அதிமுக மாநாடு : தக்காளி கொடுத்து மாநாட்டுக்கு அழைத்த நத்தம் விஸ்வநாதன் ! | ADMK

தாம்பூலத் தட்டில், மாநாட்டிற்கான அழைப்பிதழையும் தக்காளியையும் வைத்து மக்களை அழைத்தார். இந்த நிகழ்வை பழனி மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
ADMK
ADMKtimepass

வருகின்ற 20-ம் தேதி மதுரையில் அதிமுகவின் எடப்பாடி அணி தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக எடப்பாடி அணியினர் தீயாய் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்.

நாடு முழுவதும் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சில இடங்களில் கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில்தான், மாநாட்டிற்கு மக்களை அழைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சரும் எடப்பாடி அணியில் உள்ள முக்கிய தலைவருமான நத்தம் விஸ்வநாதன் நூதன வழியைப் பின்பற்றியுள்ளார்.

நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில், அதிமுக தொண்டர்களுடன் இணைந்து மாநாட்டுற்காக மக்களை அழைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தாம்பூலத் தட்டில், மாநாட்டிற்கான அழைப்பிதழையும் தக்காளியையும் வைத்து மக்களை அழைத்தார். இந்த நிகழ்வை பழனி மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

நிருபர்: மு.கார்த்திக்.

ADMK
போன ஜென்மத்தில் ஓபிஎஸ் யாராக இருந்திருப்பார்? - ஓர் அலசல்

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com