
உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொடர் ஐபிஎல். இத்தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. சரியாக, 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியதுதான் முதல் ஐபிஎல் போட்டி.
இப்போட்டியில், 240 ரன்களைக் குவித்தது சென்னை அணி. இதுவரையிலான ஐபிஎல் தொடர்களில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது ஆகும்.
கூடுதல் சிறப்பாக, இதேநாளில்தான் தோனி தலைமையிலான சென்னை அணியும் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியது. இதுவரை, சென்னை அணி நான்கு ஐபிஎல் கோப்பைகளையும், இரண்டு சாம்பியன் லீக் கோப்பையையும் வென்றுள்ளது.