காணாமல் போன கதாநாயகிகள் - ஒரு லிஸ்ட்

ஒரு சில படங்கள்ல நடிச்சதும் வெந்து தணிந்தது காடு இந்தப்படத்தோட ஓடுன்னு காணாமப் போன ஹீரோயின்கள கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பார்ப்போமா.
கதாநாயகிகள்
கதாநாயகிகள்டைம்பாஸ்

நயன்தாரா, திரிஷா இவங்கல்லாம் பல வருசமா ஹீரோயினா இருக்கிற இதே தமிழ் சினிமாலதான் ஒரு சில படங்கள்ல நடிச்சதும் வெந்து தணிந்தது காடு இந்தப்படத்தோட ஓடுன்னு காணாமப் போன ஹீரோயின்களும் இருக்காங்க அவங்கள கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பார்ப்போமா.

ஜெயசீல் கோஸ்

இவங்க 'பெண்ணின் மனதை தொட்டு', 'சாமுராய்' படங்கள்ல நடிச்சாங்க. அந்த ரெண்டு படத்துலயும் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்டாவே வருவாங்க.

ஜெயசீல் கோஸ்
ஜெயசீல் கோஸ்டைம்பாஸ்

குறிப்பா இவங்களோட "கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா" பாட்டு இப்போ வரைக்கும் நிறைய பேருக்கு ஃபேவரைட்டா இருக்கு. தமிழ்ல பெருசா ஒரு ரவுண்டு வருவாங்கன்னு எதிர்பார்த்தா அவங்க இந்தி, ஒடியா, பெங்காலினு ஒரேடியா நார்த் பக்கம் போய் செட்டிலாகிட்டாங்க.

மானு

இவங்க அஜித் கூட 'காதல் மன்னன்'ல நடிச்சாங்க அஜித் படங்கள்லயே ரொம்ப அழகான ஹீரோயின்னா அவங்க மானுதான். யார் சொன்னதுன்னு கேட்கிறீங்களா? நான் தான்.

இப்பவும் தல ரசிகர்களுக்கு சாரிப்பா AK ரசிகர்களுக்கு திலோத்தமானா உசுரு.
கதாநாயகிகள்
தமிழ் சினிமா க்ரூப் டான்சர்ஸ் - ஹெவியா லைக் பண்ண வச்சவங்க லிஸ்ட்
மானு
மானுடைம்பாஸ்

'காதல் மன்னனுக்கு' அப்பறம் மானுவை ஆளையே காணோம்னு தேடிட்டு இருந்தப்போ 2014 ஜெயம் ராஜா டைரக்ஷன்ல 'என்ன சத்தம் இந்த நேரம்'ல நடிச்சாங்க. ஆனா சத்தமே இல்லாம படம் தியேட்டரை விட்டு ஓடிடுச்சு. இப்போதைக்கு சினிமாவை விட்டு மொத்தமா ஒதுங்கி டான்ஸ் ஸ்கூல் வெச்சு நடத்துறதா தகவல்.

அமோகா

இவங்க கல்கத்தாவில் பிறந்த ரசகுல்லா 2003ல 'ஜேஜே' படத்துல மாதவனுக்கு ஜோடியா நடிச்சாங்க. 'அந்த டைம்ல நம்ம ஊரு 90ஸ் கிட்ஸ் பசங்க இவங்க மேல ஒரு கிறுக்கா திரிஞ்சாங்க.

அமோகானு பேர் இருக்கிறதால அமோகமா வருவாங்கனு பார்த்தா இவங்களும் ஹிந்திப்பக்கம் போய்ட்டாங்க. 7 வருஷம் கழிச்சு 'கச்சேரி ஆரம்பம்' படத்துல ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினவங்க மறுபடியும் தலைமறைவு ஆகிட்டாங்க.

அமோகா
அமோகாடைம்பாஸ்
கதாநாயகிகள்
தமிழ் சினிமா மட்டும் இல்லன்னா?

ஷஹின் கான்

மும்பையைச் சேர்ந்தவங்க. 'யூத்' படத்துல விஜய்க்கு ஜோடியா நடிச்சிருப்பாங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம்னு மூணு மொழியிலயும் மொத்தமா 4 படம்தான் நடிச்சிருக்காங்க.

கவுண்டிங் கம்மியா இருந்தாலும் நல்ல நல்ல கேரக்டர்தான் பண்ணிருக்காங்க. "சக்கரை நிலவே" பாட்டு மூலமா இப்பவும் விஜய் ரசிகர்களுக்கு பிடிச்ச ஒரு ஹீரோயினா இருக்காங்க ஷஹின் கான்.

ரக் ஷிதா

இவங்க 2002ல சிம்புகூட 'தம்' படத்துலயும் 2004 விஜய்கூட 'மதுர' படத்துலயும் நடிச்சிருக்காங்க ரெண்டு படத்துலயும் இவங்களோட கிளாமர் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும்.

குறிப்பா "சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்" சாங்க சிம்புக்காக பார்த்தவங்களை விட ரக் ஷிதாவுக்காக பார்த்தவங்கதான் அதிகம். (அதுக்கு ஏன்யா என்னைப் பார்க்கிறீங்க, நான் பொதுவாச் சொன்னேன்)

ரக் ஷிதா
ரக் ஷிதாடைம்பாஸ்
கதாநாயகிகள்
தமிழ் சினிமா செய்வது எப்படி? - செஃப் ஹரி

சமீபமா கண்டபடி வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறியிருக்காங்க ரக் ஷிதா.

ப்ரியங்கா திரிவேதி

இவங்க 'ராஜ்ஜியம்', 'ராஜா', 'காதல் சடுகுடு' படங்கள்ல நடிச்சாங்க. கடைசியா அருண் விஜய்யோடு 'ஜனனம்' படத்துல நடிக்கும்போது திடீர்னு ஆளை காணோம்! ஜனனம் டீம் வலைவீசி தேடிப்பார்த்தும் கிடைக்கல. அப்பறம் கன்னட ஹீரோ உபேந்திராவை ரகசியமா திருமணம் பண்ணி செட்டிலான விஷயம் தெரியவந்திருக்கு.

ப்ரியங்கா திரிவேதி
ப்ரியங்கா திரிவேதிடைம்பாஸ்
கதாநாயகிகள்
தமிழ் சினிமா கத்துக்கொடுத்த இங்கிலீஷ் - ஒரு லிஸ்ட்

படம் பாதியிலேயே நிக்கிது வந்து முடிச்சு கொடுங்கன்னு ஜனனம் டீம் எவ்வளவோ பேசிப்பார்த்தும் வரவே இல்ல. அப்பறம் அவங்க இல்லாமலே பேட்ஜ் வொர்க் பண்ணி படத்தை ரிலீஸ் பண்ண, ஜனனம் மரணம் ஆகிடுச்சு.

இன்னும் 'ஹலோ' படத்தில் நடிச்ச பிரீத்தி, 'ஸ்நேகிதியே' ஷர்பானி முகர்ஜி 'குணா' ரோஷினினு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com