திருப்பூர் : மானம் மரியாதை இல்லாதவர்கள் மட்டும்.. - குப்பை கொட்டுபவர்களை விரட்ட புது ஐடியா!

ஆரம்பத்துல இங்கு தயவு செய்து குப்பை கொட்டாதீர்னு பிளக்ஸ் வெச்சோம். யாரும் கேட்கலை. இதனால டெங்கு, மலேரியானு பாதிக்கப்பட்டோம். அதான் ஊர்கூட்டம் போட்டு இப்படி ஃப்ளக்ஸ் வெச்சோம்.
திருப்பூர்
திருப்பூர் timepassonline

"மானம் - மரியாதையைப் பறிகொடுத்தவர்கள் மட்டும் இங்கே குப்பை கொட்டவும்" எனத் திருப்பூர் மாவட்டம் சின்னேறிபாளையம் நீர்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக ஃப்ளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே குப்பை கொட்டி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் ஊராட்சியிலிருந்தே இப்படிச் செய்திருக்கிறார்கள். குப்பை கொட்டுவதைத் தவிர்க்க வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டுள்ள இந்த ஃப்ளக்ஸ் அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

"என்ன பாஸ் இப்படியா ஃப்ளக்ஸ் வைப்பாங்க? ஊர்மக்கள் கோச்சுக்கலையா?" என்று அந்த ஊர் இளந்தாரி ஒருவரிடம் கேட்டோம்.

"ஹலோ சார்... எங்க ஊரு கட்டுப்பாடுக்கு பேர்போன ஊரு... அப்படியும் சில தீயசக்திகள் குப்பை கொட்டுற வேலையை பண்ணிடுதுங்க. ஆரம்பத்துல இங்கு தயவு செய்து குப்பை கொட்டாதீர்னு பிளக்ஸ் வெச்சோம். ஆனால் யாரும் கேட்கலை. இதனால தேவையில்லாம டெங்கு, மலேரியானு ரொம்ப பாதிக்கப்பட்டோம். அதான் இப்படி ஊர்கூட்டம் போட்டு இப்படி ஃப்ளக்ஸ் வெச்சோம். அதுக்குப் பிறகு குப்பை போடுறது நின்னுடுச்சு. பாருங்க இப்ப ஊர் சுத்தமாகிடுச்சுல்ல!" என்று சிரிக்கிறார்.

அட, நல்ல ஐடியாவா இருக்கே!

- ரா ஜோ ஜெபன் சாமுவேல்.

திருப்பூர்
Jailer : இந்த தமிழ் படங்கள் இவர் படத்தோட ரீமேக்கா? - Shiva Rajkumar பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com