Actor விமல் ஹீரோவான கதை ! | Deiva Machan

விமல் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டார்.
விமல் ஹீரோவான கதை
விமல் ஹீரோவான கதைTimepass

1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி தமிழ்நாடு திருச்சி மணப்பாறையில் பன்னங்கொம்பு ஊரில் பிறந்தார்.

இவர் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டார்.

2010 இல், விமல் தனது உறவுக்கார பெண்ணான டாக்டர் அக்ஷயாவை காதலித்து கும்பகோணத்தில் எத்தன் படப்பிடிப்பின் போது‌ வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

பிரபுதேவாவின் ரசிகரான விமல் அவரை பார்த்து நடனம் கற்கத் தொடங்கியிருக்கிறார். பின்னர் சென்னையில் உள்ள நாடகக் குழுவான கூத்து பட்டறையில் சேர்ந்து கில்லி, கிரீடம், குருவி, பந்தயம், போன்ற படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் தலையை காட்டியிருக்கிறார்.

மூன்று தேசிய விருது பெற்ற 'காஞ்சிவரம்' படத்திலும் விமல் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய “பசங்க” படத்தில் தான் விமல் முதல்முறையாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

'வாகை சூட வா' படத்திற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது வாங்கியிருக்கிறார்

தனது ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு புதுவிதமான விளையாட்டு, மேஜிக் அல்லது குறும்புத்தனமான பாடல்களை கொடுத்து மக்களை ஈர்த்தவர் விமல்.

பசங்க படத்தில் வரும் பேப்பர் கேமரா காட்சி, கைகளை மடக்கி மூக்கைத் தொடும் காட்சி மற்றும் களவாணி படத்தில் வரும் "டம்மா டம்மா டம்ம......ஹோ" என்ற நா பிறழ் வரிகள் , சீட்டுக்கட்டு மேஜிக் சீன் போன்றவை இன்றளவும் சிறுவர்கள் பார்த்து விளையாடி வருகின்றனர்.

லோ பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு கமர்ஷியல் ஹிட் கொடுப்பதில் விமல் தான் முதல் சாய்ஸ். 2011-2014 வரை 17 படங்களில் நடித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸ் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் இப்போது எடுக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சரவணா சக்தி இயக்கத்தில் 'குலசாமி' மற்றும் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் 'தெய்வ மச்சான்' என இரண்டு படங்கள் விமல் நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது

கலையரசி.சு

விமல் ஹீரோவான கதை
Memes : Vimal vs விமல் - ஒரே நாளில் இரண்டு படங்கள் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com