Tamil Cinema : அசத்தின ஹீரோக்களும் ’ஊத்தின’ நகல்களும் !

நளினிகாந்துன்னு ஒருத்தர். ஸ்டைல், பார்க்கிறது, சிரிக்கிறதுன்னு எல்லாமே ரஜினிகாந்த் மாதிரியே இருந்திச்சி. இவர் வந்ததால ரஜினி பொழப்பு என்னாகும்னு தெரியலையேன்னு சூப்பர் ஸ்டார் ரசிகர்களே கவலைப்பட்டாங்க.
Tamil Cinema
Tamil Cinemaடைம்பாஸ்

ஹிட்டான நடிகர்களைப் பார்த்து ’அவங்ளை மாதிரியே இருக்க, நீ சினிமாவுக்குப் போனா ரவுண்டு, வட்டம், சதுரமா வருவே’ ன்னு உசுப்பேத்தி பஸ்சும், ரயிலும் ஏத்திவிட்ட சொந்தபந்தங்களால, சென்னைக்கு வந்து செத்து சுண்ணாம்பாகி திரும்ப ஊருக்கும் போக முடியாம, சினிமாவுலயும் குப்பை கொட்ட முடியாம எந்த ஹீரோவுக்கு மாற்றுன்னு சொன்னாங்களோ அதே ஹீரோ படத்துல கும்பலோடு கும்பலா நிக்கிற பல நகல் நடிகர்கள் பத்திப் பாத்துருவோம்.

நடிக்க வர்றது தப்பில்ல ஆனா, அவரை மாதிரியே இருக்கோம்ங்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் நடிக்க வர்றதுதான் தப்பு.

Tamil Cinema
சொந்தப் படம் எடுத்து ’சூனியம்’ வைத்த நடிகர்கள் - ஒரு லிஸ்ட்

1 . எம்.ஜி.ஆர் ஒரு நாளைக்கு ரெண்டு மூணு சூட்டிங்ல பிஸியா நடிச்சிட்டு இருந்த காலம். நடிச்ச எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மக்கள் திலகம், எங்கள் தங்கம், பொன்மனச்செம்மல்னு மக்கள் கொண்டாடின காலமும் அதுதான்.. எம்.ஜி.ஆருக்கு பெருசா நடிக்க வராட்டியும் அவர் முகம் மக்களுக்குப் புடிச்சுப்போச்சு.

அவரை நடிகரா மட்டும் பாக்காம தன் குடும்பத்துல ஒருத்தரா பார்த்தாங்க. அப்பதான் அவருக்கு ’டப்’ கொடுக்க கேமரா முன்னாடி ’டமால்’ னு குதிச்சவர்தான் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து.

எம்.ஜி.ஆரின் அதே சுருள் கிராப்பு, அவரை மாதிரியே கை மடிச்சுவிட்டு ஹாம்ஸ் காட்டுற சட்டை, லேசா லிப்ஸ்டிக்கு ஓரளவுக்கு எம்.ஜி.ஆரோட சாயலை மேக்கப்ல கொண்டுவந்து ’பூக்காரி’, ’பிள்ளையோ பிள்ளை’, ’சமையல்காரன்’னு சில நடிச்சாலும் மக்கள் இந்த ஆளு யாருய்யா கோமாளின்னு முகம் சுழிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அப்பதான் தெரிஞ்சுது எம்.ஜி.ஆருக்கு எதிரா மு.க.முத்துவை களமிறக்கின கலைஞரோட மொத்த உழைப்பும் வீணா போச்சுன்னு. அவர் நடிச்சதுல ஒரு படம் ’அணையா விளக்கு.’ அது அன்னையோட அணைஞ்சதுதான் இன்னைக்கு வரைக்கும் எரியவே இல்லை.

Tamil Cinema
காணாமல் போன கதாநாயகிகள் - ஒரு லிஸ்ட்

2 . எம்.ஜி.ஆருக்கே மாற்று வரும்போது ரஜினிக்கு வரமாட்டாங்களா என்ன..?

