறைச்சிருக்கலாம்.
Tamil Cinema
Tamil CinemaTimepassonline

’பில்டப் பண்றமோ, பீலா விடுறமோ உலகம் நம்ம உத்துப் பாக்கணும்’னு உலக தத்துவத்தை ஒத்த வரியில சொன்ன வைகைப்புயல் மாதிரி, நம்ம சினிமாவுல ஏகப்பட்ட அடிச்சி விடு, உருட்டு, கப்ஸா, ஓட்டுறதுன்னு ஏகப்பட்ட அடைமொழி இருக்கு. அதாவது, பச்சை தண்ணி குடிச்சிட்டு பல்லு குத்துறது. ஒண்ணும் தெரியாட்டியும் ஆகாயத்தை வளைச்சி அண்டர்வேர்ல வெச்சிக்குவேன்னும், கடலை கடவாயில அடக்கிருவேன்னு இஷ்டத்துக்கு இட்டுக்கட்டி, எதிராளிய பீதியில பேதியாக்குறதுன்னு இப்போ மட்டுமில்ல 60 வருஷத்துக்கு முன்னாடியும் படங்கள் இருந்திருக்கு.

1 . ’தாயை காத்த தனயன்’னு ஒரு படம் எம்.ஜி.ஆர்தான் நாயகன், சரோஜாதேவிதான் நாயகி. ஹீரோ, ஹீரோயின் இருந்தா வில்லன்னு ஒருத்தர் இருந்தே ஆணும்னு சினிமா விதி. யார் எழுதினதுன்னு தெரியல..?. தா.கா.த பட வில்லன் அசோகன். சரோவை ஒன்சைடா லவ் பண்றார். ஹீரோ இருக்கும்போது வில்லன் காதலிக்கிறதை உலகம் ஏத்துக்குமா..? ஏத்துக்காது. அதனால, எப்படியாச்சும் ஹீரோவை பேக்கப் பண்றதுக்கு பிளான் பண்றார். ஒரு திருவிழாவுல எல்லாருடை மூடும் கலை நிகழ்ச்சியில இருக்க, எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் ஒருத்தரை ஒருத்தர் லவ் மூடுல லுக்கு விட்டு, சில்மிஷ சீண்டல்கள்ல இருக்கிறாங்க.

அப்போ நடந்த ஒரு கம்பு சண்டை போட்டியில.. ’யாரும் தன்னை ஜெயிக்க முடியாது’ னும், ’மோத எவண்டா வர்றிங்க..?’ ன்னு வாய் உதார் விடறார் சின்னப்ப தேவர்ங்கிற ஒரு சிலம்பு மாஸ்டர். அப்பதான் எம்.ஜி.ஆர் வேட்டிய மடிச்சிக்கட்டி களத்துல இறங்குவாரு. மாஸ்டர் காதுல எம்.ஜி.ஆர் மேட்டரை முடிச்சிருன்னு அசோகன் சொல்ல, பரபரன்னு நடந்த சண்டையில எம்.ஜி.ஆருக்கே கோப்பை. தொடை தட்டின மாஸ்டரை தாடையில ரெண்டு போட்டு அனுப்புவாரு புரட்சித் தலைவர்.

Tamil Cinema
காணாமல் போன கதாநாயகிகள் - ஒரு லிஸ்ட்

2 . வில்லத்தனம் காட்டுறதா இருந்தாலும், விலா நோக சிரிக்க வைக்கிறதா இருந்தாலும் சாகுற வரைக்கும் நான்ஸ்டாப் ஃபர்பார்மரா இருந்தவர் நம்பியார். ’தூறல் நின்னுப்போச்சு’ ங்கிற படத்துல பாக்யராஜுக்குப் பெரிய மாமனாரா நடிச்சிருக்கிறது முக்கியமில்ல.. அதுல சிலம்பு வாத்தியாரா வர்றதுதான் ஹைலைட் காமெடி. அடிதடி சொல்லிக்கொடுக்கிறதைவிட, ஆல் டைம் பேவரைட்டான ஆட்டுப்பாலை திருடிக் குடிக்கிறதுதான். அதனால, ஃபுல் டைமும் ஆடு தேடி அலைஞ்சிட்டு இருப்பாரு. பத்து கலைகள் சொல்லித் தர்றேனுட்டு, கம்பு சுத்துற ஒத்தக் கலைய மட்டும் அரைகுறையா சொல்லிக்கொடுக்கிறார்னு காண்டான சிஷ்யப் புள்ளைங்க காசு கொடுக்காம இருப்பாங்க.

