Kailasa : யார் இந்த விஜயபிரியா நித்தியானந்தா ?

நித்தியானந்தாவை ஆன்ட்டி-இந்துக்கள் கார்னர் பண்ணி அவர் மேல குற்றச்சாட்டுகளை பொய்யா வைக்கிறதாவும். கைலாச ஹிந்துக்களுக்கான தனி தேசம், அதுக்கான அங்கீகாரம் கொடுக்கணும்னு அவங்க கோரிக்கையும் வச்சிருக்காங்க.
Kailasa
Kailasa timepass

ப்பா யார்ரா இந்த பொண்ணு ! அப்படிதான் இருந்தது அவங்களுடைய தோற்றம். காவி கலர்ல உடை, தலையில பெரிய தலைப்பாகை, இடது கைல ஒரு டேட்டூ, நல்ல வெண்ணிறமான முகம், "சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் ஜுவல்லரி" அப்படின்ற மாதிரி அவ்வளவு நகைகள், யாருன்னு கெஸ் பண்ணிட்டீங்களா ??

ஐநா சபைல கைலாசா சார்பா போய்ட்டு வந்துருக்காங்க இல்லையா, அவங்கதான் இந்த "மா.விஜயபிரியா நித்தியானந்தா" யாரு இந்த விஜயபிரியா நித்தியானந்தா? என்ற கேள்வி தான் இணையதளத்தில் இன்னுமே ரொம்ப அதிகமா தேடப்பட்ற ஒரு கேள்வியா இருக்கு.. அதத்தான் நாமளும் சொல்ல போறோம் "யார் இந்த விஜயபிரியா நித்தியானந்தா ?? "

பிப்ரவரி 24 ஜெனிவால ஐநா சபையுடைய பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான ஒரு மாநாடு நடந்துச்சு. இந்த மாநாட்டில் ஐநா சபையுடைய உறுப்பின நாடுகளிலிருந்து வந்து அவங்களுடைய சமூக, கலாச்சார, பொருளாதார உரிமைகளை எடுத்து சொல்வாங்க. அந்த வகையில கைலாசானு ஒரு நாடு இருக்கான்னு தெரியல, அப்படி ஒரு நாட்டை முன்னெடுத்து வைப்பதற்காக தான் இந்த விஜய பிரியா நித்தியானந்தா ஐநா சபையுடைய இந்த மாநாட்டுக்கு வந்து இருந்தாங்க.

ஒரு முக்கியமான விஷயம் என்னனா கைலாச நாட்டை ஐநா சபை இன்னுமே அங்கீகரிக்கல. விஜயபிரியா நிறைய விஷயங்கள் பேசினாங்க.

அப்படி அவங்க பேசினப்ப எடுத்த புகைப்படங்கள் செம வைரலா இருந்துச்சு.அக்கா வேற அழகா இருந்தாங்களா அதான் ஒரே நைட்ல வோர்ல்டு ஃபேமஸ் ஆகிட்டாங்க !!

இந்த வைரல் விஜய் பிரியா யாரு அப்படின்னு தெளிவா பாக்கலாம். நித்தியானந்தா உடைய அபிசியல் ட்விட்டர் அக்கவுண்ட்ல விஜயபிரியா நித்யானந்தா யார் அப்படின்றத பத்தின ஒரு பதிவு போடப்பட்டிருக்கு. அந்த பதிவுல விஜயபிரியா நித்யானந்தா தான் ஐநா சபைக்கான கைலாசவின் நிரந்தர அம்பாஸிடர் அப்படின்னு இருக்கு.

2014ல கனடா யுனிவர்சிட்டி ஆஃப் மேனிடோபா பல்கலைக்கழகத்துல விஜயபிரியா மைக்ரோபயாலஜி படிச்சிருக்காங்க. இப்போ அமெரிக்கா வாஷிங்டன் டிசில அவங்க இருக்கிறதா சில தகவல்கள் கிடைச்சிருக்கு. அது மட்டும் இல்லாம அவங்க இளங்கலை படிக்கும் போது "அவுட் ஸ்டாண்டிங் அகாடமி பெர்ஃபார்மன்ஸ்" அப்படின்ற பட்டத்தையும் வாங்கி இருக்காங்க.

