Kim Jong-Un : வடகொரியாவின் வினோதமான சட்டங்கள்

நம்ம ஊர்லலாம் ஐபோன், லேப்டாப் இல்லாம ஒருத்தர பாக்குறதே கஷ்டம். ஆனா வடகொரியால ஐபோன் ,லேப்டாப்பே இருக்கக்கூடாதுனு சட்டம் போட்டிருக்காங்க.
வடகொரியாவின் கடுமையான சட்டங்கள்
வடகொரியாவின் கடுமையான சட்டங்கள்Timepass

"இந்த உலகத்தையே ஒரு கலக்கு கலக்கு போறேண்டா" அப்படின்னு நிறைய ரூல்ஸ் & ரெகுலேஷன் போடறதுல உலகத்திலேயே வடகொரியாவ மிஞ்ச ஆளே கிடையாதுன்னு சொல்லலாம். அப்படிப்பட்ட வினோதமான விதிமுறைகளை யோசிக்கிற வித்தியாசமான விஞ்ஞானிதான் வடகொரியா பிரதமர் கிம் ஜாங்-உன்.

வடகொரியா சார்ந்த புகைப்படங்கள் "கடல்லயே இல்லையாம் !" சொல்ற மாதிரி நெட்ல நம்மளால பார்க்கவே முடியாது. இருந்தாலும் சில முக்கியமான நிகழ்வுகளுடைய புகைப்படங்கள் மட்டும் அவங்க வெளியிடுவாங்க.

உலக நாடுகள்லயே "பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை மேகலை"ங்கிற ரொம்பவே ரகசியமான நாடுதான் இந்த வடகொரியா. "ஹிட்லர் போல உங்க அண்ணன் இம்சம் பண்ணுறான்னே என்ன" அப்படிங்கிற மாதிரி கிம் வட கொரியா மக்களுக்கு இம்சையை கொடுத்துட்டு இருக்காரு.

அப்படி கடுமையான ரூல்ஸ்ஸ முதல்ல அவர் மனைவிக்குதான் விதிச்சிருக்காரு. அப்பறம்தான் நாட்டு மக்களுக்கு ரூல்ஸ்ஸ போட்டிருக்காப்ல கிம். அப்படி வினோதமான 21 சட்டங்களை தொகுத்து இதுல பார்க்கலாம் ..

1. வெளிநாட்டு திரைப்படங்கள், பாடல்களுக்கு அனுமதியில்லை :படிக்காதவன் படத்துல விவேக் "குண்டூர் உன்து நெல்லூர் என்து ; காக்கிநாடா உன்து பாவாட நாடா என்து " சொல்ற மாதிரி வெளிநாட்டு சினிமா பாக்கக்கூடாது , பாடல்களை கேட்கக்கூடாதுன்னு ஒரு சட்டத்தை விதிச்சிருக்காரு கிம். அதையும் மீறி வெளிநாட்டு சினிமா பார்த்தாலோ பாட்டு கேட்டாலோ புடிச்சு ஜெயில்ல போடுவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு மனுஷன்!! அது மட்டுமில்லாம அமெரிக்கா படங்கள் & ஆபாச படங்களை சப்ளை பண்றவங்களுக்கு மரண தண்டனை நிச்சயமாம்!

2. சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வது குற்றமாகும் : "இந்தக் கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்" அப்படிங்கிற மாதிரி "உள்ளூர்காரங்க கிட்ட மட்டும் தான் போன்ல பேசிக்கணும் ,வெளிநாட்டுக்காரன் கிட்ட பேசக்கூடாது தம்பி"னு சொல்லி வெச்சிருக்காரு. அப்படி 2007ல ஒரு தொழிற்சாலை முதலாளி அவரோட தொழிற்சாலை அடித்தளத்தில 13 தொலைபேசிகளில் சர்வதேச அழைப்புகளை செஞ்சதா குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 1,50,000 பேருக்கு முன்னாடி தூக்குல போட்டு இருக்கார் கிம்.

