
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் உணவகம் ஒன்றில், சமைக்காத சிப்பிகளை உண்ட முப்பது வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்த விப்ரியோ வல்னிஃபிகஸ் (Vibrio Vulnificus) என்ற பாக்டீரியாவே மரணத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பெயர் மற்றும் பிற தகவல்கள் அறியப்படாத இந்நபர் கடந்த ஆகஸ்ட் 29 அன்று உணவகத்தில் பச்சை சிப்பி (Oyster) எனும் கடல் உணவைச் சமைக்காமல் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு செப்டம்பர் 1 இல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் மூன்று நாட்களுக்குப் பின் மரணமடைந்துள்ளார். பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில், அவர் சாப்பிட்ட சிப்பியில் விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற பாக்டீரியா இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த பாக்டீரியா பெரும்பாலான நோய்களின் மூலமாக உள்ளது. முக்கியமாக இரைப்பை குடல் அழற்சியுடன் தொடர்புடைய நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த இறப்பு தொடர்பாக மருத்துவர் கூறுகையில், "அவருக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்தது. நோயெதிர்ப்பு சக்தி வாய்ந்த மருந்துகள் கொடுக்கப்பட்டது. இருப்பினும் நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை" என்றார்.
இதுகுறித்து அதிகாரிகள் பேசும்போது, "கடல்சார் உணவுகளை உண்ணும் பொழுது சரியான முறையில் வேகவைத்துச் சாப்பிட வேண்டும்" என அறிவுறுத்தினர்.
- மு.இசக்கி முத்து.
வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.
Follow us : https://bit.ly/3Plrlvr