Viral Photo: விஜய், அஜித் உருவத்தில் 2.5 லட்சத்தில் உருவான கேக்!

ஐந்தரை அடி உயரத்தில் 120 கிலோ எடையில் விஜய், அஜித் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை செய்வதற்கு நான்கு நாட்கள் ஆனது.
Viral Photo
Viral Photoடைம்பாஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். அவர்களது உருவத்தில் இருவரும் ஒன்றாக தோள் மேல் கைப்போட்டுக் கொண்டு இருப்பது போல் தஞ்சாவூரில் உள்ள பேக்கரியில் செய்யப்பட்ட கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள பாபநாசத்தில் சீனிவாசன் என்பவர் அன்பு என்ற பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் தனது பேக்கரியில் மூன்று நாட்கள் கேக் கண்காட்சி விழாவை நடத்தி வருகிறார். இக்கண்காட்சியில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக சீனிவாசன் செய்திரும் செயல் அடடே ரகமாக அமைந்திருக்கிறது.

விஜய், அஜித் உருவத்தில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்று இரண்டரை லட்சம் செலவில் கேக் தயாரித்து கண்காட்சியில் வைத்திருக்கிறார். ஸ்டாண்டிங்கில் நிற்கும் விஜய், அஜித் கேக்கினை பார்க்கும் பார்வையாளர்கள் ஹை என உற்சாகமாகின்றனர்.

Viral Photo
கடவுள் வேஷம்போட்டு கடுப்பேத்தின நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

இது குறித்து சீனிவாசனிடம் பேசினோம், "நான் சில வருடங்களுக்கு முன்பு ஜெர்மனிக்கு போயிருந்தேன். அங்குள்ள மக்கள் கேக் மற்றும் பிரட்டில் செய்யப்பட்ட உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிட்டனர். மக்களை கவர்கின்ற வகையில் கேக் கண்காட்சி நடத்தினர்.

தஞ்சை மாவட்டத்தில் அது போன்ற கேக் கண்காட்சி எதுவும் நடந்ததில்லை என்பதால் அப்போதே எனக்கு கேக் கண்காட்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

அதற்காக நிறைய தெரிந்து கொண்டேன். தற்போது மூன்று நாட்கள் கேக் திருவிழா கண்காட்சியை நடத்தி வருகிறேன். இதில் 250 வகையான கேக், நவதானியத்தில் செய்யப்பட்ட பிரட், இனிப்பு, புளிப்பு, காரம் மூன்று சுவையும் தரக்கூடிய மல்டி பிரட் எனப் பல வகையில் செய்து காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Viral Photo
Selfiee : கில்லாடி குமார் இப்ப Guinness குமார் - அசத்திய Akshay Kumar !

"என்னதான் கண்காட்சி நடத்தினாலும் மக்கள் எதை விரும்புகிறார்கள், அவர்களது தேவை என்ன, கவர்வது எப்படி என்பதை யோசிக்கையில் விஜய், அஜித் இருவருக்கும் மக்கள் முக்கியத்துவத்துவம் தருகிறார்கள். அவர்களது உருவத்தில் கேக் செய்து வைத்தால் கேக் கண்காட்சி மக்களை எளிதாக சென்றடையும் என நினைத்தேன் அப்படியே நடந்திருக்கிறது.

சினிமாத்துறையை சேர்ந்த கலைஞர்களை வரவழைத்து அவர்களது ஆலோசனையின் பேரில் பேக்கரி ஊழியர்கள் விஜய், அஜித் கேக்கினை செய்தனர். அவர்கள் இருவருக்குமான நட்பை ரசிகர்களுக்கு உணர்த்துவதற் தோளில் கை போட்டபடி இருப்பது போன்ற வடிவில் கேக் செய்தோம்.

இரண்டரை லட்சம் செலவில், ஐந்தரை அடி உயரத்தில் 120 கிலோ எடையில் விஜய், அஜித் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை செய்வதற்கு நான்கு நாட்கள் ஆனது குறிப்பிடத்தக்கது. நான் நினைத்தது போலவே விஜய், அஜித் கேக்கினால் கண்காட்சி பிரபலமாகி விட்டது. வாடிக்கையாளர்கள், பொதுமக்களை இவர்களது கேக் பெரிதும் கவர்ந்திருப்பதாக தெரிவித்தார்.

- கே.குணசீலன்

Viral Photo
Trend ஆகும் We Are Pregnant கலாச்சாரம் - Virat Kohli முதல் Basil Joseph வரை !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com