3. தலைவருக்கு அவமானமா? மரண தண்டனை மட்டுமே ! கிம்மை சந்திக்குறப்போ அவர அவமானப் படுத்துற மாதிரி ஏதாவது பண்ணிட்டோம்னா கண்டிப்பா உங்களுக்கு மரணம் தண்டனைதான். அதிலும் முக்கியமா அவரை சந்திக்க போகும்போது தூங்கிட்டா அதுக்கப்பறம் நீங்க ஒரேடியா தூங்க வேண்டிவரும். அப்படித்தான் 2015ல் வடகொரியாவோட பாதுகாப்பு அமைச்சர் யோங்-சோல் கொஞ்சம் லைட்டா கண்ணசந்துட்டாரு. அதுக்காக நூறு பேருக்கு முன்னால விமான எதிர்ப்புத் துப்பாக்கியா வெச்சு சுட்டு கொல்லப்பட்டிருக்கார். "உங்க எல்லாருக்கும் ஒரு பிரச்சனைனா, இந்த கவுன்சிலர்ர தேடி வரிங்க, இந்த கவுன்சிலருக்கே ஒரு பிரச்சனைனா எங்க போறது !"னு சிறுத்தை படத்துல வர டயலாக் உங்களுக்கு ஞாபகம் வருதா !!

4. மூன்று தலைமுறை தண்டனை : "உன்ன பெத்த கடமைக்கு என்ன செய்யணுமோ செஞ்சுட்டடா"னு சொல்ற மாதிரியான சட்டம் தான் இது. வடகொரியால ஒருத்தர் தப்பு செஞ்சுட்டா, அவரை மட்டும் தாண்டிக்காம. அவரோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அவரோட குழந்தைங்கனு ஒட்டுமொத்த குடும்பத்தையே அரெஸ்ட் பண்ணி தண்டனை கொடுப்பாங்களாம்.

5. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹேர் ஸ்டைல் மட்டுமே : குசேலன் படத்துல வடிவேலு சொல்ற மாதிரி "ஸ்டெப் கட்டிங், ஸ்நேக் கட்டிங் ஜம்பர் கட்டிங், பம்பர் கட்டிங், சச்சின் கட்டிங், சல்மான் கட்டிங்"னு எந்த கட்டிங்குமே அங்கே கிடையாது. ஆண்களுக்கு 10 ஹேர் ஸ்டைல், பெண்களுக்கு 18 ஹேர் ஸ்டைல்னு மொத்தமே 28 ஹேர் ஸ்டைல்தான். இதை தவிர வேற எந்த ஸ்டைலும் அங்கே வெட்ட முடியாது. ஆனா இந்த 28 ஹேர் ஸ்டைல்ல கிம்மோட ஹேர் ஸ்டைல் அடங்காது. ஏன்னா அவரு தனித்துவமா தெரியனும்னு நினைக்கிறாராம். அது மட்டும் இல்லாம திருமணமாகாத பெண்களுடைய முடியின் நீளத்தை விட திருமணமான பெண்களுடைய நீளம் கம்மியாதான் இருக்கணும்னு சொல்லியிருக்காங்க.

6. சொந்த விதியில் கூடை பந்து விளையாட்டு : "என் வழி தனி வழி"ன்னு சொல்ற மாதிரி கூடைப்பந்து விளையாட்டு விதிமுறையை வடகொரியா அரசு மாத்தியிருக்கு. ஒரு ஸ்லாம் டங்க்கு 3 புள்ளி, 2 இல்ல, விளையாட்டுடைய கடைசி மூனு நிமிஷத்துல 2-புள்ளி ஷாட்கள் 8 புள்ளிகளுக்கு மதிப்பு. நீங்க 3 ஷாட்ட தவறவிட்டா, ஒரு புள்ளிய கழிச்சிடுவாங்க.

7. தேசிய தலைநகரில் வாழ அனுமதி தேவை : "இது எங்க ஏரியா"னு ரிசர்வ் பண்ண இடம்தான் வட கொரியா தலைநகர் பியோங்யாங். இந்த தலைநகரத்தில் வாழனும்னா செல்வாக்கு இருக்கனும், இல்ல வாழ்க்கையில வெற்றி அடைஞ்சவங்களா இருக்கனும், இல்ல பணக்காரங்களா இருக்கனும். அதை தாண்டி சாதாரண மக்கள் வாழனும்னா எக்கச்சக்க பர்மிஷன் வாங்க வேண்டியிருக்கும்.

