
உலகநாயகன் என்பதாலோ என்னவோ, உள்ளூர் நாயகனாக சொந்த ஊர் பரமக்குடி, பிறந்த ஊர் ராமநாதபுரம் மீது வெளிப்படையான பாசத்தை அதிகம் காட்டிக் கொள்ளாதவர் கமல்ஹாசன்.
'தேவர் மகன்' இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவில் இருக்கும் கமல்ஹாசனை எப்போதும் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி... 'பரமக்குடியில் படுகொலை செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தின் போராளியான இம்மானுவேல் சேகரனார் வாழ்க்கையை மையப்படுத்தி ஏன் படம் எடுக்கவில்லை' என்பதே!
இதையே கேள்வியாக அவன்முன் வைத்தபோது, 'உள்ளேன் ஐயா' என்ற ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதி வைத்திருப்பதாகவும், காலம் வரும்போது அதை படமாக்குவதாகவும் சொன்னார்.
நாயகன் மீண்டும் வர்றான்!