'சேட்டைக்கார சச்சினின் அலப்பறைகள்' - கலாய் கிரிக்கெட்டர்கள் | Epi 2

"கெட்ட பையன் சார் இந்தக் காளி"ன்னு சொல்ற மாதிரி "சேட்டக்காரப் பையன் சார் இந்த சச்சின்"னு செல்லமா சொல்ல வச்ச, மாஸ்டர் பிளாஸ்டர், பிராங்க் மாஸ்டரா மாறுன சில சம்பவங்கள பார்ப்போமா?
சச்சின்
சச்சின்டைம்பாஸ்

சச்சின் டெண்டுல்கர் - ஆன் த ஃபீல்டுல, வம்புக்கு இருக்கிறவங்களுக்கு வார்த்தைகளவிட, பேட் மூலமா பதில் சொல்றவரு. அந்த சீரியஸ் பக்கம் தெரிஞ்ச அளவுக்கு அவரோட ஃபன் போர்ஷன் பலருக்கும் தெரிஞ்சதில்ல.

`த்ரீ இடியட்ஸ்' படம் என்னோட இளமைக்காலக் குறும்புகள நினைவூட்டுதுன்னு ஒருதடவ சச்சின் சொல்லியிருந்தாரு‌. அவ்ளோ லூட்டி அடிச்சிருக்காரு. ஆர்ம் ரெஸ்ட்லிங்ல ஐயா கில்லி, ஸ்கூல் டேஸ்ல இருந்து பிளேயிங் டேஸ்வரை யாருமே அவர தோக்கடிச்சதில்ல. சின்ன வயசுல கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்புனதே பக்கத்து வீட்டுல மாங்கா பறிக்கப் போய் கீழவிழுந்து அடிபட்டதாலதான். அவ்ளோ குறும்பு.

"கெட்ட பையன் சார் இந்தக் காளி"ன்னு சொல்ற மாதிரி "சேட்டக்காரப் பையன் சார் இந்த சச்சின்"னு செல்லமா சொல்ல வச்ச, மாஸ்டர் பிளாஸ்டர், பிராங்க் மாஸ்டரா மாறுன சில சம்பவங்கள பார்ப்போமா?

சச்சின்
தொடர்: 90-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் - கிரிக்கெட் கார்ட் அலப்பறைகள்

கங்குலியோட அண்டர் 15 டேய்ஸ்ல இருந்து அண்டர்ஸ்டேன்டிங்ல இருக்கறவரு சச்சின். 90-களோட ஆரம்பத்துல ஒருதடவ, பிராக்டீஸ் முடிச்சு வந்த அலுப்புல கங்குலி மதியத்தூக்கம் போட, இன்னமும் ரெண்டு டீம்மேட்களோட சேர்ந்து கங்குலிய கலாய்க்க சச்சின் திட்டம் தீட்டுனாரு. தண்ணீர் வெளியேறுற பாதைலாம் அடைச்சுட்டு, தண்ணீர் குழாயத் திறந்துவிட, ரூம் மொத்தமும் நீர்ல மிதந்துச்சு. முழிச்ச கங்குலி கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு.

சூட்கேஸ்ல இருந்து எல்லாம் மிதக்க, கங்குலி வெள்ளம் வந்துடுச்சோனு பயந்துட்டாரு. ஒன்னுமே தெரியாத மாதிரி ஓரமா உட்கார்ந்திருந்த சச்சின் அண்ட் கோ அவர ஓட்டி சிரிச்சது. சமீபத்துல கங்குலி ஒருதடவ ஃபிட்னஸ் பத்தி இன்ஸ்டால போட்ட பதிவுக்கு, "ஆமா ஆமா பிளேயிங் டேஸ்ல, டிரெய்னிங்கப்போ,  'ஸ்கிப்பிங்' தானே உங்களுக்குப் பிடிக்கும்"னு, அவர ஓட்டினாரு.

சிலசமயம், மூடை லைட்டாக்குறதுக்கும் சச்சினோட ப்ராங்க் உதவிருக்கு. ஜவகல் ஸ்ரீநாத்தோட கடைசிப் போட்டி அது. ப்ராக்டீஸப்பவே ரொம்ப டென்ஷனா இருந்தாரு அவரு. அத மாத்துறதுக்காக சச்சின் தன்னோட டிராக் பேண்ட்கள ஸ்ரீநாத்தோட பேக்ல அவரோடதுக்கு பதிலா மாத்தி வச்சுட்டாரு. ப்யூட்டி என்னனா பதட்டத்துல இத கவனிக்காம அதையும் மாட்டிட்டுக் கிளம்பிட்டாரு ஸ்ரீநாத். எல்லோரும் பார்த்து சிரிச்சப்போதான் உண்மை புரிஞ்சது.

சச்சின்
90s கிரிக்கெட் தொடர்: 'Umpire vs Players' - Epi 6

பிளேயர் ஆன பிறகுகூட, மாறுவேஷம் போட்டு, படத்துக்குள்லாம் போய்ருக்காரு.  சாப்பாட்டுக்கான சேலஞ்சலலாம் முதல் ஆளா கலந்துக்கிட்டு புரோட்டா சூரி மாதிரி ஃபன் பண்ணிருக்காரு.

அப்போ மட்டுமில்ல வயசானாலும் சச்சினோட குறும்புத்தனம் இப்போவும் மாறல. `இருநூறு டெஸ்ட் போட்டிகளும், ஒரு கோவிட் டெஸ்டும்'ன்ற கேப்சனோட அவரு போட்ட வீடியோ அத மறுபடி நிருபிச்சது.

அவரோட மூக்குல இருந்து சாம்பிள கலெக்ட் பண்ணபிறகு, அது வலிச்ச மாதிரி ஒரு பாவனை பண்ணி, கலெக்ட் பண்ண பெர்சன பயமுறுத்தி அதுக்கப்புறம் சிரிச்சாரு. Gigantic உடலமைப்புடைய முன்னாள் இங்கிலாந்து வீரரான டிரெம்லெட்கூட தான் எடுத்த ஃபோட்டோ போட்டு, "டிரெம்லெட் மாதிரி ஆக நான் எத்தனை ஆம்லேட் சாப்பிடனும்?"னு ட்வீட் போட்டாரு. 

2019ல ரோஹித் ஆடுன இன்னிங்ஸ, 2003-ல சச்சின் ஆடுன இன்னிங்ஸோட கம்பேர் பண்ணி, எது பெஸ்ட்னு, ஒருதடவ ஐசிசி ட்வீட் போட்டுச்சு. அதுக்கு சச்சின், ரெண்டு பேருமே இந்தியா அதுவும் மும்பை வீரர்கள், ஹெட் விழுந்தா நான்தான் ஜெயிப்பேன், தலை விழுந்தா நீ தோப்பன்ற கதைதான் இது"னு பதில் போட்டாரு.

சச்சின்
90s kids Cricket: 'பாம்பு, நிலநடுக்கம், பேய், பீர் பாட்டிலால் நின்ற மேட்சுகள்'|Epi 7

அடுத்தவங்கள காயப்படுத்தாத இந்தக் குறும்புத்தனங்கள்தான் இன்னமும் ஸ்பெஷலாவும் மனசுக்கு நெருக்கமானவராகவும் பலருக்கும் சச்சினை மாத்திருக்கு.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com