8. மாணவர்கள் அவர்களுடைய மேசைகள், நாற்காலிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் : வட கொரியால ஸ்கூல் படிக்கிற பசங்க, அவங்க உட்கார வேண்டிய பெஞ்ச் & சேர்க்கு அவங்கதான் காசு கட்டணுமாம். ஸ்கூல் பீஸ்ல இத பண்ண மாட்டாங்களாம்.

9. வட கொரியாவில் பைபிள் தடை : நம்ம ஊர்லலாம் ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லிம்னு பாகுபாடுகள் இருந்தாலும், எல்லாரும் ஒன்னுமண்ணா இருப்போம். ஆனா வடகொரியால பைபிளை வெச்சிருந்தாலே குற்றமாம். பைபிள் மேற்கத்திய கலாச்சாரங்களை மக்கள்கிட்ட இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுங்கிற காரணத்துக்காக பைபிளுக்கு அங்கே டை விதிச்சிருக்காங்க

10. ஐபோன்கள் & மடிக்கணினிகள் இல்லை : நம்ம ஊர்லலாம் ஐபோன், லேப்டாப் இல்லாம ஒருத்தர பாக்குறதே கஷ்டம். ஆனா வடகொரியால ஐபோன் ,லேப்டாப்பே இருக்கக்கூடாதுனு சட்டம் போட்டிருக்காங்க.

11. கடுமையான சுங்க விதிகள் : "கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா"னு விவேக் சொல்ற மாதிரி, நீங்க ஒரு சுற்றுலா பயணியா இருக்கீங்கனா, நீங்க கொண்டு போற படம், பாடல், எழுதப்பட்ட பொருட்கள்னு எல்லாத்தையுமே சுங்க அலுவலர்கள் செக் பண்ணி, அதுக்கான கட்டணத்த விதிப்பாங்களாம்‌. அந்த கட்டணமுமே ரொம்ப காஸ்ட்லியா தான் இருக்குமாம்..

12.வட கொரியா சிறை முகாம்கள் : வடகொரியால இருக்க சிறை பெரிய முகம் மாதிரிதான் இருக்குமாம். கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகளும் அவங்க குடும்ப உறுப்பினர்களும் அங்க இருக்காங்களாம். குற்றத்துக்கான தண்டனையை குற்றவாளிக்கு மட்டும் கொடுக்காம, அவங்களுடைய குடும்பத்துக்கே கொடுக்கிறது தான் இவங்களுடைய குட் பாலிசியா இருந்துட்டு இருக்கு .

.

13. வெவ்வேறு காலண்டர் : உலகமே ஒரு காலண்டரை ஃபாலோ பண்ணும்போது வடகொரியால மட்டும் வித்தியாசமான ஒருகாலண்டரை யூஸ் பண்றாங்க. நமக்கெல்லாம் நியூ இயர் ஜனவரி 1 ; ஆனா அவங்களுக்கு நியூ இயர் கிம்முடைய பிறந்தநாளான ஏப்ரல் 15. யோவ் கிம் அநியாயம் பண்றயா

14. தேர்தலில் வாக்களிக்க ஒரே ஒரு தலைவர் : கிம்ம எதிர்த்து தேர்தல்ல நிக்க அங்க ஆப்போனன்ட்ல ஆளே இல்ல அதனால தலைவர் எப்பவும் அன்னபோஸ்ட்லதான் ஜெயிப்பாரு ! இருந்தாலும் மக்களுக்கான ஓட்டுரிமைய நியாயமா கொடுத்திருக்கார். எலக்சன்ல நிற்கிறதும் அவருதான் ; மக்கள் ஓட்டு போடுறதும் அவருக்குதான் ; கடைசில ஜெயிக்கிறதும் அவருதான் ..

