'முன்னாள் ச.ம.உ ஹெச்.ராஜா' - அது ஒரு டவுசர் காலம் | Epi 7

தனக்கு பிடிக்காத சக மாணவர்களுக்கு புதுப்புது பெயர்களை வைத்திருப்பார். உதாரணமாக, 'அகமத் அருணாசலம் கான்', 'ஜோசப் ஜானகி ராமன்', 'முகமது முத்தையா' என பட்டியல் நீண்டிருக்கும்.
ஹெச்.ராஜா
ஹெச்.ராஜாடைம்பாஸ்

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம் தொடர்.

இந்த வாரம், திமுகவுடனான கூட்டணியில் பங்கேற்று, காரைக்குடிக்கு எம்.எல்.ஏ-வாக சேவையாற்றிய முன்னாள் ச.ம.உ ஹெச்.ராஜாவின் பள்ளிக்காலத்தைதான் பார்க்கப் போகிறோம்.

1. பரிட்சையில் ஃபெயில் ஆனதற்கு டீச்சர் அடித்தால், "ஆர் யூ க்ரிஸ்டியன்? திமுகவா நீ? யூ ஆர் ஆண்டி இந்தியன்" என டீச்சரிடம் பதிலுக்கு சண்டை கட்டியிருப்பார்.

2. அடுத்த நாள், இதுகுறித்து பெற்றோரிடம் டீச்சர் புகார் அளித்தால், "நம்பாதீங்க மம்மி. இதெல்லாம் 'புனை சுருட்டுக்கள்'. ஷீ இஸ் க்ரிஸ்டியன். ஐ நோ" விளக்கம் அளித்திருப்பார்.

3. சமூக அறிவியல் தேர்வில், 'இந்தியாவின் முதல் பிரதமர் யார்?' என்ற கேள்விக்கு, 'Am not supposed to answer this question. ஆர் யூ க்ரிஸ்டியன்? திமுகவா நீ?' என ஒன் வேர்ட் கேள்விக்கு நாலு பத்திக்கு திட்டி பதில் எழுதியிருப்பார்.

ஹெச்.ராஜா
'வேட்டை மன்னனா? கடத்தல் மன்னனா?' - அது ஒரு டவுசர் காலம் | Epi 6
4. தனக்கு பிடிக்காத சக மாணவர்களுக்கு புதுப்புது பெயர்களை வைத்திருப்பார். உதாரணமாக, 'அகமத் அருணாசலம் கான்', 'ஜோசப் ஜானகி ராமன்', 'முகமது முத்தையா' என பட்டியல் நீண்டிருக்கும்.

5. "வா ராஜா.. வீடியோ கேம் சென்டருக்கு போவோம்", "எங்க இருக்கு?", "நம்ம ஹைகோர்ட் பக்கத்துல", "என்னது ஹைகோர்ட்டாவது.. ஹைகோர்ட்டாவது.." என ஏக வசனம் பேசி, அந்த நண்பனைத் திட்டித் தீர்த்திருப்பார்.

6. பள்ளியில் நடக்கும் எல்லா மாணவர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டிருப்பார். ஆனால், எல்லா தேர்தலிலும் 52 வாக்குகளுக்கு மேல் வாங்கியிருக்க மாட்டார்.

7. எக்ஸ்ட்ரா ஒரு பானி பூரி கேட்டு தராததால், "மொத Anti பூரி மைண்ட் செட்ட மாத்துங்க. இதான் உங்க திராவிட மாடலா? யூ ஆர் க்ரிஸ்டியன். திமுக வா நீ. அறிவாலத்தின் அடிமை நீ?" என, ஆக்ராவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த அப்பாவி உத்தர பிரதேசக்காரரிடம் கடிந்துக்கொட்டியிருப்பார்.  

ஹெச்.ராஜா
'LCU: Lokesh Childhood Universe' - அது ஒரு டவுசர் காலம் | Epi 4

8. எல்லா பரிட்சையிலும் தப்பதப்பாக பதில் எழுதிவிட்டு, "நான் எழுதல டீச்சர். என் அட்மின்தான் எழுதுனான்" என விளக்கமளித்ததோடு, "நாளையில் இருந்து என் அட்மினுடைய பெயரையும் அட்டென்டன்ஸில் சேருங்க" என அடம்பிடித்திருப்பார்.

9. கெமிஸ்ட்ரி லேப்பிற்கு டீச்சர் கூட்டிப் போனால், "இங்க ஒரு இந்து கோயில் இருந்தது. அத இடிச்சுட்டுதான் கெமிஸ்ட்ரிங்குற ஒரு கிரிஸ்டியன் கெமிஸ்ட்ரி லேப்-ன்ற பேர்ல இந்த சர்ச்ச கட்டியிருக்கார்"னு அறிவியல் டீச்சருக்கு அரை மணிநேரம் பாடம் எடுத்திருப்பார்.

10. 'குட் மார்னிங் சார்' என மற்ற மாணவர்கள் கூறும்பொழுது, இவர் மட்டும், "குட் மார்னிங் ஜி" என கூறி, டீச்சர்களைக் குழப்பியிருப்பார்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com