'ரெண்டு பேருக்கும் பிடிச்சா எதுவும் தப்பில்ல' - நான் நிருபன் தொடர்-3

இமயமலை மூலிகைத் தண்ணீரைத்தான் குடிக்கிறேன். பத்து வருஷமா மீன் மட்டுமே நான்வெஜ்ஜா சாப்பிடுறேன். குடிக்கிற தண்ணிக்காகவே வருஷத்துக்கு லட்சக் கணக்குல செலவு பண்றேன்.
நான் நிருபன்
நான் நிருபன்டைம்பாஸ்

சில வருடங்களுக்கு முன்பு... ஒரு சுபயோக சுப தினத்தில்... 'மீடியா ஃப்ரெண்ட்லி' என்று பெயரெடுத்த அந்த சக்சஸ்ஃபுல் அரசியல்வாதியைப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். நல்லவர், வல்லவர் என்பதையெல்லாம் தாண்டி ஆள் காதல் மன்னர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போதும் பளபளவென தங்க பஸ்பம் சாப்பிடுவது போல மின்னுவார். பேட்டி துவங்கும் முன்பே அதை வெளிப்படையாக கேட்டே விட்டேன்.

''சார்....பத்திரிகைல பார்க்குறதைவிட நேர்ல ஆள் அழகா இருக்கீங்க. முகம்லாம் வழுவழுனு இருக்கு. சினிமால நடிக்கலாமே நீங்க?'' என்றதும், ''நிறைய பேரு கேட்டாங்க தம்பி. நமக்கு ஹீரோயினோட அப்பா, அண்ணன், மாமன், சித்தப்பா ரோல்லாம் செட் ஆகாது. ஸ்ட்ரெய்ட்டா ஹீரோ தான். அந்தக் காலத்துல நான் காலேஜ்ல படிக்கிறப்போ (புகழ்பெற்ற அந்த காலேஜ் பெயரைச் சொல்லி) ரூட்டுத் தலயா இருந்தேன்பா. ஆடாத ஆட்டம் இல்லை...போடாத வேஷம் இல்லை. நான் கல்ச்சுரல்ஸ்ல டாப்பர்ப்பா! இப்பவும் டான்ஸ் ஆடச் சொன்னா ஆடுவேன். உடம்புக்குத்தான் வயசுலாம். என்றும் என் மனசு பதினாறு நான். மனசைச் சொன்னேன் தம்பி... (அதிரச் சிரித்தார்) அவ்வளவு ஏன் தம்பி என்னோட ஃபேவரைட் ஹீரோயின் (நடிகையின் பெயர் வேணுமா என்ன?) ஜோடியா போட்டா நாளைக்கே சம்பளமே வாங்காம நடிப்பேன்..! ஏற்பாடு பண்றியா?''என்றார்.

நான் நிருபன்
தொடர்: நான் நிருபன்... சொல்ல மறந்த சம்பவங்கள்! - 1

'ஆமா...எனக்கு இப்ப அதான் வேலை பாருங்க!' என மனசுக்குள் நொந்து கொண்டேன். 

''என்ன தம்பி...அண்ணனோட முகத்தை உத்து உத்துப் பார்க்குறீங்க... செம தேஜஸா இருக்கேனுதானே? இமய மலைல இருந்து எடுத்துட்டு வந்த மூலிகைத் தண்ணீரைத்தான் குடிக்கிறேன். பத்து வருஷமா மீன் மட்டுமே நான்-வெஜ்ஜா சாப்பிடுறேன். தண்ணி தம்மு வெத்தலை பாக்கு புகையிலை எந்தப் பழக்கமும் இல்லைப்பா! குடிக்கிற தண்ணிக்காகவே வருஷத்துக்கு லட்சக் கணக்குல செலவு பண்றேன்..!" என்று வெள்ளந்தியாகச் சொன்னவர், சுதாரித்துக் கொண்டு, ''அண்ணனுக்கு ஏது இவ்வளவு பணம்னு யோசிப்பேதானே...எல்லாமே என் பூர்வீகச் சொத்துல இருந்துதான் செலவு பண்றேன் பா! தப்பா கிப்பா எழுதிப்புடாதே'' என்றார். 

அந்தப்பேட்டியில் அவரது ஃபேவரைட் சினிமாக்கள், பாடல்கள், நடிகைகளிடம் கேட்கும் டெம்ப்ளேட் கேள்வியான 'ஒரு வேளை அரசியலுக்கு வரலைனா என்னவா ஆகிருப்பீங்க?' போன்ற கேள்விகளைக் கேட்டேன். செம எனர்ஜியாக பதில் சொன்னார். நடுவில் தன் வீரதிர பிரதாபங்களை சொன்னார்.

நான் நிருபன்
தொடர்: நான் நிருபன் - 'Charming இசையமைப்பாளர்!'

