தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'

'ஏன் ஹோம் ஒர்க் செய்யல' என்று டீச்சர் அடித்தால், ''அறிவாலயத்தில் எவ்ளோ காசு வாங்கினீங்க. ஆயிரம் ரூபாய் வச்சுக்கோங்க' என்று டீச்சரிடமே பேரம் பேசியிருப்பார்.
அண்ணாமலை
அண்ணாமலைடைம்பாஸ்

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம் தொடர்.

முதல் வாரமாக, இந்த வாரம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பள்ளிக் காலத்தைக் காண ஒரு படகோட்டி செல்லலாம்.

'பெரிய பையனாகி என்ன ஆவீங்க?" என்று டீச்சர் கேட்டால், 'ஐஏஎஸ் படிச்சு, விவசாயம் பாத்து, அரசியல்வாதி ஆகணும் டீச்சர்' என்று பதில் கூறி, 'பசங்க' பட அன்புக்கரசு ஐஏஎஸ்-க்கே டப் கொடுத்திருப்பார்.

தினமும் பள்ளி முடிந்தவுடன் மற்ற மாணவர்கள் எல்லாரும் பவர் ரேஞ்சர்ஸ், சுட்டி டீவி என பார்க்கும்போது, அண்ணாமலை மட்டும் ராஜ் டீவியில் ஆட்டுக்கார அலமேலு படத்தை ரிப்பீட் மோட்டில் பார்த்திருப்பார்.

அண்ணாமலை
பாஜக தலைவராக அண்ணாமலை - சாதனைகளும் சோதனைகளும்

'ஏன் ஹோம் ஒர்க் செய்யல' என்று டீச்சர் அடித்தால், ''அறிவாலயத்தில் எவ்ளோ காசு வாங்கினீங்க. நானும் தர்றேன். ஆயிரம் ரூபாய் வச்சுக்கோங்க' என்று டீச்சரிடமே பேரம் பேசியிருப்பார். இதைக் கேட்டு கோபமான டீச்சர் அவரை தலைமை ஆசிரியரிடம் கூட்டிச் சென்றால், "எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடக முகம். அதை இங்கே காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன்." என்று தலைமை ஆசிரியரிடமும் தன் சிங்க முகத்தைக் காட்டி கர்ஜித்திருப்பார்.

கடைசியில், தலைமை ஆசிரியரிடம் 'மன்னிப்பு கடிதம்' எழுதிக் கொடுத்து, தன் பாரம்பரிய 'சிங்க பாதையில்' நடைப்பேட்டு வகுப்பறை திரும்பி இருப்பார்.

'ராகவன்', 'கே.ராகவன்', 'டி.ராகவன்', 'கே.டி.ராகவன்' போன்ற பெயர்களை விரும்பாத அண்ணாமலை, அப்பெயர்களைக் கொண்ட மாணவர்கள் வகுப்பறையில் சேட்டைச் செய்தால், அதை படம் பிடித்து வெளியிட்டுவிடுவார்.

ஒத்த ஓட்டு வாங்கி க்ளாஸ் லீடர் பதவியில் தோற்றாலும், 'பக்கத்து க்ளாஸில் இருந்து சாக் பீஸ், டஸ்டர் கடன் வாங்கும் அணி', 'லன்ச் பாக்ஸில் மேகி திருடும் அணி', 'டாய்லட்டில் டீச்சர் பேரைக் கிறுக்கும் அணி', 'ஹோ, ஒர்க் நோட்டை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வரும் அணி' என சகட்டுமேனிக்கு அணிகளை உருவாக்கி, தன் சகாக்களுக்கு அணித் தலைவர் பதவி கொடுத்திருப்பார்.
அண்ணாமலை
'அண்ணாமலை ஆர்மி' - டைம்பாஸ் மீம்ஸ்

"ஸ்கூலுக்கு போக உனக்கு ரேஞ்சர் சைக்கிள் வேணுமா? ஹெர்குலஸ் சைக்கிள் வேணுமா?" என பெற்றோர் கேட்டால், "எனக்கு புல்புல் பறவைதான் வேணும். அதுலதான் நான் ஸ்கூலுக்கு போவேன்" என தன் ஆசையைச் சொல்லி பெற்றோரையே அரண்டு போக வைத்திருப்பார்.

"என்னோட முருகன் சித்தப்பா புதுசா கேபிள் டிவி கடை ஆரம்பிச்சுருக்கார். இன்னும் ஆறு மாசத்துல எல்லா கார்ட்டூன் சானல்களையும் என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவேன்” என போகோ, ஜெட்டிக்ஸ் போன்ற சானல்களுக்கு பகிரங்கமாகவே அண்ணாமலை மிரட்டல் விடுத்திருப்பார்.

தனக்குப் பிடிக்காத ஆசிரியர்கள் மீது மாதம் ஒரு முறை ஊழல் பட்டியலை அவிழ்த்துவிட்டிருப்பார். ஆதாரம் கேட்டால், அடுத்த ஆசிரியரின் ஊழல் பட்டியலுக்கு தவ்வி இருப்பார்.

தன் நண்பர்களால், 'கேன்டீன் சிங்கம்' என அழைக்கப்பட்டிருப்பார்.

பிடி ப்ரீடியர்ட்களைக் கணக்கு டீச்சர் அபகரித்து விடுவதை எதிர்த்து, தன் நண்பர்களுடன் தலைமை ஆசிரியர் அறை வாசலில் போராட்டம் நடத்தியிருப்பார். தலைமை ஆசிரியர் அறையை விட்டு வெளியே வந்தவுடன், தன் நண்பர்களை அப்படியே விட்டுவிட்டு, "டுய்ர்ர்ர்... ஓடிட்டேன்ல.. வரட்டாஆஆஆ.." என ஆட்டோவைப் பிடித்து எஸ்கேப் ஆகிவிடுவார்.

மாறுவேட போட்டியில் கலந்துக்கொண்டு, போலீஸ் கெட் அப், விவசாயி கெட் அப், அரசியல்வாதி கெட் அப் என கலந்துக்கட்டி, லோ பட்ஜெட் சீயான் விக்ரமாக அவதரித்திருப்பார்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com