England : மகள் மீதான அன்பால் 667 முறை மகளின் பெயரை பச்சை குத்தி கொண்ட தந்தை !

ஒவ்வொரு தொடையிலும் 200 டாட்டூக்கள் வீதம், இரண்டு தொடையிலும் 400 டாட்டூக்களை உருவாக்க இரண்டு டாட்டூ கலைஞர்கள் ஐந்தரை மணி நேரத்திற்கு மேல் எடுத்தனர்.
England
England England

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு ஒரு மனிதனை கின்னஸ் உலக சாதனையில் இரண்டு முறை பதிவு செய்ய வைத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த 49 வயதான மார்க் ஓவன் எவன்ஸ் என்ற நபர் ஒரே பெயரை பச்சை குத்தி தனது சொந்த சாதனையை மீண்டும் பெற்றுள்ளார். மார்க் தனது மகளின் பெயரான 'லூசி' என்ற பெயரை தனது உடலில் மொத்தம் 667 முறை பச்சை குத்திக் கொண்டார். 

மார்க்'க்கு சாதனைகள் புதிதல்ல. மார்க் முதல் முறையாக 2017 ஆம் ஆண்டு தனது மகளின் பெயரை முதுகில் 267 முறை பச்சை குத்தியதற்காக, அதே பெயரில் அதிக டாட்டூக்கள் உடலில் குத்திய சாதனையைப் பெற்றார். இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் தனது சொந்த பெயரை 300 முறை பச்சை குத்திக்கொண்டதன் மூலம் மார்க் சாதனையை முறியடித்தார்.

England
Portugal : சாலையில் ஓடிய Red Wine வெள்ளம் - சுவாரஸ்ய பின்னணி !

ஆனால் எளிதில் விட்டுக்கொடுக்காத மார்க் தனது சாதனையை மீட்டெடுப்பதில் உறுதியாக இருந்தார். எனவே பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்தவர், அவரது முதுகில் அதிக இடம் இல்லாததால், அவர் தனது தொடைகளில் புதிய பச்சைகளை குத்திக்கொண்டார்.

ஒவ்வொரு தொடையிலும் 200 டாட்டூக்கள் வீதம், இரண்டு தொடையிலும் 400 டாட்டூக்களை உருவாக்க இரண்டு டாட்டூ கலைஞர்கள் ஐந்தரை மணி நேரத்திற்கு மேல் எடுத்தனர். வலி கடுமையாக இருந்தபோதிலும் மார்க் தன் மகளை மனதில் நினைத்துக் கொண்டார். மார்க் தன் மகளான லூசியைக் கொண்டாடவும், அவரின் மகளுக்கு பராமரிப்பு வழங்கிய மருத்துவமனைக்கு நிதி திரட்டவும் இந்தச் சாதனையை மார்க் செய்துள்ளார்.

- மு.குபேரன்

England
Tamil Cinema : மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com