
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நான்கு பாடங்களில் ஜஸ்ட் பாஸ் ஆகி 185 மதிப்பெண்கள் எடுத்த மாணவன் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மலைராஜ் மகன் நவீன்கரன். பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார்.
அண்மையில் வெளியான பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் தலா 35 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 45 மதிப்பெண்கள் என மொத்தம் 185 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதால் அந்த மாணவன் தனது உறவினர்களுடன் கேக் வெட்டி சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
நான்கு பாடங்களில் ஜஸ்ட் பாஸ் 35 மதிப்பெண்களுடன் 185 மதிப்பெண்கள் எடுத்த இந்த மாணவனின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கேக் வெட்டி சந்தோசத்தை பகிரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.