Vijay in Instagram : தளபதி விஜய் செய்த 'இன்ஸ்டா' சாதனை!

இந்தியாவின் வேகமான 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற பிரபலம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் விஜய். உலகின் மூன்றாவது வேகமான 1 மில்லியன் லைக்குகளைப் பெற்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்!
Thalapathy Vijay
Thalapathy VijayTimepass

தளபதி விஜய் 'இன்ஸ்டா கிராம'த்தில் குடியேறியிருக்கிறார். ஆம். இன்ஸ்டாகிராமில் ஞாயிறு அன்று அஃபிஷியல் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்திருக்கிறார்.

'Hello Nanbas and Nanbis 😊' என்ற அவரின் முதல் போஸ்ட்டே அட்டகாசம். காஷ்மீரில் 'லியோ' படப்பிடிப்பில் எடுத்த ஒரு அழகான சிரிப்பு ததும்பிய போட்டோவைப் போஸ்ட்டாக போட்டிருக்கிறார்.

இந்தியாவின் வேகமான 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற பிரபலம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் விஜய். அதேபோல உலகின் மூன்றாவது வேகமான 1 மில்லியன் லைக்குகளைப் பெற்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். BTS மற்றும் ஏஞ்சலீனா ஜூலிக்கு அடுத்து விஜய் தான். இன்ஸ்டாவில் கணக்கு ஆரம்பித்து, போஸ்ட் போட்ட ஒரு மணிநேரத்தில் 500k ஃபாலோயர்களை அள்ளி இருக்கிறார். முதல்நாளிலேயே 30+ லட்சம் ஃபாலோயர்கள் என்றால் அபாரம் தான்.

இது மிகப்பெரிய சாதனை என இன்ஸ்டாகிராமே அறிவித்திருக்கிறது. இந்தக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் கிட்டத்தட்ட 35 லட்சம் லைக்குகளைப் பெற்றிருக்கிறார். ஃபாலோயர்கள் மட்டும் 3.3 மில்லியன் தொட்டிருக்கிறது. கமெண்ட்டுகள் மட்டுமே 4 லட்சத்தைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. இதை நீங்கள் வாசிக்கும் நேரத்தில் கணக்கு எங்கோ எகிறியிருக்கும். ஆக மொத்தத்தில், பாலிவுட் பிரபலங்களையே தூக்கி சாப்பிடும் மெகா ஹிட்டாக இன்ஸ்டாவில் தடம் பதித்து விட்டார்.

"தலைவா...நீ வேற லெவல்!"

"இனி இன்ஸ்டாகிராமே சும்மா அதிரும்!"

- என்றெல்லாம் கமெண்ட்டில் தெறிக்கவிட்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

பார்க்கலாம் இன்ஸ்டாவில் என்னமாதிரி ரெக்கார்ட் பிரேக் பண்ணுவார்னு!

- எஸ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com