
70s, 80sகளில் எல்லாம் பௌலர்களின் காலம். பெரிய பவுண்டரிகள், ஓவருக்கு இத்தனை பவுன்சர்கள்தான் வீசனும்ன்ற கட்டுப்பாடுகள் எதுவுமில்லாம சகல சௌகர்யத்தோட பேட்ஸ்மேன பௌலர்கள் கலங்கடிச்ச காலகட்டமது. அதுலயும் Thug life படிப்புல டாக்ட்ரேட் பட்டம் வாங்குன விவியன் ரிச்சர்ட்ஸுக்கே டஃப் ஃபைட் கொடுத்த தீரர் இவரு. Thor மாதிரி பேட்ட சுத்தியலாக்கி அதாலயே பௌலர்கள ஊடுகட்டி அடிச்ச ரிச்சர்ட்ஸே "எனக்கு உறக்கமில்லாத இரவுகள கொடுத்த பௌலர்"னு குறிப்பிட்ட புல்லட் எக்ஸ்பிரஸ் டென்னிஸ் லில்லியோட தரமான தக் லைஃப் சம்பவங்களோட தொகுப்புதான் இது.....
இப்போலாம் மணிக்கு 140+கிமீ வேகத்துல பந்துகள வீசற பௌலர்களையே பயத்தோட பார்க்கறோம். ஆனா 150+ கிமீ வேகத்துல விரையும் இவரோட பவுன்சர்கள் தலையத் தகர்க்கப் பார்க்கும்னா யார்க்கர்கள் கால்களுக்கே குறிவைக்கும்.
கட்டர்கள் இவரோட ஸ்லோ பாய்ஸன்கள், போறபோக்குல பாயாசத்த போட்டுடும். இவரும் ஜெஃப் தாம்ஸனும் ரெண்டு எண்ட்ல இருந்து வீசுனாங்கன்னா ரெண்டு வாள்கள் மாறி மாறி தாக்குற ஃபீலிங்தான் பேட்ஸ்மேன்களுக்கு வரும். அப்படிப்பட்ட raw பௌலிங் இவரோடது. அதுவும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மோதிக்கிட்ட ஆஷஸ்லலாம் இவரோட பௌலிங் இன்னமும் உக்கிரமா இருந்தது.
ஆஸ்திரேலியர்களோட முக்கிய ஃப்ளேவரான ஸ்லெட்ஜிங்குக்கும் மைண்ட்கேமுக்கும் இவரும் ஃபேமஸ். ஆஷஸ்ல ஒருதடவ கெய்த் ஃப்ளட்சர் பேட்டிங் பண்ண இறங்க அவர்ட்ட போய், "குட்லக் ஃப்ளெட்சர், உங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்படும், ஏன்னா என்னோட பந்துகள சந்திக்க போறீங்க"னு சொல்லிட்டு வீசுன முதல் பந்தையே பவுன்சரா வீசி அவரோட தலையத் தாக்குனாரு.
மைக் கேட்டிங் பேட்டிங் பண்ணிட்ருக்கப்போ அவர்கிட்ட பௌலிங் போடறுதுக்கு முன்னாடி ரொம்ப கூலா நடந்து போய், "கேட்! ஸ்டம்ப் மறைக்குது கொஞ்சம் நகர்ந்துக்கோங்க"னு அவரோட கவனத்த சிதறடிச்சார். பந்தவீசுறதுக்கு முன்னாடியே பேட்ஸ்மேன்களோட மூளைக்குள்ள போய் உட்கார்ந்து அதுக்கான ஆரம்பகட்ட வேலைகள பண்றதுதான் அவரோட பாணி.
பெர்த்ல நடந்த ஒரு டெஸ்ட்ல வேணும்னே ஒரு அலுமினியம் பேட்டோட வந்து பேட்டிங் பண்ணாரு டென்னிஸ் லில்லி. அப்படியொரு பேட்டோட ஆடக்கூடாதுன்ற ரூல் இல்லாததால அம்பயர்களாலயும் ஒன்னும் பண்ண முடியல. பேட்டால பந்து சேதமடையுதுன்னு மைக் பேர்லி வந்து புகார் சொல்லியும் என்ன பண்றதுனு புரியாம பரிதவிச்சாங்க. கடைசில இயான் செப்பலே உள்ள வந்து அத மாத்தச் சொல்லிக் கேட்க அத தூக்கி எறிஞ்சு தன்னோட கோபத்த தீர்த்துக்கிட்டாரு டென்னிஸ் லில்லி.
அப்பப்போ அந்த தக் லைஃப் முழிச்சுக்கும். ஒருமுறை பந்த மாத்தறதுக்காக இவரு அம்பயர அப்ரோச் பண்ண டிக்கீ பேர்ட் ஓவர் முடிய இன்னமும் ரெண்டு பால்தான இருக்கு அதைமட்டும் முடிங்கன்னு சொல்ல, கடுப்பான டென்னிஸ் லில்லி அடுத்த ரெண்டு பாலையும் ஆஃப் ஸ்பின்னா வீசுனாரு.
நான் வாழ்க்கைலயே பார்த்த தி பெஸ்ட் ஆஃப் ஸ்பின் பந்துகள் அதுனு டிக்கீ பேர்ட் ஓவர் முடிஞ்சதும் கிண்டல் பண்ணாரு. அவர பதிலுக்கு ஓட்றதுக்காக பொம்மை பாம்ப டென்னிஸ் லில்லி பிட்சுக்குள்ள கொண்டு வந்ததுலாம் தனிக்கதை.
எம்ஆர்எஃப் பவுண்டேசன் மூலமா நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள இந்தியாவுக்கு உருவாக்கித் தந்தவரும் இவருதான். சச்சினை நீ இதுக்கு சரிப்பட மாட்டேன்னு ஃபாஸ்ட் பௌலிங்ல இருந்து திரும்பி அனுப்பிச்சதும் இவர்தான்.
மனசுல தோணறத அப்படியே செய்ற லில்லியோட தக் லைஃப் தருணங்கள் அக்ரஸிவ் ஃபாஸ்ட் பௌலர்ன்றத தாண்டியும் அவர சுவாரஸ்யமான பெர்சனாலிட்டியா அடையாளம் காட்டுச்சு.