'எங்களுக்கு வீடு வேணும்' - ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஆடுகள் !

ஆடுகள் தங்களுக்கு வீடு வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு அளிக்க வந்த நிகழ்வை திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளிக்க வந்த மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
ஆடுகள்
ஆடுகள் ஆடுகள்

திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த தம்பதி மரியபாஸ்கர், நம்பிக்கைராணி. இவர்கள் ஏ.வெள்ளோடு பகுதியில் உள்ள இவர்களது வீட்டின் அருகே 40 ஆடுகள், 15 குட்டி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

அரசு சார்பில் ஆடுகளுக்கு செட் போட்டுத் தரக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 3 ஆண்டுகளாக மாதந்தோறும் மனு அளித்து வருகிறார். ஆனால் 'இன்று போய் நாளை வா' என அதிகாரிகள் அலைகழிப்பதாகவும், 20 ஆயிரம் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் ஆடுகள் இல்லையென்றாலும் கூட செட் போட்டுக் கொடுக்கிறார்கள் எனப் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (24-04-2023) காலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மரியபாஸ்கர், நம்பிக்கைராணி. தாங்கள் வளர்க்கும் 6 ஆடுகளுடன் மனு அளிக்க வந்தனர். அப்போது ஆடுகளின் கழுத்தில் எங்களுக்கு செட் வேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட மனு கட்டப்பட்ட நிலையில் ஆடுகளை வைத்தே மனுவை கொடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றார்.

அவரை போலீஸார் தடுத்தி நிறுத்தி கைது செய்துவிடுவதாகக் கூறியதால், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ஆடுகளை கட்டிப்போட்டுவிட்டு தனது மனுவை கொடுத்துவிட்டு வந்தார்.

காடு மேடு அலைச்சு ஆடு மேய்க்கிற எங்களுக்கு உதவ மறுக்கிறார்கள். எங்களை விட பாவம் இந்த வாயில்லா ஆடுகள் தான். மழையிலும் வெயிலிலும் வாடுகின்றன.

ஆடுகள் இல்லாதவர்கள் கூட, எனது ஆடுகளை படம் பிடித்து தங்கள் ஆடுகள் எனக் கூறி செட் அமைத்து கொண்டனர். ஆனால் எங்களுக்கு தான் அரசு உதவி கிடைக்கவில்லை என செய்தியாளர்களிடம் நக்கலாகக் கூறிவிட்டு சென்றார்.

ஆடுகள்
கன்றுக்குட்டியின் மனு: 'என் அம்மாவ கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா' - விழுப்புரத்தில் வினோதம்

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com