இதிலிருந்து பார்ட்டி நல்ல படிக்கிற பார்ட்டினு தெரியுது . அது மட்டும் இல்லாம 2013 -2014 ஆண்டுக்கான ஸ்டூடண்ட்ஸ் ஸ்காலர்ஷிப்பையுமே விஜயபிரியா வாங்கி இருக்காங்க.

ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோல், பிட்ஜின்ஸ்னு 4 மொழிகள்ல சரளமாக பேசக் கூடியவங்கதான் விஜயபிரியா நித்யானந்தா. இதுல கிரியோல் , பிட்ஜின்ஸ் இதெல்லாம் மொழியான்னே நமக்கு தெரியல!!

விஜயபிரியா தன்னுடைய இடது கையில நித்தியானந்தா முகத்தை அப்படியே பச்சை குத்தி இருப்பாங்க. அவ்வளவு பக்தியா அம்மணிக்கு.

ஐநா சபையில நடந்த இந்த மாநாட்டில் நிறைய குற்றச்சாட்டுகளையும் விஜயபிரியா வச்சுருக்காங்க. அதாவது நித்தியானந்தாவை ஆன்ட்டி-இந்துக்கள் கார்னர் பண்ணி அவர் மேல நிறைய குற்றச்சாட்டுகளை பொய்யா வைக்கிறதா சொல்லி இருக்காங்க. அது மட்டும் இல்லாம கைலாச ஹிந்துக்களுக்கான தனி தேசம், அதுக்கான அங்கீகாரம் கொடுக்கணும்னு அவங்க கோரிக்கையும் வச்சிருக்காங்க.

இப்படியே அடுத்தடுத்து முன்னெடுப்புகளை ரொம்ப வேகமா வைக்கிறது மூலியமா கைலாசானு ஒரு நாடு இருக்கா அப்படிங்கிற சந்தேகம் அதிகமாகுது. மேப்ல எங்கயுமே கைலாசாக்கான ஆதாரம் இல்ல.. அதே மாதிரி கைலாசவுடைய உண்மையான லொகேஷன் என்னன்னு தெரியல !

அந்த மாநாட்டுக்கு விஜயபிரியா நித்யானந்தா கூட சேர்ந்து, நித்தியானந்தா உடைய சில சீடர்களும் போயிருந்தாங்க. அங்கு இருந்த ஐநா சபை உறுப்பினர்கள்கிட்ட நித்தியானந்தாவை பத்தின புத்தகங்களையும் நித்யானந்தாவுடைய புகைப்படங்களையும் கொடுத்து கைலாச நாட்டுக்கான உரிமையை வழங்குவதற்கு நீங்களும் சப்போர்ட் பண்ணுங்க அப்படின்னு பிரச்சாரமும் பண்ணிட்டு வந்து இருக்காங்க.

இப்படி இருக்கும் பொழுது ஐநா சபையுடைய ஒரு மாநாட்டில் கைலாசா நாட்டை முன் வைத்து பல கருத்துக்களை பேசி விஜய்பிரியா நித்தியானந்தா ஒரே நைட்ல வேர்ல்ட் ஃபேமஸ் ஆயிட்டாங்க. அந்த காலத்துல எல்லாம் சாமியார்னா கையில பிடி, தட்டுல சோறு, தரையில படுக்கைனு தான் இருப்பாங்க.. ஆனா இப்ப ஒரு நாட்டையே உருவாக்கி இருக்காரு மனுஷன்... பேசாம நம்மளும் கைலாசவுக்கு ஒரு டிக்கெட் போட்டுடலாமா ???

- நெ.ராதிகா.

Kailasa
Nithyananda : ஜெயிச்சுட்டோம் மாறா - Memes

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com