15.கிம் இல் சங்- ஒரே உண்மையான தலைவர் : கம்யூனிஸ்ட் புரட்சிக்கு அப்புறம் வட கொரியாவோட முதல் தலைவர்தான் கிம் இல் சங். இவரு ரொம்ப வருஷத்துக்கு முன்னாலயே இறந்துட்டார். இறந்தாலும் பரவால்ல இவருதான் நம்ம நாட்டுக்கு நிரந்தர தலைவர்னு பிக்ஸ் பண்ணி வெச்சிருக்காங்க. இதனாலதான் இவரு அப்பறம் இவர் பையன்னு தொடர்ந்து ஆட்சியை பிடிக்க முடியுது. வாரிசு அரசியல் பண்றியா கிம் ???

16. மரிஜுவானா சட்டம் இல்லை : மரிஜுவானா வடகொரியால பயன்படுத்துற பழமையான போதை பொருள். இந்த போதை பொருளை பயன்படுத்த அங்கே தடை இருக்கு. இருந்தாலும் மரிஜுவானா செடி அந்த நாட்டு தெருக்கள்ல ரொம்ப சாதாரணமா வளருமாம். அதனால சான்ஸ் கிடைக்கிறப்ப இந்தச் செடிய பிடிங்கிட்டு "தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு"னு ஓடிடலாம்.

17.கிம் & அவரது குடும்பத்தினருக்கான அவமதிப்பு தண்டனைக்குறியது : கிம்முடைய ஆட்சியில் வாழக்கூடிய வட கொரியர்கள் எல்லாருமே கிம்க்கு மட்டும் இல்லாம அவருடைய குடும்பத்திற்கும் கீழ்படிஞ்சுதான் நடக்கனுமாம். கிம்முடைய குடும்பத்தையோ, கிம்மையோ அவமானப் படுத்துற மாதிரி ஒரு செயல் நடந்தா அதை செஞ்ச நபருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் தண்டனை கொடுக்கிறாங்க.

18. நாட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை : இவ்வளவு கொடுமைகள அனுபவிச்சிட்டு ஏன் மக்கள் இன்னும் அங்கிருந்து தப்பிக்கல அப்படி தானே கேக்குறீங்க ! வடகொரியால இருக்குறது "முதல வாயில தவளை மாட்டின மாதிரிதான்" வடகொரியால இருந்து எந்த காரணத்துக்காகவும் வேற இடத்துக்கு அவங்களால குடிப்பெயர முடியாது. சிக்கினது சிக்கனது தான் !! பாவம்பா நீங்க

19. சுற்றுலா பயணிகளுக்கான கடுமையான விதிகள் : சுற்றுலா போனவங்களுக்கும் எக்கச்சக்கமான விதிமுறைகள் இருக்கு. வடகொரியாக்கு டூர் போறவங்களுக்காக ஒரு கைடை கையோட ஏற்பாடு பண்றாங்க.அந்த நாட்டுல நாம எங்கே போனாலும் நம்மள கண்காணிக்கிறதுக்கு ஒருத்தன் இருப்பானாம். நம்ம கூடவே அவன் நடப்பானாம். உங்க நாட்டுக்கே வரமாட்டேன் போங்கடா

20.ராணுவ சேவை கட்டாயம் : ஆண்கள் 10 வருஷமும், பெண்கள் 7 வருஷமும் அந்த நாட்டில் இராணுவ சேவையில கட்டாயம் ஈடுபடனுமாம்.

21. தினமும் இரவு பவர் கட் : மக்கள் கிட்ட மனிதாபிமானத்தோட நடந்துக்கல,ஆனா மின்சாரத்தை பாதுகாக்கிறானாம் ! மின்சாரத்தை சேமிக்கணும்னு அங்கே இரவில் கரண்ட் கட் பண்ணிடுவாங்களாம். அது மட்டுமில்லாம மைக்ரோவேவ் அவன் யூஸ் பண்றதும் சட்ட விரோதமாம் ..

மக்களுக்காக ரூல்ஸ் போடலாம் ! ஆனால் ரூல்ஸ் போடுறதுக்காகவே மக்களை வெச்சிருக்கியேப்பா நீ.. இந்த வினோதமான விதிமுறைகளை கேள்விப்பட்டதும் நமக்கே "எப்புட்றா"னு ஆகிடிச்சு..இதெல்லாம் உங்களுக்கே நியாயமா கிம் ???

நெ.ராதிகா

சேலம்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com