Viral Video: என்னது கண்ணாடி போன்ற தெளிவான மீனா?

"சிஸ்டிசோமா என்பது கடலில் 600 மீ-1000 மீ ஆழத்தில் வாழும் ஒரு மீன் ஆகும். அதன் உடல் முற்றிலும் தெளிவானது. அதன் கண்கள் மட்டுமே ஆரஞ்சு நிறத்துடன் காணப்படுகிறது.
Viral Video
Viral Videoடைம்பாஸ்

கண்ணாடி மீன் பாத்துருக்கீங்களா? இல்ல கேள்வியாச்சும் பட்டிருக்கிறீர்களா? இல்லையா? அப்ப பாட்டாவே படிக்கிறேன். கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. என்னதான் விஞ்ஞானிகள் பல உயிரினங்கள கண்டுபிடிச்சுட்டே இருந்தாலும், சிலதுதான் பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட கடல்வாழ் உயிரினம்தான் சிஸ்டிசோமா. இந்த மீனின் வீடியோ இணையத்தில் வைரலாகி அதன் தோற்றத்தால் இணைய வாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த உயிரினத்தின் வீடியோவை ட்விட்டரில் Massimo என்பவர் பகிர்ந்துள்ளார். வீடியோவில் "சிஸ்டிசோமா என்பது கடலில் 600 மீ-1000 மீ ஆழத்தில் வாழும் ஒரு மீன் ஆகும். அதன் உடல் முற்றிலும் தெளிவானது. அதன் கண்கள் மட்டுமே ஆரஞ்சு நிறத்துடன் காணப்படுகிறது". என்று எழுதியுள்ளார்.

இணையத்தில் வைரலான சிஸ்டிசோமாவின் வீடியோ காட்டுத்தீ போல பரவி 12 மில்லியன் பார்வையாளர்களையும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் அள்ளியுள்ளது.

சிஸ்டிசோமாவின் கண்கள் அதன் தலையின் பெரும்பகுதியில் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் இரவு நேரங்களில், நம் பார்வைக்கு எளிதில் தெரியும். அதுமட்டுமல்லாமல் இந்த மீன் வேட்டையாடும் பெரிய மீன்களிடம் இருந்து எளிதில் தப்பித்து விடும். கண்ணாடி போன்ற தெளிவான உடலமைப்பை கொண்டிருப்பதால் மீன் தண்ணீரில் இருக்கும்போது வேட்டையாடும் பெரிய மீன்கள் கன்பியூசாகி சென்றுவிடும்.

சிஸ்டிசோமாவோட இந்த உருவமும் ஒரு வகையில நல்லதான் இருக்கு. கழுவுற மீனுல நழுவுற மீன்போல இந்த மீனும் வேட்டைக்காரர்கள் கிட்ட இருந்து தப்பிச்சிடும். இந்த சிஸ்டிசோமாவ பார்த்தாலே ஜித்தன் படத்துல நம்ம ஹீரோ ரமேஷ் கேரக்டர் தான் நியாகம் வருது.

Viral Video
Thunivu: H.Vinoth-ன் டவுசர் காலம் இப்படிதான் இருந்திருக்கும்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com