அப்படிதான் ஃபுல் ஃபோர்ஸ்சுல நளினிகாந்துன்னு ஒருத்தர். ரஜினி மாதிரியே கை ஸ்டைல், ஹேர் ஸ்டைல் பார்க்கிறது, சிரிக்கிறதுன்னு எல்லாமே ரஜினிகாந்த் மாதிரியே இருந்திச்சி. அச்சச்சோ… இவர் வந்ததால இனிமே ரஜினி பொழப்பு என்னாகும்னு தெரியலையேன்னு சூப்பர் ஸ்டார் ரசிகர்களே கன்னத்துல கைய வெச்சிகிட்டு கவலைப்பட்டாங்கன்னா பாத்துக்கங்க.

ஒவ்வொரு சினிமா ஆபீஸ் கதவையும் ரஜினிகாந்த் மாதிரியே நகல் நளினிகாந்த் ஸ்டைலா கதவை கால்ல எத்திவிட்டு உள்ளே நுழைஞ்சி வாய்ப்பு கேட்க, அங்க இருந்த புரொடியூசரும், டைரக்டரும் இவரைப் மேலும் கீழுமா பார்த்துட்டு ’அடுத்த வாரம் வந்துரு பாரின் மாப்பிள்ளையா ஒரு சீன் இருக்கு நடி’ ன்னு சொல்லி அனுப்பியிருக்காங்க. சில புரொடியூர்கள்லாம் நளினிகாந்துன்னதும் நளினி பொண்ணாவும், காந்து அப்பாவா இருக்கும்னு ஆசையா கூப்ட்டு நேர்ல பார்த்து நொந்த சம்பவமெல்லாம் நடந்திருக்கு.

Tamil Cinema
தமிழ் சினிமா க்ரூப் டான்சர்ஸ் - ஹெவியா லைக் பண்ண வச்சவங்க லிஸ்ட்

3 . 1991 - ல புரட்சிக்கலைஞர் விஜய்காந்தோட மொத்த பட வாய்ப்பைப் பிடிங்கிட்டு அவரை மறுபடியும் அரிசி மில்லை பார்த்துக்க மதுரைக்கே கிளப்பிவிடுற மனநிலையோட சேலத்துலேர்ந்து பஸ் ஏறி வந்தவர்தான் நடிகர் சேலம் சரவணன். ’யோவ் இங்க பாருய்யா அசல் விஜயகாந்து மாதிரியே இருக்காரு’ ன்னு மக்களும் ஆச்சர்யப்பட்டாங்க. அப்போ பீக்குல இருந்த விஜயகாந்த் நிறைய புரொடியூசர்களுக்கு டேட் கொடுக்க முடியாத நேர நெருக்கடியான காலகட்டம்.

அப்படி கமிட் பண்ண முடியாம பல தயாரிப்பாளர்கள் காண்டுல இருந்தப்பதான் திருப்பதில வாங்கினதான் திருப்பதி லட்டா திண்டுகல்லுல வங்கினா லட்டு இல்லையான்னு விஜய்காந்த் கால்ஷீட் கிடைக்காத ஒரு சில தயாரிப்பாளர்கள் சரவணனை அணுகி, ’சம்பளமெல்லாம் கேக்காத உன்னை ஹீரோ ஆக்குறேன்’னு முதல்ல ஆரம்பிச்ச படம்தான் ’வைதேகி வந்தாச்சு’ அதுக்கப்புறம் இன்னும் சில படங்கள்ல ஹீரோவா நடிச்சார். அதுக்கப்புறம் பல வருஷமா எங்க இருக்கார்னு தெரியாம.. இப்போ சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நடிச்சிட்டு இருக்கார். இவர் வரவால விஜயகாந்த் பட வாய்ப்பு சின்ன குண்டுமணி அளவுக்கு கூட குறையல.

