தொடர்: 90-ஸ் கிட்ஸ கிரிக்கெட் - 'Street Cricket Rules'

BREAKING BAD புரஃபசருக்கு அப்புறமா களத்துல, அதிகமான எக்ஸ்பெரிமெண்ட் செய்ற நம்ம `ஆசான் அஷ்வின்' மூலமா, Mankad ரிட்டையர்ட் அவுட் வகையறாலாம் வெளியவே வந்துச்சு.
90-ஸ் கிட்ஸ கிரிக்கெட்
90-ஸ் கிட்ஸ கிரிக்கெட்டைம்பாஸ்

Silly ரூல்ஸ் நிறஞ்சுருக்க கல்லி கிரிக்கெட்ல இருந்து, Maths டீச்சர்ஸால பிடி பீரியட் மறுக்கப்பட்ட மாணவர் சங்கங்கள் உருவாக்குன புக் கிரிக்கெட், ஹாண்ட் கிரிக்கெட் வரைக்கும் நேரத்துக்கேற்ப ரூல்ஸ் அப்டேட் ஆகும்.

அதேபோலதான், டிஷ்யூ பேப்பர்ல ஆரம்பிச்ச மெஸ்ஸியோட பார்சிலோனா ஒப்பந்தம் மாதிரி, 1744ல வெறும் ஆறு விதிகள் பிரிண்ட் செய்யப்பட்ட கைக்குட்டைல ஆரம்பிச்ச கிரிக்கெட்டும், இப்போ பல பக்கங்கள் உள்ளடக்குன சட்டப் புத்தகமாகிடுச்சு. BREAKING BAD புரஃபசருக்கு அப்புறமா களத்துல, அதிகமான எக்ஸ்பெரிமெண்ட் செய்ற நம்ம `ஆசான் அஷ்வின்' மூலமாதான், Mankad ரிட்டையர்ட் அவுட் வகையறாலாம் வெளியவே வந்துச்சு.

இன்னமும் அதிகமா உணரப்படாத சில ரூல்ஸ கொஞ்சம் வெளிய எடுப்போமா?! 

கேளுங்கள் தரப்படும் :

பார்க்குறவங்க பல்ஸ ஏத்துற "Howzzatt?!"ன்ற சத்தம்தான் நிமிர்ந்து நம்மள உக்கார வைக்கும். இது தங்களோட பக்கத்த வெறியேத்தவோ, எதிர்ப்பக்கத்த வெறுப்பேத்தவோ மட்டுமில்ல, ரூல்ஸ்படியே,  அவுட்னே தெரிஞ்சாலும், பௌலர் அப்பீல் பண்ணாட்டி, அம்பயர் அவுட் கொடுக்க மாட்டாரு.

90-ஸ் கிட்ஸ கிரிக்கெட்
தொடர்: 90-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் - கிரிக்கெட் கார்ட் அலப்பறைகள்

தொடாதே அபாயம் :

மைக்கேல் வாகன், தன்னோட ட்விட்டர் தளத்த ஹாண்டில் பண்ற பாணியிலேயே, ஒருதடவ இந்தியாவுக்கு எதிரான போட்டியில பந்த அடிச்ச பிறகு, அத தொட்டதால `Handling the ball' விதிமுறைனால அவுட் ஆனாரு. ஆனா, `Returning the ball' விதிதான் மகாக்கொடுமை. பந்த அடிச்சுட்டீங்க, உங்க பக்கத்துலயே விழுந்துடுச்சு. சரினு, பந்த எடுத்து, எதிரணி ஃபீல்டர்ட கொடுத்தாலும், நீங்க வெளியேற வேண்டியதுதான், இதுவும் அவுட் கணக்குலதான் வருது.

ஆஃப் சைட் அம்பயர் : லெக் சைட்ல நிக்காம ஆஃப் சைட்ல அம்பயர் நிக்க விருப்பப்பட்டா நிக்கலாம், ஆனா, பேட்ஸ்மேன், எதிரணி கேப்டன், இன்னொரு அம்பயர்னு எல்லார்டயும் முன்அனுமதி வாங்கனும்.

ரெண்டு.... ரெண்டு ... !!!!

இங்கிலாந்தோட Warwickshire கொண்டு வந்த பௌலிங் புதுமைதான், டபுள் பவுன்ஸிங் யார்க்கர்ஸ், பேட்ஸ்மேன திணறடிக்கக் கூடியது. ஆனா, ஐசிசி இதுக்கு தடை போட்ருச்சு. பந்து இருமுறைக்கு மேல பவுன்ஸ் ஆகக் கூடாதுன்றதுதான் ரூலாச்சு. அப்படி பவுன்ஸ் ஆனா, அது நோபால் ஆகிடும்.

அதேபோல, பேட்ஸ்மேனும் ஒரு தடவைக்கு மேல, பேட்டால, வீசப்பட்ட பந்த ஹிட் பண்ணா அவர் அவுட் ஆனதா அறிவிக்கப்படுவாரு. ரெண்டைக் குறிக்குற இன்னொரு ரூல், பாடிலைன் ஏரியால ரெண்டு ஃபீல்டருக்கு மேல நிக்கக்கூடாது.

90-ஸ் கிட்ஸ கிரிக்கெட்
தொடர்: நான் நிருபன் - 'Charming இசையமைப்பாளர்!'

ஸ்டம்ப் சொல்லும் ஸ்டோரி :

ஸ்டம்ப்ல இருக்க பெய்ல் கீழே விழுந்தாதான் அவுட்னு தெரியும், ஆனா, பெய்ல் இல்லாமகூட ஆடலாம்ன்றது விதி. விக்கெட்கீப்பர் ஸ்டம்பிங் பண்ணப் போறப்போ, ஸ்டம்புக்கு முன்னால சுத்தி கைசேர்த்து பாலை கலெக்ட் பண்ணி, அப்புறமா ஸ்டம்பிங் பண்ண கூடாதுன்றதும் இன்னோரு விதி.

22 யார்டுகளுக்கு இடையேயான போட்டின்றத தவிர மத்ததெல்லாம் மாறிடுச்சு. பவுண்டரி லைன் அளவு, பவர்பிளே ரூல்ஸ், ஸ்லோ ஓவர் ரேட்டுக்கான தண்டனை, இருபந்துகள் விதிமுறை, கன்கசன் ஆய்வுனு கிளாசிக்கல் கிரிக்கெட்ல இருந்து, மாடர்ன் கிரிக்கெட், டார்வின் காட்டுன பரிணாம வளர்ச்சிய அடைஞ்சுட்டே இருக்கு.

சிலபஸ் மாறிக்கிட்டே இருக்குற மாதிரி, ஐசிசி ரூல்ஸும் எப்போவுமே மாறிக்கிட்டேதான் இருக்கப் போகுது....

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com