
ராஷ்டிரபதி பவனில் G20 உச்சிமாநாட்டின் இரவு விருந்துக்கான அதிகாரப்பூர்வ அழைப்பில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை 'இந்தியாவின் குடியரசுத் தலைவர்' என்று குறிப்பிட்ப்படாமல் 'பாரதத்தின் குடியரசுத் தலைவர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது, இது இந்தியாவின் பெயரை இந்தியாவிலிருந்து பாரத் என்று மாற்றுவது பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இந்த மாத இறுதியில் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயரை ‘பாரத்’ என மாற்ற மத்திய அரசு தீர்மானம் கொண்டு வரலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், பெயர் மாற்றம் நடந்தால் இந்தியா முதல் நாடாக இருக்காது. ஏனெனில் அரசியல், சமூகம் அல்லது பிற காரணங்களால் இதுவரை 10க்கும் மேற்ப்பட்ட நாடுகள் தங்கள் பெயர்களை உள்ளது.
துருக்கி - துருக்கியே
துருக்கி தனது பெயரை அதிகாரப்பூர்வமாக துருக்கியே என மாற்றியதாக 2022 ஆம் ஆண்டு அந்த நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்தார். இந்த துருக்கியே என்ற பெயர் சர்வதேச அளவில் நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் என்றார்.
சிலோன் - இலங்கை
1505 இல் போர்த்துகீசியர்கள் இந்த நாட்டைக் கண்டுபிடித்தபோது இந்த நாட்டிற்கு வழங்கிய பெயர் சிலோன் ஆகும். பின்னர், இது பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. மேலும், 1948 இல் சுதந்திரம் பெற்றது. 2011 ஆம் ஆண்டு இலங்கை என மறுபெயரிடப்பட்டது.
பர்மா - மியான்மர்
1989 இல், நாட்டின் இராணுவ அரசாங்கம் அதன் பெயரை பர்மாவிலிருந்து மியான்மர் என மாற்றியது. ஆசிய நாடு அதன் பெயரை உள்ளூர் மொழியில் எழுதும் முறையைப் பாதுகாக்க இப்படி செய்யப்பட்டது. மேலும் அதன் முன்னாள் தலைநகரின் பெயரும் ரங்கூனில் இருந்து யாங்கூனாக மாறியது.
ஹாலந்து - நெதர்லாந்து
ஜனவரி 2020 முதல் அதன் பெயரை ஹாலந்துக்குப் பதிலாக நெதர்லாந்து என்ற அதிகாரப்பூர்வமாக மாற்றியது. இது சர்வதேச கலாச்சாரம் மற்றும் நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சந்தைப்படுத்தல் நடவடிக்கையாகும்.
பெர்சியா - ஈரான்
நவீன கால ஈரான் 1935 வரை வரலாற்று ரீதியாக பெர்சியா என்று அழைக்கப்பட்டது. நாட்டிற்கான புதிய தொடக்கத்தைக் உருவாக்கும் வகையில் பெர்சியா என்ற பெயர் ஈரான் என்று மன்னர் ரேசா ஷாவால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
செக் குடியரசு - செக்கியா
நாட்டின் பெயரை எளிதாக்குவதற்காக, 20 ஆண்டுகள் விவாதிக்கப்பட்டு பின் செக் குடியரசு ஏப்ரல் 2016 இல் அதன் பெயரை செக்கியா என்று மாற்றியது.
சியாம் - தாய்லாந்து
சியாமின் பெயர் தாயிலாந்து என மாற்றப்படுவது நடக்கவில்லை. இது 1939 ஆம் ஆண்டு அந்நாட்டை ஆண்ட சர்வாதிகாரியால் வைக்க்கப்பட்டது அந்தப் பெயர். மேலும் தாய்லாந்து என மாறுவதற்கு முன்பு 1946 - 1948 வரை சுருக்கமாக சியாம் என மாற்றப்பட்டது. பின் நாட்டின் சுதந்திரத்தை வலியுறுத்துவதற்கும் தாய்லாந்து மக்களின் தேசிய பெருமையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் தாய்லாந்து பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சுவாசிலாந்து - ஈஸ்வதினி
முன்னர் ஸ்வாசிலாந்து என்று அழைக்கப்பட்டது. பின் சுவிட்சர்லாந்துடனான குழப்பத்தை நீக்கி அதன் பூர்வீக பாரம்பரியத்தை தழுவிக்கொள்ள இந்த நாடு 2018 ஆம் ஆண்டில் மூன்றாம் எம்ஸ்வதி அரசால் ஈஸ்வதினி என மறுபெயரிடப்பட்டது.
கேப் வெர்டே - கபோ வெர்டே குடியரசு
இந்த நாடு 2013 ஆம் ஆண்டில், கேப் வெர்டே அதிகாரப்பூர்வமாக அதன் பெயரை கபோ வெர்டே குடியரசு என்று மாற்றியது. இது முழு போர்த்துகீசிய எழுத்துப்பிழையைப் பயன்படுத்தி ஐ.நா.வில் இந்த புதிய பெயரை பதிவு செய்தது.
காங்கோ ஜனநாயக குடியரசு
காங்கோ ஜனநாயகக் குடியரசு பல பெயர் மாற்றங்களைச் சந்தித்தது. இந்த நாடு காங்கோ ஃப்ரீ ஸ்டேட்டிலிருந்து பெல்ஜியன் காங்கோ, காங்கோ-லியோபோல்ட்வில்லே, காங்கோ குடியரசு, ஜைர் குடியரசு என மாறி, இறுதியாக, 1997 இல் காங்கோ ஜனநாயகக் குடியரசு என்று மாற்றப்பட்டது
- மு.குபேரன்.