IPL 2023 : Chris Gayle சாதனையை முறியடித்த Virat Kohli !

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 14 போட்டிகளில் விளையாடி, 639 ரன்களை அடித்துள்ளார். பேட்டிங் சராசரி 53.25, 65 பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
IPL 2023
IPL 2023 timepass

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் அணியும் பெங்களூரு அணியும் மோதின. இப்போட்டியில், குஜராத் அணி வெற்றிப்பெற்று, பெங்களூரு அணியின் ப்ளே-ஆஃப் கனவைத் தகர்த்தது.

இப்போட்டியில், விராத் கோலி சதம் அடித்தார். இந்த சதத்துடன் சேர்த்து மொத்தமாக 7 சதங்களை பதிவு செய்துள்ளார் கோலி. இதன் வழியாக, மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை கோலி தகர்த்துள்ளார். கிறிஸ் கெயில் மொத்தம் 6 சதங்களை அடித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 14 போட்டிகளில் விளையாடி, 639 ரன்களை அடித்துள்ளார். பேட்டிங் சராசரி 53.25, 65 பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார். 2 சதம் மற்றும் 6 அரை சதங்கள் இதில் அடங்கும்.

கடந்த 2008 சீசன் முதல் நடப்பு சீசன் வரையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 7,263 ரன்கள் குவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடந்த தொடரில் 4 சதங்கள், 2019 இல் 1 சதம், 2021 இல் 2 சதங்கள் என மொத்தம் 7 சதங்களை கோலி அடித்துள்ளார்.

IPL 2023
IPL சுவாரஸ்யங்கள் : Virat Kohli ஏன் ஐபிஎல் இல் பௌலிங் போடுவதில்லை? - CSK vs RCB

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com