தனக்கு மேல வித்தை தெரிஞ்ச சிலம்பு வாத்தியார் யாராச்சும் கெடைப்பாங்களான்னு கண்ணுக்கு மேல கை வெச்சி ஈஸ்ட், நார்த், செளவுத்னு நாலா பக்கமும் தேடுன நம்பியாருக்கு அவர் தம்பி பொண்ணு சுலக்சனாவை டாவடிக்க வருவார் பாக்யராஜ். அப்றம், பாக்யராஜ் சிலம்பு வித்தைய சிலாகிச்சி சிஷ்யனா ஏத்துக்கிட்டு, மருமகன் காதலுக்கு தன் வயசுக்கு மீறி ஹெல்ப் பண்ணுவாரு நம்ம பேவரைட் வில்லன் நம்பியார்.

Tamil Cinema
சொந்தப் படம் எடுத்து ’சூனியம்’ வைத்த நடிகர்கள் - ஒரு லிஸ்ட்

3 . துபாய்ல குங்க்பூ, கராத்தேன்னு ஒட்டுமொத்த வித்தையும் கத்துக்கிட்டு வந்த கட்டுக்கடங்காத கராத்தே மாஸ்டர்னு ஊரை ஏமாத்தி, கவுண்டமணி கல்லா கட்டின படம்தான் ’இளவரசன்’. ஒயிட் அன்ட் ஒயிட் டிரஸ்ஸை மாட்டிக்கிட்டு, தமிழ் தெரியாத மலேசியன் மாதிரி புரோட்டாகியா, குருமாகியா, மட்டன்கியான்னு கேட்க, அதை வடிவேல் டிரான்ஸ்லேட் பண்ண, இப்படி பாஷை தெரியாத ஒருத்தன் ஊரைக் காவ காத்துக்கிட்டு காம்பவுண்டு சுவர் மாதிரி இருக்கட்டுமேன்னு ஊர் ஜனம் முடிவு பண்றாங்க.

அதனால, கவுண்டமணிக்கு நேர நேரத்துக்கு சோறு, குழம்பு, சிக்கன், மட்டன், செலவுக்குப் பணம், தங்க இடம் கொடுத்து வெச்சிருக்காங்க. ஆனா, ஒருநாள் கூட யார்ட்டையும் சண்டை போடறதைப் பார்க்காத மக்கள், நல்லா திண்ணுட்டு.. திண்ணுட்டு தூங்கிற கவுண்டமணி மேல காண்டாவுறாங்க. அதனால, ’ஊருக்கு புதுசா வந்த ஹீரோ சரத் கூட சண்டை போட்டு ஜெயிச்சாதான் சோறு’னு சொன்னதும் பயந்து நடுங்கின கவுண்டமணி தான் பிறந்ததுல இருந்தே பிராடுங்கிறதை ஒத்துக்கிட்டு, பிராபர்ட்டிய கழட்டி வெச்சிட்டு ஓடுவாரு.

Tamil Cinema
Tamil Cinema : மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

4 . ஏதோ கிடைக்கிற காசை வெச்சி தெரு முக்குல மளிகை கடை ஆரம்பிக்க ஆசைப்படுறது நியாயம். ஆனா, கைல ஒத்த ரூபா இல்லாம ஜவுளி கடை கூட இல்லை. ஜவுளிக் கடல் ஆரம்பிக்க நெனைச்ச சரத்குமார் எவ்ளோ பெரிய ரிஸ்க்குல மாட்டிக்கிட்டார்னு படம் தொடங்கின கொஞ்ச நேரத்துலதான் தெரிஞ்சது.

