
சீனாவில் உள்ள ஒரு குளியல் இல்லமானது தங்கள் பெற்றோருடன் வரும் இளம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள "rent-a-dad" என்ற ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. இது மகன்களுடன் வரும் பெண்களுக்கு தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள ஒரு சேவையாக இருக்கும். வடகிழக்கு சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங்கில் தான் இந்த குளியல் இல்லம் அமைந்துள்ளது.
இந்த 'rent-a-dad' சேவை என்பது, ஒரு பெண் தன் மகனை இங்கு அழைத்து வந்தால், அவனுடைய உடைகளை மாற்றி, குளிப்பாட்டிக் கொடுத்து, பிறகு அவனது அம்மாவிடம் ஒப்படைப்பது வரை உதவுவார்கள். மேலும் இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சேவை இளம் குழந்தைகளை தனித்தனியாக குளிப்பாட்டவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்ளவும் உதவுகிறது. அதே நேரத்தில் பெண்கள் அவர்களது மகன்களுடன் ஓய்வறையில் ஒன்றாக நேரத்தை செலவிடவும் முடியும்.
இந்த சீன குளியல் இல்லங்களில் ஆண் மற்றும் பெண் விருந்தினர்களுக்கு தனித்தனி பகுதிகளும் அறைகளும் உள்ளன, அதேப்போல் விருந்தினர்கள் குளித்த பிறகு உணவு, பானங்கள், மசாஜ்கள், பொழுதுபோக்கு மற்றும் பிற வசதிகளும் அனுபவிக்க ஒரு யுனிசெக்ஸ் லவுஞ்ச் பகுதி உள்ளது.
சீனாவில் தோன்றிய இந்த 'rent-a-dad சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளthu. சில சமூக வலைத்தளங்களில், "இது நல்ல யோசனை, இது நாடு முழுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இனி பெண்கள் குளிக்கும் இடத்திலோ அல்லது கழிவறையிலோ எந்த இளம் ஆண் குழந்தைகளையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஷென்யாங் உண்மையிலேயே குளியல் தலைநகரம் தான்" என்றெல்லாம் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இந்தக் குளியல் இல்ல கலாச்சாரம் அதாவது பாத்ஹவுஸ் கலாச்சாரம் பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்படுகிறது. வடக்கிலும் தெற்கிலும் உள்ள மரபுகளின் அடிப்படையில் இதை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். வட சீனாவில், வறண்ட காலநிலையால், மக்களை சரும பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க குளிப்பது, தூசி மற்றும் இறந்த சருமத்தை அகற்ற நல்ல ஸ்க்ரப்பிங் மற்றும் மசாஜை கொண்டது.
ஷென்யாங்கில், குளியல் இல்லங்கள் அரண்மனைகளைப் போல பிரமாண்டமாக இருக்கும். வெறும் குளிப்பதற்குப் பதிலாக, தற்போது இந்த வளாகங்கள் ஒரு ரிசார்ட்களாக மாறிள்ளன. இங்குள்ள குளியல் இல்லங்கள், திரைப்படங்கள், வீடியோ கேம்கள், கரோக்கி மற்றும் குளித்த பிறகு உணவு மற்றும் பானங்களை வழங்குகின்றன.