Tamil Cinema
'ஆகா.. நமக்கு வயசாகிடுச்சு போலயே' - அறிகுறிகள் ஒரு லிஸ்ட்

4 . ’ஊமைக்குயில்’, ’சம்சாரமே சரணம்’, மாமனுக்கு நல்ல மனசு’. இந்த சினிமா படத்தோட பெயர்கள் எல்லாம் ஞாபகத்துல இருக்கா..? நடிகர் பாக்யராஜை ஜெராக்ஸ் மிஷின்ல படுக்க வெச்சி ஒரு கலர் ஜெராக்ஸ் பிரிண்ட் எடுத்தா எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஜெராக்ஸா பாக்யராஜுக்கு ஜெர்க் கொடுக்க வந்தவர்தான் யோகராஜ்னு ஒரு நடிகர்.

நண்பர்கள் சேர்ந்து ஒருத்தனை கலாய்க்க ஆரம்பிச்சாங்கன்னா அவன்கிட்ட ’அவரை மாதிரியே இருக்க, இவரை மாதிரியே இருக்க நடிக்கப்போ’ ன்னு இடத்தை காலி பண்ண வைக்கிற வேலையத்தான் பண்ணுவாங்க. அப்படி பாக்யராஜுக்கு போட்டியா ஆக்டிங் களத்துல ஆஜர் ஆனவர்தான் இந்த யோகராஜ்.

கடைவீதிகள்ல பெரிய துணிக்கடைகள் மூடியிருக்கும்போது அதோட வாசலுக்கு முன்னாடி சின்ன கடைங்க ஜாக்கெட் பிட் விற்கிற மாதிரி, பாக்யராஜ் படங்கள் வர லேட்டான சமயங்கள்ல கிடுகிடுன்னு நாலஞ்சு படத்துல நடிச்சி ரிலீஸ் பண்ணினவர்தான் யோகராஜ். அப்புறம் தொடர்ந்து பாக்யராஜ் படங்கள் வெளிவரவே யோகராஜ் வெக்ஸாகி விக்கையும், மேக்கப் கிட்டையும் இறக்கி கீழ வெச்சிட்டுப்போனவர்தான் இன்னைக்கு வரைக்கும் எங்க இருக்கார்னே தெரியலை.

5 . நடிகர் சத்யராஜ் ரெஸ்ட் இல்லாம நடிச்சுகிட்டு இருந்த காலகட்டம். இப்பவும் அதே மாதிரிதான் நடிச்சிட்டு இருக்கார்ங்கிறது வேற விஷயம். அந்த சமயத்துல அசல் சத்யராஜ் மாதிரியே கோவையிலேர்ந்து கோவை எக்ஸ்பிரஸ்ல வந்து இறங்கினவர்தான் சத்யன். அண்ணன், சித்தப்பா, மாப்பிள்ளைத் தோழன், அக்கா கணவர்னு இல்லாம ஸ்ரெய்ட்டா ஹீரோவா ஆனவர்.

ஹீரோவா நடிச்ச ஒரே படம் ’இளையவன்’. அப்பா புரொடியூசரா இருந்தா யார் வேணாலும் ஹீரோ ஆகலாம்ங்கிறதுக்கு இவர்தான் முன்னோடியா இருந்தவர். அந்த படம் ரிலீஸ் ஆன பின்னாடிதான் நமக்குள்ள இருக்கிறது ஹீரோ மெட்டீரியல் இல்ல. காமெடி பீஸ்ங்கிற உண்மை தெரிய வந்திருக்கு. அதுக்கப்புறம் ஹீரோவா நடின்னு யார் அடிச்சு கேட்டாலும் முடியாதுன்னு சொல்றதுல முடிவா இருந்திருக்கார்.

இப்போ எப்பவாச்சும் காலேஜ் பிரெண்ட், ஹீரோ தோழன், குடிகார புருஷனா படங்கள்ல நடிச்சிட்டு இருக்கார். அதே ரூட்டுல போனா சத்யராஜுக்கு நல்லதோ இல்லையோ சத்யனுக்கு நல்லது.

- எம்.ஜி.கன்னியப்பன்.

Tamil Cinema
மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com