Australia : 'நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?' - நாடாளுமன்றத்தில் Propose செய்த MP !

"தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை. இன்று இரவு வந்து அதை தருகிறேன்" என்றும் கூறி நாதன் லாம்பர்ட் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் நாடாளுமன்றம், சிறிது நேரத்திற்கு கலகலப்பாகக் காணப்பட்டது.
Australia
AustraliaAustralia

ஆஸ்திரேலிய நாட்டு நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் தன் காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினருடன் 'ரொமான்ஸ்' செய்துள்ளார். இந்த சுவையான சம்பவம் குறித்த காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நாதன் லாம்பர்ட். இவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான நாடாளுமன்ற உறுப்பினர் நோவா எர்லிச்சை பார்த்து, "நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை. இன்று இரவு வந்து அதை தருகிறேன்" என்றும் கூறி நாதன் லாம்பர்ட் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் நாடாளுமன்றம், சிறிது நேரத்திற்கு கலகலப்பாகக் காணப்பட்டது. மேலும், லாம்பர்டினுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது காதலை ஏற்றுக் கொண்ட நோவா எர்லிச் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

Australia
West Indies Cricket : Darren Sammy இன் சம்பவங்கள் - Thug life Cricketers | Epi 7

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com