''இப்படித்தான் தம்பி...காலேஜ் படிக்கிறப்போ ஒரு அடிதடி கேஸ் ஆகிடுச்சு. போலீஸ் வீட்டுக்கே வந்துருச்சு. எங்க அப்பா பயந்துட்டார். என்னை பரண்ல ஒளிச்சி வெச்சிட்டார். அங்கே இருந்து போலீஸ் என்ன பேசுறாங்கனு கேட்டுட்டு இருந்தேன். எங்க அப்பாகிட்ட பேசுன ஒரு இன்ஸ்பெக்டர் பொசுக்குனு கெட்ட வார்த்தைய விட்டுட்டார். அப்புறமென்ன பரண்ல இருந்து குதிச்சு கட்டி உருண்டு அந்த இன்ஸ்பெக்டரோட சண்டை போட்டேன். ஏரியா சனமும், போலீஸ்காரங்களும் விலக்கி விடலைனா அன்னிக்கு பெரிய சம்பவமா ஆகியிருக்கும். அப்புறம் கோர்ட்ல ஃபைன் கட்டி என்னை தினமும் போலீஸ் ஸ்டேஷன்ல கையெழுத்துப் போடச் சொன்னாங்க."

"அங்கே இருந்த ஒரு இன்ஸ்பெக்டரு, 'நீ தான்யா போலீஸ்க்கு ஏத்த ஆளு...பேசாம படிப்பை முடிச்சிட்டு ஐ.பி.எஸ் எக்ஸாம் எழுது!'னு சொன்னார். ரெண்டு அட்டம்ட் கொடுத்தேன் பாஸாகலை. அப்புறம் அரசியலுக்குள்ள வந்து அரசியல்வாதி ஆகிட்டேன். கடைசில  மந்திரி ஆனப்போ எனக்கு பல ஐ.பி.எஸ் அதிகாரிங்க சல்யூட் வைச்சாங்க!'' -தன் சாதனைக் கதையைச் சொல்லிவிட்டு சிரிததவரிடம் விடைபெறும்போது, அந்த எடக்குமடக்கான கேள்வியைக் கேட்டே விட்டேன்.

நான் நிருபன்
தொடர்: பழைய பேப்பர் கடை - 'பாகிஸ்தான் பிரிவினையும் அப்பளத்தின் வரலாறும்'

''ஐயா, முதல்ல என்னை மன்னிக்கணும்... இந்தக் கேள்வியை கேட்குறதுக்கு..''என்று ஏகத்துக்கும் இழுத்தேன். 

''புரியுது தம்பி...என்னோட பெர்சனல் மேட்டர் தானே..?'' என்று தேங்காய் உடைத்ததுபோல பட்டென கேட்டார். ஏனென்றால் அப்போது மீடியாவில் அதிகம் வறுபட்டவர் நம்ம சூரியனார் தான்!

''ஆமா சார்...!'' என்றேன்.

''தம்பி... தப்புல்லாம் தப்பே இல்லை...சரியெல்லாம் சரியும் இல்லை...புரியலைல... இரண்டு பேருக்கும் பிடிச்சுச்சுன்னா எந்தத் தப்பும் தப்பே இல்லை. அதுல ஒருத்தரோட வற்புறுத்தலோட நடக்குற விஷயம் தான் வன்முறை. பார்த்ததும் பிடிச்சது. நான் பாசமாத்தான் பேசினேன். அந்தப் பொண்ணுக்கும் என்னைப் பிடிக்குதுனு லேட்டா தெரிஞ்சது. அப்புறம், ஒருத்தருக்கொருத்தர் மனசு விட்டுப் பேசினோம். இப்பவும் பேசுறோம். நல்ல புரிதல் எங்களுக்குள்ள இருக்கு. வயசு வித்தியாசம்லாம் அந்தப் பொண்ணு பார்க்கலை. நம்பிக்கை என் மேல வெச்சிருக்கு. அவ்வளவுதான் தம்பி."

நான் நிருபன்
தொடர்: 90-ஸ் கிட்ஸ கிரிக்கெட் - 'Street Cricket Rules'

"என்னைப் பொறுத்தவரை நான் பண்ணினது தப்பே இல்லை. அதுக்காக என்னை நியாயப்படுத்தலை. இதை என் மனைவியே மன்னிச்சு ஏத்துக்கிட்ட அப்புறம் எவனுக்கு நான் பயப்படணும் சொல்லு. அதனால இந்த மாதிரி கேள்விகள்லாம் அபத்தமா இருக்கு!'' என்று சொன்னவர், கிளம்பும்போது, வாசல்வரை வந்தவர் புகைப்படக்காரர் பைக் எடுக்கப்போனபோது என்னை சைகையால் அழைத்தார்.

''தம்பி...அந்த பெர்சனல் மேட்டரை எடிட் பண்ணிருங்க..! என்ன இருந்தாலும் என்னோட பசங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டேன். அது கிசுகிசுவாவே இருக்கட்டும்!'' என்றார்.

இதோ...கிசுகிசுவாவே எழுதிட்டேன்!

(சம்பவங்கள் Loading...) 

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com