'வலிமை- கேஜிஎஃப் - RRR' - காப்பி கேட் பிரச்னையில் சிக்கிய சினிமாக்கள்

ராஜமவுலியின் 'RRR' படத்தையும் 'இணைந்த கைகள்' படத்தையும் கம்பேர் பண்ணாங்க. ராம்கியும் அருண்பாண்டியனும் பறந்து வந்து சந்திக்கிற சீன்ல அப்படியே ராம் சரணும், ஜுனியர் என்.டி.ஆரும் நடிச்சிருப்பாங்க.
காப்பி கேட்
காப்பி கேட்டைம்பாஸ்

காப்பிகேட் பிரச்சனை சினிமாவில் காலங்காலமா இருந்துட்டுதான் இருக்கு. சமீபத்தில் அந்தப் பிரச்சனைல சிக்கிய சில படங்களை இப்போ பார்க்கலாம்.

'குருவி' படத்தோட கதையை சுட்டுத்தான் பிரஷாந்த் நீல் 'கே.ஜி.எஃப்' எடுத்தாருன்னு முரட்டு உருட்டு ஒண்ணு சுத்திட்டு இருந்துச்சு.

அதாவது அப்பாவி மக்களை ஒரு இடத்துல அடிமையா அடைச்சு வெச்சு அவங்களை கொடுமைப் படுத்தும்போது ஹீரோ அங்கே மாஸ் என்ட்ரி கொடுத்து ''சிங்கமுத்து புள்ளடா நானு'', ''வயலன்ஸ் வயலன்ஸ்'' மாதிரியான பஞ்ச் டயலாக்ஸ்களை பேசி கடைசில வில்லனை தொம்சம் பண்ணி மக்களை எப்படி காப்பாத்தினாருங்கிற ஒரே கதைதான் ரெண்டு படமும்னு உருட்டிக்கிட்டு இருந்தாங்க.

காப்பி கேட்
சினிமா விடுகதை : இது சிங்கர் தனுஷ் ப்ளேலிஸ்ட் ஸ்பெஷல்

இதே மாதிரி ராஜமவுலியின் 'RRR' படத்த 'இணைந்த கைகள்' படத்தோட கம்பேர் பண்ணி இன்னொரு குரூப்பும் கம்பு சுத்திக்கிட்டு இருக்கு. ஆனா அதுல ஒரு நியாயம் இருந்துச்சு. ஏன்னா ராம்கியும் அருண்பாண்டியனும் பறந்து வந்து சந்திக்கிற சீன அப்படியே தூங்கி ராம் சரணுக்கும், ஜுனியர் என்.டி.ஆருக்கும் வெச்சிருப்பாங்க.

அதேமாதிரி ஜெயில்ல மாட்டிக்கிட்டவரை மீட்டுக் கொண்டுவர்ற சீனும் ரெண்டு படத்துலயும் ஒரே மாதிரி இருக்கும். இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் ஒண்ணா இருக்கும்.

'பாகுபலி'கூட 'லயன் கிங்' காப்பினு ஏற்கனவே கண்டுபிடிச்சு ராஜமவுலிய ரவுண்டு கட்டினாங்க. ஆனாலும் அவர் அசராம அடுத்தடுத்து படம் எடுத்து கல்லா கட்டிக்கிட்டுதான் இருக்கார். பொழைக்க தெரிஞ்ச மனுஷன்.

'வலிமை'க்கு வந்த சோதனை என்னன்னா 'வலிமை' முதல் காட்சி முடிஞ்சதுமே 'மெட்ரோ' பட டைரக்டருக்கு போன் மேல போன் வர ஆரம்பிச்சிருக்கு. கால் பண்ணினவங்க "'வலிமை' உங்க 'மெட்ரோ' படம் மாதிரியே இருக்குன்னு போட்டுக்கொடுத்துட்டாங்க.

அவரும் படத்தை பார்த்துட்டு போனி கபூரும் , ஹெச்.வினோத்தும் என் கதையை அனுமதியில்லாம பயன்படுத்தியிருக்காங்கன்னு வழக்கு தொடுக்குற அளவுக்கு போச்சு அந்த விவகாரம்.

காப்பி கேட்
'நான் யார் தெரியுமா?, எங்க ஏரியா, ஏஏஏய்' - தமிழ் சினிமா டெம்ப்ளட் வசனங்கள்
"வலிமை இருக்கறவன் அவனுக்கு என்ன வேணுமோ அதை எடுத்துப்பான்"னு வினோத் எழுதின வசனத்தை எடுத்து அவருக்கே மீமா மாத்தினாங்க நெட்டிசன்ஸ்.

"என்ன பெரிய 'கே.ஜி.எஃப்' எங்க தளபதியோட 'பீஸ்ட்' வருது ஸ்பேரிங் போட்டுப் பாப்போமா"னு 'பீஸ்ட்' ரிலீஸ் நேரத்துல விஜய் ரசிகர்கள் ராக்கி பாயோட ரசிகர்கள்கிட்ட ஒரண்டை இழுத்துட்டு இருந்தாங்க.

அப்போ வெளியான 'பீஸ்ட்' ட்ரைலர் லைட்டா கூர்க்கா வாடை அடிக்க அதுக்கு விஜய் ரசிகர்கள் முட்டுக்கொடுக்கனு அவங்கள பார்க்கவே பாவமா இருந்துச்சு. கடைசில பீஸ்ட் 'கூர்க்கா' அளவுக்கு கூட இல்லாம போனதுதான் இதுல சோகம்.

'வாரிசு' வர்ற நேரத்துலயாவது வாயைக் கொடுத்து மாட்டிக்காம இருங்கப்பா....

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com