
புதுச்சேரியில் என்.ரங்கசாமி தலைமையில் என்,ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவரது மகன் ஸ்டாலின் சந்திர கிருஷ்ணனுக்கு நேற்று (23/04/2023) பிறந்தநாள்.
ஸ்டாலின் சந்திர கிருஷ்ணனுக்கு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது ஆசை. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றார். ஆசி பெற வரும் பொழுது எதிர்காலத்தில் தான் விரும்பிய காவல்துறை அதிகாரி சீருடையுடன் ஸ்டாகின் சந்திர கிருஷ்ணன் ஆசி பெற்றார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.