SRK : Jawan படத்தைப் பார்க்க 10 காரணங்கள் ! | Atlee

போலீஸ், கடத்தல்காரன் என பல கெட்டப்புகளில் ஷாருக் கான் வருகிறார். மேலும், 1980களின் வெளியான கமலின் ஒரு கைதியின் டைரி படத்தின் தாக்கமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
Jawan
Jawan timepass

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது . அடுத்த பெரிய பாலிவுட் பிளாக்பஸ்டர் ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படம் ஜவான். இப்படத்தை பார்க்க 10 காரணங்கள்.,

1 . இயக்குனர் மற்றும் எழுத்தாளர் : படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனரான அட்லி பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகமானதில் இருந்தே தமிழ் சினிமாவில் வலுவான சாதனை படைத்தவர். அவர் எடுத்த நான்கு படங்களும் பரவலாக மக்களிடையே பாராட்டு பெற்றன. நடிகர் விஜய் உடன் இணைந்து அடுத்து அடுத்து மூன்று திரைப்படங்களான பிகில் (2019), மெர்சல் (2017) மற்றும் தெறி (2016) ஆகியவை அட்லீக்கு பெரும் வெற்றியை கொடுத்தது .

அட்லீ நெட்ஃபிக்ஸ் சூப்பர்நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் படமான அந்தகாரம் (2020) படத்தையும் தயாரித்தார். அதுவும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

2. புதிய தோற்றம் : ஷாருக்கானின் மொட்டை மண்டை தோற்றம் மக்களிடையே பெரும் வரவேற்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

3 . அடுத்த அடுத்த வெற்றி படங்கள் : இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது பதான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஷாருக்கான் ரசிகர்களும் பதான் ஏற்படுத்திய தாக்கத்தை தொடர்ந்து இப்படத்தை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Jawan
சினிமா கிசுகிசு : 'யோக' நடிகரின் அட்டூழியங்கள் தெரியுமா?

4 . கதை : ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ், கடத்தல்காரன் என பல கெட்டப்புகளில் ஷாருக் கான் வருகிறார். மேலும், 1980களின் வெளியான கமலின் ஒரு கைதியின் டைரி படத்தின் தாக்கமும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஷாருக்கான், தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

5 . பிரபல நடிகைகள் : பாலிவுட் நடிகை சன்யா மல்ஹோத்ரா ஒரு முக்கிய துணை வேடத்தில் நடித்தாலும், அனைவரின் பார்வையும் முன்னணி நடிகையான நயன்தாரா மீதுதான் இருக்கிறது. இப்படத்தில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

பருத்தி வீரன் படத்தில் முத்தழகு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ப்ரியாமணியும் இப்படத்தில் நடிக்கிறார்.

6 . இசை : படத்தின் இசையமைக்க ஏ.ஆர் ரஹ்மானை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களுக்காக மறுத்துவிட்டார். அனிருத் ரவிச்சந்தர் இதற்கு பதிலாக பாடல்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ் திரையுலகில் இன்றியமையாத நபர் அனிருத். இவர் சமீபத்தில் வந்த பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜவான் ட்ரைலர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Jawan
போலீஸ் சினிமா செய்வது எப்படி?

7 . வில்லன் : பாகுபலி வில்லன் ராணா டக்குபதி க்கு வில்லன் வேடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை மறுத்துவிட அதற்குப் பதிலாக விஜய் சேதுபதி நடித்தார். சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் வில்லன் நடிப்பில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். அந்ந வகையில் இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார். இதுவே அவரது மிக வில்லனில் மோசமான பாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

8 . பெரிய பட்ஜெட்: இது பழிவாங்கும் எளிய கதையாகத் தோன்றலாம். ஆனால்,  ஜவானுக்காக ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இப்படம் ரூ. 300 கோடியில் உருவாகியுள்ளது.மேலும் இப்படத்தில் அதிநவீன ஸ்பெஷல் எஃபெக்ட்களும் பயன்படுத்தி உள்ளது.

9. தமிழ் சினிமாவிற்கு ஷாருக் கானும்: தமிழ் சினிமாவோடு ஷாருக்கான் எப்போது நல்ல தொடர்பில் இருப்பார். சென்னை எக்ஸ்பிரஸ், லுங்கி டான்ஸ் என ஏற்கனவே தமிழ்நாட்டை தன் வைபில் வைத்திருந்தவர்.

10 . டிக்கெட் விற்பனை : படம் வெளியாவதற்கு முன்பாகவே 4.24 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- அ. சரண்.

Jawan
Serialகளுக்கு ஏன் சினிமா பெயர்கள் வைக்கிறாங்க? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 8

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com