அறம் வெல்லும்: Vikraman-னிடம் Bigg Boss என்ன பேசினார்? | Azeem Shivin

“இதென்ன புரட்சி? நீங்கள் வெளியில் சென்ற பிறகு நிகழ்த்தப் போகும் புரட்சிகளை காண ஆவலாக இருக்கிறேன். ஆல் தி பெஸ்ட்" என்று வாழ்த்தினார் பிக் பாஸ்.
Vikraman
Vikramantimepass

நேற்று முடிவடைந்த பிக் பாஸ் போட்டியில், வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார். ரன்னர் அப்-பாக விக்ரமன் அறிவிக்கப்பட்டார். அறிவிப்பு மேடையில், ரன்னர் அப் விக்ரமனுக்கும் பிக் பாஸுக்கும் நடந்த உரையாடலைப் பார்ப்போம்.

"அறம் வெல்லும் என்கிற சொல்லுடன் வீட்டுக்குள் வந்த நீங்கள், கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல், நெறி தவறாமல் செயல்பட்டீர்கள். எந்தத் தவறு கண்ணில் பட்டாலும் தன்மை மாறாமல் தட்டிக் கேட்டீர்கள். டாஸ்க்குகளை போட்டி மனப்பான்மையுடன் ஆடினீர்கள். சக மனிதரை மதிக்கத் தெரிந்த தோழரே. உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள்” என்று பிக் பாஸ் கூறினார்.

“இனிமே உங்களை தோழர்ன்னு கூப்பிடறேன்” என்று மகிழ்ச்சியாகத் தெரிவித்தார் விக்ரமன்.

இதற்கு பின், விக்ரமன் தொடர்பான வீடியோ ஒளிப்பரப்பப்பட்டது.

"எளிய மக்களின் குரலும் ஒலிக்கிற வகையில், இத்தனை பெரிய மேடையில் வெளிச்சம் தந்திருக்கிறீர்கள். இதுவொரு புரட்சி. அறம் வெல்லும்” என்று கையை உயர்த்தி சொன்னார் விக்ரமன். அதற்கு, “இதென்ன புரட்சி? நீங்கள் வெளியில் சென்ற பிறகு நிகழ்த்தப் போகும் புரட்சிகளை காண ஆவலாக இருக்கிறேன். ஆல் தி பெஸ்ட்" என்று வாழ்த்தினார் பிக் பாஸ்.

Vikraman
Vikraman vs Azeem : 'வாத்தி' விக்ரமன் கடந்து வந்த பாதை | BiggBoss Tamil 6

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com