Tea Lovers : Depression ஆ? இந்தா புடிங்க டீ யா!

"டீ" ஒரு antidepressantனு எத்தனை பேருக்குத் தெரியும். நீங்களும் டீ குடிக்குறவங்களா இருந்தா இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.
Tea Lovers
Tea Loverstimepass

இப்பலாம் அதிகமா கேக்குற வார்த்தை டிப்ரசன் டிப்ரசன்... 'சரி டிப்ரசன்னு சொல்லுறியே உன் வயசு‌ என்ன‌டா/'னு கேட்டா 'பதினஞ்சு'னு சொல்றானுக. அதுக்குள்ளயா உனக்கு டிப்ரசன் வருது. சரி வா டீ குடிப்போம். 

நான் எல்லாம் டிப்ரசன் வந்தப்ப என்ன பண்ணேனா டீ கடைல போய் டீ குடிப்பேன்..! ஆமாங்க "டீ" ஒரு antidepressantனு எத்தனை பேருக்குத் தெரியும் .. நீங்களும் டீ குடிக்குறவங்களா இருந்தா இந்தப் பதிவு உங்களுக்குத்தான். படிச்சுட்டு நிம்மதியா ஒரு டீயைப் போடுங்க..!

காலைல டீ குடிக்காட்டி என்ன நடக்கும்னு சொல்றேன் .. மொதல்ல வீட்டுக்காரர்கிட்ட சண்டை வரும். அப்பறம் நாம ஏறுற share autoக்காரன்கூட சண்டை வரும். அப்பறம் நம்ம ஆபீஸ்ல மேனேஜர் டீ குடிக்காம வந்திருந்தா அங்கே பெரும் பிரச்சினையே ஆகிடும்... அப்படி ஒரு மகிமை டீக்கு..!

டீக்கடை டேஸ்ட் அடிச்சுக்க முடியாதுங்க. வீட்டுல போட்டாலும் அந்த டீக்கடை டேஸ்ட் வர மாட்டேங்குது. அதுக்காகலாம் டீக் கடைக்குப் போய் எப்படி போடுறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணக் கூடாது  போற வழியில மாஸ்டர் போடுற டீயைக் கப்புனு குடிச்சிட்டு பேசாம வந்துடனும். ஆராய்ச்சி பண்ணி டீயை வெறுத்து கிறுக்கா சுத்துனவங்க லிஸ்ட் பெருசுப்பா! 

சாப்பாடே வேண்டாம். மூணு வேளையும் டீ குடிச்சுட்டு சுத்துவேன் scene போடுவானுக சிலர்... ஆனா ரகசியம் என்னனா டீயோட ரெண்டு பஜ்ஜியும் நாலு பிஸ்கட்டும் உள்ளே தள்ளிடுவானுக.  அப்பறம் எப்படி பசிக்கும். அதுனாலதான் சாப்பாடு வேண்டாம்னு சுத்துவானுக. இந்த ரகசியமே நான் டீ குடிக்குறப்போ தான் எனக்கே தெரிஞ்சது..! 

Tea Lovers
அகிரா மிஷ்கின்யெவ்ஸ்கி - அது ஒரு டவுசர் காலம் | Epi 15

நமக்கெல்லாம் ஒரு நண்பன் இருப்பான். எல்லாத்துக்கும் டீ குடிப்பான். 'சந்தோஷமா சரி வா டீ குடிக்கலாம்',  'சோகமா சரி வா டீ குடிக்கலாம்..',  'மேனேஜர் திட்டிட்டார்... வா டா ஒரு டீயைப்  போடலாம்'னு.., 'Breakup ஆகிடுச்சா..? வா  டீ குடிக்கலாம்'னு சொல்லுவான் உங்களுக்கும் அப்படி ஒரு நண்பர் இருந்தா cheers..!

சிலரெல்லாம் கிரீன் டீயெல்லாம் டீ லிஸ்ட்ல சேத்துருப்பாங்க.. ஏன்டா மனுஷன் சந்தோஷமா இருக்குறதே அந்த நல்ல டீயைக் குடிக்குறப்ப தான். அது உங்களுக்கு பொறுக்கலையா கிரீன் டீ, யெல்லோ டீ னு .. கிரீன் இல்லடா பிரவுனா இருந்தா தான்டா அதுக்குப் பேர் டீயே‌... வேற எதுவுமே டீ இல்லை டா... ஏன்டா உசுர வாங்குறீங்க..?

டீ குடிக்கிறதால இளநரை வருதுன்னு சொல்றாங்க. கழுத வந்தா வந்துட்டுப் போகுது. பத்து ரூபாய்க்கு இண்டிகா டை வாங்கி அடிச்சா எல்லா முடியும் கருப்பாகிட்டு போகுது. அதுக்காகலாம் டீயை விட முடியாதுப்பா... இளநரையா மனுஷன் நிம்மதியானு பார்த்தா மனுஷன் நிம்மதிதான்பா முக்கியம்! 

லெமன் டீ கூட ஓகே. ஆனால், ஒரு நாள்ல ஒரு வாட்டியாச்சும் பால்ல போட்ட நல்ல டீயைக் குடிச்சாத்தான் உசிர் வாழ முடியும்பா... தம் டீயோ கும் டீயோ,  அந்த டீ தெய்வம் மட்டும் இல்லேன்னா நானெல்லாம் என்னாகிருப்பேன்னு நினைச்சே பார்க்க முடியலங்க! 

காலைலயே டைம்பாஸ் ஆசிரியர், 'என்னங்க ஆர்டிக்கிள் தர்றேன்னு சொன்னீங்க?'னு குறுஞ்செய்தி அனுப்பிருந்தாரு... அய்யய்யோ மறந்துட்டோமேனு அவசர அவசரமா ஒரு டீயைக் குடிச்சிட்டே எழுதினதுதான் இந்த ரைட்-அப்..!

- 'Tea Girl' ஹன்னா டேனியல்.

Tea Lovers
Tea, Horlicks மட்டும் போது உயிர் வாழ - கொல்கத்தாவில் அதிசய பாட்டி! | Tea Lover

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com