கராத்தே காம்பிடேஷன்ல முதல் பரிசு மூணு லட்சம் தர்றாங்கன்னுட்டு, புரோட்டா மாஸ்டரா இருந்த சரத், கராத்தே மாஸ்டர்னு தனக்கு தானே பில்டப் கொடுத்துக்கிட்டு களத்துல இறங்கின படம்தான் ’திவான்’. அந்த மூணு லட்சத்துக்கு ஆசைப்பட்டது கூட பரவாயில்லை. போட்டிக்கு தயாராகிறேன்கிற பேர்ல, முட்டி வரைக்கும் டவுசர் போட்டுகிட்டு, பச்சை முட்டைய குடிச்சிட்டு, பத்தடி தூரம் ஓடிட்டு வர்றது.

நெஞ்ச ஏழு இஞ்ச் உயரத்துக்கு நிமிர்த்தி விரிச்சிக் காட்டுறது, லெப்ட், ரைட்டுன்னு குஸ்தி போடுற மாதிரி குத்திக் காட்டுறதுன்னு அளப்பரைல அவார்டு வாங்கின மாதிரி அட்ராசிட்டி பண்ணிருப்பாரு. நண்பனா கூட இருந்த நம்ம வடிவேலு ’வேணாம்.. வேணாம்’னு எவ்ளவோ கத்திக் கதறினப்பவும், கராத்தே கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்டு, கராத்தே தொழில் கசடற கற்ற மாஸ்டர் குத்துன குத்துல, புரோட்டா மாஸ்டர் நாலா பக்கமும் பறந்து போய் விழறதப் பார்த்தா பாவமாத்தான் இருந்திச்சு. என்ன பண்ண..? சரத்தோட தலைவிதிய அப்போ யாராலயும் மாத்த முடியலை.

Tamil Cinema
Nagaland : கலாய் மன்னன் Temjen Imna Along இன் ரகளையான tweetகள் - ஒரு லிஸ்ட் !

5 . இந்தி சினிமாவுல மட்டுமல்ல, இங்கிலீஸ், கொரியா, கொங்கனி, குஜராத்தின்னு எத்தனை மொழி படங்கள் வந்தாலும் ’பீலா’ விடுறதுலயும், ’பில்டப்’ பண்றதுலயும், சிக்குவோம்னு தெரிஞ்சா, சிங்கம் மேல ஏறி கூட சவாரி பண்றதுலயும் ஒரு மாவீரன் நம்ப தமிழ் சினிமாவுல இருக்கார்னா அது வடிவேல்தான். வாயில குத்து வாங்கி ரத்தம் வந்தாலும், சத்தம் வராம சாதிக்கணும்னு நெனைக்கிறவர். ’கோவில்’ படத்துல சிலம்பு மாஸ்டர் புல்லட் பாண்டி.

ஒரு சிலம்பம் காம்படேஷன்ல 13 குச்சிய ஒட்டவெச்சி, ஒரிஜினர் சிலம்பம் ஆட்டக்காரர்கிட்ட அடிவாங்கினாலும், ’வெற்றி..வெற்றி’ னு முக்காடு போட்டுக்கிட்டு கப்புல பெயர் எழுதறதா இருக்கட்டம், ’போக்கிரி’ படத்துல ’ட்ரங்கன் மங்கி ஸ்டல்’னு உடைக்கக் கொடுத்த ஒரு செட் பிராபர்ட்டியையும் உடைக்காம ’பில்டப்’ மட்டும் பண்றதா இருக்கட்டும், ஹீரோயின் அசின்கிட்ட அடிவாங்கி பெருமைபடுறதா இருக்கட்டும், நம்ம அல்டிமேட் ’பீலா’ மன்னன், மீம்ஸ் உலகத்தை வாழ வைக்கிற மாம்ஸ், வாட்ஸப் ஸ்டேடஸ்சின் வைரல் வைகைப் புயல்தான். நமக்கு இருக்கிற ஒரே வருத்தம் இன்ஸ்பெக்டர் கொடுத்த விஜய் – அசின் காதல் டிடெக்டிவ் ஆபரேசன்ல ஒரு ஸ்பாட்லயாவது தலையில இருந்த கொண்டைய மறைச்சிருக்கலாம்.

- எம்.ஜி.கன்னியப்பன்.

Tamil Cinema
சொந்தப் படம் எடுத்து ’சூனியம்’ வைத்த நடிகர்கள் - ஒரு லிஸ்ட்

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com