Rewind 2022: Reels-ல் Trend ஆன சினிமா வசனங்கள்

சாப்பிடற வீடியோக்கும், பாத்ரூம் கழுவுற வீடியோக்கும், பொண்டாட்டி கூட சண்டை போட்டு ரிலீஸ் பண்ற வீடியோன்னு எல்லா ரீல்ஸ்க்கும் இதை வெச்சு செஞ்சுட்டாங்க.
2022
2022டைம்பாஸ்

2022 இல் தமிழ் படங்களில் வந்த டயலாக்குகள் பல டிக் டாக் மற்றும் மீம்ஸ்களில் ரொம்பவே வைரலானது. அதுலயும் சில டயலாக்ஸ் நம்ம மனநிலைக்கு ஏத்த மாதிரி எப்பவுமே மூட்சேஞ்சரா டாப் லிஸ்ட்ல இருந்துச்சு. அதைப் பார்க்கலாமா?

விக்ரம்- லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல கமல்ஹாசன் நடிச்ச படம் தான் விக்ரம். சீரியஸான சண்டை காட்சிகளுக்கு நடுவுல வர டயலாக் தான் "இந்த மாதிரி நேரத்துல வீரனுங்க எல்லாம் என்ன சொல்லுவாங்க தெரியுமா? பாத்துக்கலாம்''.

ரொம்ப ஃபேமஸான படத்தோட மிக முக்கியமான இந்த டயலாக் கோபத்தோடையும், அந்த சீனுக்கு ஏத்த மாதிரியும் இருக்கும். ஆனா, இந்த டையலாக்க வச்சு நம்ம ரீல்ஸ் மன்னர்கள் பண்ண அட்டகாசம் இருக்கே தாங்கல முடியில.

2022
Happy New Year: 'Whatsapp status பரிதாபங்கள்' - Memes

சாப்பிடற வீடியோக்கும், பாத்ரூம் கழுவுற வீடியோக்கும், பொண்டாட்டி கூட சண்டை போட்டு ரிலீஸ் பண்ற வீடியோன்னு எல்லா ரீல்ஸ்க்கும் இதை வெச்சு செஞ்சுட்டாங்க. இந்த டயலாக்கை கேட்டாலே உலகநாயகன் பேசறது ஞாபகம் வருதோ இல்லையோ ரீல்ஸ் பேர்ல இவங்க பண்ற அட்டூழியங்கள் எல்லாம் கண்டிப்பா ஞாபகம் வரும்.

டான்-சிபி சக்ரவர்த்தி இயக்கத்துல சிவகார்த்திகேயன் சூரியோட காம்போல வந்த படம் தான் டான் படம். இந்த படத்தில், "இடக்கா ஓ அமச்சா" (இதுக்கா உன்ன அமுச்ச) அப்படின்ற தமிழ் டயலாக்கை கொரியன் ஸ்டைல்ல பேசி இருப்பாங்க. இந்த டயலாக்கை அந்த படத்திலேயே ஃபன்னாதான் சொல்லியிருப்பாங்க. இதை ஃபன் பண்ணுறோம்னு சொல்லிட்டு இந்த டயலாக்க திரும்ப திரும்ப ரீல்ஸ் பண்ணி தேஞ்ச ரீலையே திரும்ப திரும்ப தேய வெச்சிட்டாங்க.

பொன்னியின் செல்வன் - மணிரத்னம் இயக்கத்துல 2022ல தமிழ் நட்சத்திரங்கள் பல பேர் நடிச்ச படம்தான் பொன்னியின் செல்வன் பாகம் 1. இந்த படத்திலேயே ரொம்ப ஃபேமஸ் டயலாக் விக்ரம் பேசின "அவளை மறக்கத்தான் என்னை மறக்கத்தான்" டயலாக். படத்துல இந்த டயலாக் காதல் டயலாக்காதான் இருக்கும்.

2022
New Year's Resolution: அரசியல்வாதிகளின் கலகலப்பான சபதம் லிஸ்ட்

இந்த டயலாக்க நிறைய யூடியூப் பேஜ்ல வெச்சு செஞ்சுட்டாங்க. இதேமாதிரி அந்த படத்துல இன்னொரு முக்கியமான கேரக்டர் சொன்ன டயலாக்தான் வந்திய தேவன் சொன்ன டயலாக். "உயிர் உங்களுடையது தேவி"-ன்ற டயலாக். என்னதான் இந்த டயலாக் காதல் டயலாக இருந்தாலும், அந்த படத்துல வந்தியத்தேவன் இந்த டயலாக் சொல்லும்போது நமக்கே இது ஒரு காமெடி டயலாக தான் தெரியும்.

இந்த காதல் டயலாக்க வந்தியத்தேவன் குந்தவைக்கிட்ட ஒரு முறை தான் சொல்லுவாரு. ஆனா இந்த டயலாக்க பிரியாணி பிரியர்கள் பிரியாணிக்கு சொன்னதுதா அதிகம். இந்த டயலாக்க விட சுவாரசியமான ஒன்னு அந்த படத்துல வர குந்தவை, நந்தினி மாதிரி மேக்கப் போட்டுட்டு சுத்துது தான்.

லவ் டுடே - சதீஷ் ரங்கநாதன் இயக்கத்தில் வந்த படம் தான் லவ் டுடே. இந்தப் படம் ஒரு காதல் படமாகவும் இப்ப லவ் பத்தி சொல்ற படமாகவும் இருந்தது. இந்த படத்துல வர ஃபேமஸான டயலாக் "சொல்லுங்க மாமா குட்டி" டயலாக் தான். இந்த டயலாக்க படத்துல ஹீரோயின் சொல்றத விட ரொம்ப அழகாவே ரீல்ஸ்ல குட்டிஸ் நிறைய பேர் சொல்லிட்டாங்க

ஒவ்வொரு வருஷமும் நிறைய தமிழ் படங்களும் தமிழ் படங்களில் நிறைய ஃபேமஸான டயலாக்ஸ் வந்துகிட்டுதான் இருக்கு. இந்த மாதிரி ஃபேமஸான டயலாக்ஸ்ஸ இன்னும் ஃபேமஸாக்குறதுதான் யூடியூப் ட்ரோல்ஸ், கப்புல்கோல்ட்ஸ், ரீல்ஸ் அண்ட் மீம்ஸ் பண்றவங்க வேலையே. டயலாக்ஸ் எல்லாம் மூவிஸ்லையே ஃபேமஸா இருந்தாலும் இந்த டயலாக்ஸ் எல்லாமே இன்னும் வேகமாக ஃபேமஸாக காரணம் இந்த ட்ரோல்ஸ் அண்ட் மீம்ஸ் தான்.

2022
Happy New Year: 'Whatsapp status பரிதாபங்கள்' - Memes

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com