Mansoor Ali Khan : பலாப்பழம் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய மன்சூர் அலிகான் !

கேக்கிற்கு பதிலாக பலாப்பழத்தை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். ஒவ்வொரு சுளையாக வெட்டி, சுற்றி இருப்பவர்களுக்கு கேக் ஊட்டுவது போல ஊட்டியுள்ளார்.
Mansoor Ali Khan
Mansoor Ali Khantimepass

வில்லன், காமெடி, ஹீரோ, குணச்சித்தரம் என எல்லா கதாப்பாத்திரத்திலும் புகுந்து விளையாடக் கூடியவர் நடிகர் மன்சூர் அலிகான். இவரின் ஃபேன் பாயான இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வருகைக்கு பிறகு, மன்சூர் அலிகானை இளைஞர்கள் ஒரு Vibe Material ஆக மாற்றிவிட்டார்கள் இன்றைய இளசுகள்.

திரைப்படங்களில் மட்டுமல்ல, நேர்காணல்கள், தேர்தல் பரப்புரைகள் என தான் அவதரிக்கும் எல்லா இடங்களிலும், வித்தியாசமான செயல்களால் ட்ரெண்ட் ஆகிவிடுவார்.

இந்நிலையில், ஜே.ஜெயக்குமாரின் இயக்கத்தில் தான் கதாநாயகனாக நடித்து வரும் 'சரக்கு' என்கிற படத்தின் படப்பிடிப்பில், தன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் மன்சூர் அலிகான்.

அப்போது, கேக்கிற்கு பதிலாக பலாப்பழத்தை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். ஒவ்வொரு சுளையாக வெட்டி, சுற்றி இருப்பவர்களுக்கு கேக் ஊட்டுவது போல ஊட்டியுள்ளார்.

"தன் பிறந்தநாளை கண்ட கண்ட ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி, விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த உண்மையான 'தமிழ் தேசிய மாடல்' மன்சூர் அலிகான்!" என்று சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மன்சூர் அலிகான் தானே தயாரிக்கும் இந்த 'சரக்கு' திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக வலினா நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா போன்ற பலர் நடிக்கிறார்கள்.

Mansoor Ali Khan
'விஜயகாந்த், அர்ஜுன், சத்யராஜ்..!' - இது லோகேஷ் கனகராஜின் 90's VERSE

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com