உலக நாயகன் மட்டுமல்ல 'முதல்' நாயகனும்தான்

27வது வயதில் நூறாவது படம், பல விருதுகள், சாதனைகளை நிகழ்த்திக்காட்டியிருக்கும் கமல் ஹாசன், புதுமைகளையும் இந்திய சினிமாவில் புகுத்தியவர். அது என்னென்னனு ஒரு சின்ன லிஸ்ட்.
உலக நாயகன் மட்டுமல்ல 'முதல்' நாயகனும்தான்

சினிமாவில் சம்பாதித்து, சினிமாவிலே செலவழிக்கும் ஒரே நடிகனர் கமல்ஹாசன். 27வது வயதில் நூறாவது படம், பல விருதுகள், சாதனைகளை நிகழ்த்திக்காட்டியிருக்கும் இவர், புதுமைகளையும் இந்திய சினிமாவில் புகுத்தியவர். அது என்னென்னனு ஒரு சின்ன லிஸ்ட்.

01. 1985ல் வெளியான மங்கம்மா சபதம் படத்தில், ஒரு பாடலில், ராஸ்டர் அல்காரிதம் (raster algorithm) என்கிற கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் முறையை அறிமுகப்படித்தியிருப்பார். கமல், மாதவி நடனமாடும் பாடல்!

02. ஒரிஜினல் கம்ப்யூட்டரைத் திரையில் காட்டியது 1986ல் வெளியான விக்ரம் படத்தில் தான். அதற்காகவே பிரத்யோகமாக ஆப்பிள் கம்ப்யூட்டர் படத்திற்காக வாங்கப்பட்டது.

விக்ரம் போஸ்டர்
விக்ரம் போஸ்டர்

03. லேப்டாப் என்ற ஒன்றை திரையில் காட்டியது, 1991ல் வெளியான மைக்கேல் மதன காமராஜர் படத்தில் தான்.

04. டால்பி சவுண்டை அறிமுகப்படுத்திய படம் குருதிப்புணல் (1995)

05. ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி (1994).

06. டிஜிட்டல் கேமிராவை திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியது மும்பை எக்ஸ்பிரஸ் (2005)

07. ஆசியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவை, சண்டைக்காட்சிக்குப் பயன்படுத்தியது ஆளவந்தான் (2001) திரைப்படம்.

08. ஹேராம், விருமாண்டி படங்களில் தான் முதன்முறையாக லைவ் சவுண்டுடன் படமெடுக்கப்பட்டது.

09. ஏரோ 3டி டெக்னாலஜியை அறிமுகமான படம் விஸ்வரூபம் (2013).

10. குணா (1991) படத்தில்தான் ஸ்டெடி கேமிரா தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹே ராம் கமல் ஹாசன்
ஹே ராம் கமல் ஹாசன்

11. கமலின் 100வது படமான ராஜபார்வையில் திரைப்படங்களில் அனிமேஷன் செய்வது கொண்டுவரப்பட்டது.

12. தமிழில் மார்பிங் டெக்னாலஜியை கொண்டுவந்த படம் மைக்கேல் மதன காமராஜர்.

13. செயற்கை ஒப்பனை (prosthetic makeup) இந்தியன் படம் மூலம் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்தியவர். டெக்னாலஜி மட்டுமில்ல பாஸ், அதற்கான ஹாலிவுட் டெக்னிசியன் மைக்கேல் தமிழுக்கு அழைத்துவந்தார்.

-பி.எஸ்.முத்து

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com