
"அம்பயரிங்கோட அதிகபட்ச வேலை, ரெண்டு காதுகளுக்கும் நடுவுலதான் நடக்குது"ன்னு, சைமன் டோஃபெல் சொல்லுவாரு.
ஹாக்ஐ, ஸ்டம்ப் மைக்லலாம் புழங்குறதுக்கு முன்னாடி, அம்பயர்களோட கண்கள்தான் கேமராக்கள், காதுகள்தான் சத்தத்த உள்வாங்குற மைக்குகள். அதுரெண்டுமே, மைக்ரோ விநாடிக்குள்ள விஷயங்கள கிரகிக்கணும். அவங்களோட ஷார்ப்னஸாலதான் போட்டியோட போக்கே முடிவு செய்யப்பட்டுச்சு. இதனாலேயே அம்பயர் - பிளேயர் கைகலப்புகளும், கருத்துமோதல்களும் முன்னாடிலாம் அதிகம். அதப்பத்திய எபிசோட்தான் இது.
42 வயசு வரைக்கும், ஃபுட்பால் ரெஃப்ரியாவும், லிஸ்ட்ஏ கிரிக்கெட்ல அம்பயராவும் இருந்த ஸ்டீவ் பக்னர், சர்வதேச கிரிக்கெட்டுக்கு வரலேன்னா சச்சின் 500 ரன்களையாவது கூடுதலா அடிச்சுருப்பாரு. "கனவுலகூட சச்சின் விளையாடுறமாதிரி வந்தா, பக்னர் விரலைத் தூக்கிடுவாரு"னு, பிரபல கார்டூனே இருந்துச்சு. 2008 சிட்னி டெஸ்ட்ல, இந்தியாவுக்கு எதிரா 7 தப்பான தீர்ப்புகள கொடுத்து, ரசிகர்கள கொந்தளிக்க வச்சுட்டாரு, பக்னர்.
பௌலருக்கு ஒன்னுனா, ஒன்னா வருவோம்னு, ஹர்மன்ப்ரீத், தீப்திக்காக நின்னதுபோல, பலதடவ கேப்டன்கள், அம்பயர்கள்டயும் சண்டக் கோழிகளா நின்றுக்காங்க. Chucking பண்றாருனு, முரளிதரனுக்கெதிரா, மூன்று ஓவர்கள்ல, ஏழுதடவ, டேரல் ஹேர் நோபால் கொடுத்தப்போ, ரணதுங்க கடுப்பாகி, ஆடமாட்டோம்னு வெளியவே கிளம்பிட்டாரு.
ஜாவேத் மியான்தத்தும், ஒருதடவ வாசிம் அக்ரமுக்காக இப்டி ஃபைட் பண்ணிருப்பாரு. 1985ல, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்ல, ரெண்டு விக்கெட் எடுத்தா ஜெயிச்சுடுவோம்ன்ற சமயத்தில, வாசிம் வரிசையா பவுன்சர்ஸ் போட, அம்பயர் நோபால் தர, "நீ போடு, நான் பார்த்துக்கறேன்"னு தொடர்ந்து அவர ஜாவேத் பவுன்சர் போட வச்சாரு.
கிரிக்கெட் களக்காட்சில கரும்புள்ளியான கேட்டிங் - ஷாகூர் ராணா ஃபைட் சீன், 1985ல நடந்துச்சு. சமாதானப்படலம், "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கானு.....?!"னு நீள, ஒருநாள் முழுசா ஆட்டம் கைவிடப்பட்டுச்சு.
இப்படி, கூல் கேப்டன் தோனியவே பொங்கி எழுந்து பிட்சுக்குள்ள வரவச்ச உல்ஹாஸ், ஒரு உலகக் கோப்பையவே பைபாஸ்ல இங்கிலாந்துக்கு அனுப்புன தர்மசேன, பால சேதப்படுத்துனாங்கன்னு, அஞ்சு ரன்கள பெனாலிட்டி கொடுத்து, இன்சமாம அணியோட வாக்அவுட் பண்ண வச்ச பில்லி - டேரல் கூட்டணினு இந்த லிஸ்ட் நீளம்.
அதேநேரம், பில்லி பவ்டன ரெய்னா இமிடேட் பண்ண அந்த புகைப்படம், கடந்த ஆசியக் கோப்பைல, ஷதாப், விளையாட்டா, அம்பயரோட விரல பிடிச்சு தூக்க வச்சதுனு சில ஸ்வீட் மொமெண்ட்ஸும் கிரிக்கெட்ல நிறஞ்சுருக்கு.
"அம்பயர்களால ஒரு ப்ளேயரோட கரியரையே காலி பண்ண முடியும்"னு வார்னே சொல்லுவாரு. அதனால, The Heat of the momentல வர்ற விவாதங்கள மறந்து, அதோட பாதிப்பு தீர்ப்புல எதிரொளிக்காம பார்த்துக்கறதுதான் அம்பயர்களோட பொறுப்பு. அம்பயரிங்கோட Ethicsஉம் அதுதான்.