Cow Hug Day : இது காதலர் தினம் இல்ல பசு அரவணைப்பு தினம்! | Lovers Day

வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், பாஸ்டீவான ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14 ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாடலாம்.
Cow Hug Day
Cow Hug Daytimepass

இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பிப்ரவரி 14 காதலர் தினத்தை 'பசு அரவணைப்பு தினமாக' கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் கோரியுள்ளது.

இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பசுக்களின் முக்கியத்துவத்தை  உணர்ந்து பசுக்களின் வளத்தை மேம்படுத்துவருவதற்காக பசு அரவணைப்பு தினத்தை கொண்டாட வாரியம் விரும்புகிறது.

இதனால் மக்களும் மகிழ்ச்சியாக இதை ஏற்க வேண்டும் என்று வாரியம் விரும்புகிறது.

தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், பாஸ்டீவான ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14 ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாடலாம் என்று விலங்குகள் நல வாரியத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நம் நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அரவணைப்பு தினத்தை கொண்டாடுமாறு குடிமக்களுக்கு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விலங்குகள் நல வாரியத்துடன் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் இணைந்து பிப்ரவரி 14ஆம் தேதியை ‘பசு அரவணைப்பு தினமாக’ அனைத்து பசுப் பிரியர்களும் கடைபிடிக்குமாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cow Hug Day
Rage Room : பிரேக்கப்பா? கடுப்பா... கோபத்த குறைக்க இருக்கு ரேஜ் ரூம் ! | Bengaluru

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com