தமிழ்நாடு பாஜகவில் ஏன் கோஷ்டி சண்டை நடப்பதில்லை?

இப்ப உங்க பெயர் சதீஷ் என்று வையுங்கள். நீங்க தமிழ்நாடு பிஜேபியில் சேர்ந்தாலும் உங்களுக்கு ஒரு பதவி தருவார்கள். சதீஷ் பிரிவு என்று உங்கள் பெயரிலேயேகூட ஒரு பிரிவு ஏற்படுத்தி தலைவர் பதவி கொடுப்பார்கள்.
பாஜக
பாஜகடைம்பாஸ்

விமு..தமிழ்நாடு பிஜேபியில் ஏன் அடிக்கடி சண்டை நடக்கிறது. அதேநேரம் ஏன் தமிழ்நாடு காங்கிரஸ்போல கோஷ்டி சண்டை நடப்பதில்லை?

காரணம். தமிழ்நாடு பிஜேபி ஒரு விசித்திரமான கட்சி. அங்கு கோஷ்டியே இல்லை. ஒவ்வொரு தனிநபரும் தன்னை கோஷ்டியாக நினைத்துக்கொள்கிறார்கள். காரணம். அங்கு சேரும் எல்லாருக்கும் ஒரு பதவி கொடுத்துவிடுவார்கள். உலகத்தில் வேறு எங்கும் இப்படி நடப்பதில்லை. இந்தப்பட்டியலை பாருங்க.

பாஜக
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'

அண்ணாமலை - மாநில தலைவர்

நயினார் நாகேந்திரன் - சட்டமன்ற குழு தலைவர்

இராம ஸ்ரீநிவாசன் - மாநில பொது செயலாளர்

முருகானந்தம் - மாநில பொது செயலாளர்

பொன் V பாலகணபதி - மாநில பொது செயலாளர்

A.P.முருகானந்தம் - மாநில பொது செயலாளர்

P.கார்த்தியாயினி - மாநில பொது செயலாளர்

V.P.துரைசாமி- மாநில துணை தலைவர்

P.கனகசபாபதி -மாநில துணை தலைவர்

K.S.நரேந்திரன் - மாநில துணை தலைவர்

M.சக்கரவர்த்தி​ - மாநில துணை தலைவர்

டால்பின் ஸ்ரீதர் - மாநில துணை தலைவர்

K.P. இராமலிங்கம் - மாநில துணை தலைவர்

கரு நாகராஜன் - மாநில துணை தலைவர்

சசிகல புஷ்பா - மாநில துணை தலைவர்

நாராயன திருப்பதி - மாநில துணை தலைவர்

பாஜக
'பாஜக முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை' - பேரரசு

AJ சம்பத் - மாநில துணை தலைவர்பால் கனகராஜ்- மாநில துணை தலைவர்

ஒரு மாநிலத்துக்கு எத்தனை துணைத்தலைவர்கள் பாருங்க. சரி மாநில செயலாளர்களை பார்ப்போம்.

மீனாட்சி - மாநில செயலாளர்

வினோஜ் P செல்வம் - மாநில செயலாளர்

S சரவணகுமார் IRS- மாநில செயலாளர்

M.மீனா தேவ்- மாநில செயலாளர்

A.அஷ்வத்தாமன்- மாநில செயலாளர்

R.அனந்த பிரியா- மாநில செயலாளர்

ப்ரமிளா சம்பத் - மாநில செயலாளர்

S.சதிஷ்குமார் -மாநில செயலாளர்

S.G.சூர்யா -மாநில செயலாளர்

S.R. சேகர் - மாநில பொருளாளர்

சிவ சுப்பிரமணியன் -இணை பொருளாளர்

இதுதவிர தமிழ்நாடு பிஜேபியில் சிறுபான்மையினர் அணி, இலக்கிய அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, SC அணி , ST அணி , OBC அணி , விவசாய அணி, மீனவர் பிரிவு, நெசவாளர் பிரிவு, வர்த்தக பிரிவு , கலை & கலாச்சார பிரிவு, அறிவுசார் பிரிவு, கல்வியாளர் பிரிவு , வழக்கறிஞர் பிரிவு, பொருளாதார பிரிவு, முன்னாள் இராணுவ பிரிவு , அரசு தொடர்பு பிரிவு, தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடக பிரிவு, ஊடக தொடர்பு பிரிவு , அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு, பிரச்சாரம் மற்றும் வெளியீட்டு பிரிவு, ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு, பிற மொழி பிரிவு , தமிழ் வளர்ச்சி பிரிவு & வெளிநாடுவாழ் தமிழர் பிரிவு, மருத்துவ பிரிவு என்று பல பிரிவுகள் உள்ளன.

பாஜக
'போர்ச்சுகல் கொடியைக் கிழுத்தெறிந்த பாஜக தொண்டர்' - டைம்பாஸ் மீம்ஸ்

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவர்கள் உள்ளார்கள். இப்ப உங்க பெயர் சதீஷ் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்க தமிழ்நாடு பிஜேபியில் சேர்ந்தாலும் உங்களுக்கு ஒரு பதவி தருவார்கள். எந்த பிரிவென்று கேட்காதீங்க. சதீஷ் பிரிவு என்று உங்கள் பெயரிலேயேகூட ஒரு பிரிவு ஏற்படுத்தி தலைவர் பதவி கொடுப்பார்கள்.

நான் சேர்ந்தால் வளசரவாக்க பிரிவு என்று ஒன்றை என் கையில் கொடுத்து என்னை தலைவராக்கிவிடுவார்கள். ஆக தமிழ்நாடு பிஜேபியில் என்றுமே கோஷ்டி சேராது. ஒவ்வொருத்தனும் ஒரு கோஷ்டிதான். அதிகபட்சம் இரண்டு பேர் சேர்ந்தால் அங்கு ஒரு கோஷ்டி. அதனால்தான் காங்கிரஸில் நடப்பதுபோல சத்தியமூர்த்தி பவன் வாசலில் சட்டையை கிழித்து அடித்துக்கொள்வதுபோல அங்கு கோஷ்டி சண்டை நடப்பதில்லை. மாறாக அவர்கள் டிவிட்டரில், சமூக ஊடகங்களில், யூடியூப்களில் ஒருத்தரை ஒருத்தர் கடித்துக்கொள்வார்கள்.

எல்லா பிரிவுகளும், எல்லா தலைவர்களுமே ஒரு உப்புமா பதவியாக இருந்தாலும் தாங்கள்தான் மாநிலத்தலைவர் என்று நினைத்துக் கொள்வதாலேயே அங்கு ஒருத்தருக்கொருத்தர் அடித்துக்கொள்கிறார்கள்.

எழுத்தாளர் விநாயக முருகனின் முகநூல் பதிவு.

பாஜக
'பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி பாஜக' - டைம்பாஸ் மீம்ஸ்

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com