BJP Annamalai : அண்ணாமலை வாங்கிய Top 10 பல்புகள் - Part 2

'ரபேல் விமானத்தின் பாகங்களால் செய்யப்பட்டதுதான் ரபேல் வாட்ச்' என்று அண்ணாமலை வினோத விளக்கம் கொடுக்க, 'அப்போ சிலம்பரசன் எழுதினதுதான் சிலப்பதிகாரமாண்ணா?' என்று பதிலுக்குக் கேள்வி கேட்டது தமிழ்நாடு.
Annamalai
Annamalaitimepassonline

அண்ணாமலை என்ற மனிதர் தமிழகத்தில் அறிமுகமானபோது 'அதிரடி ஐ.பி.எஸ் அதிகாரி', 'கர்நாடக சிங்கம்' என்று ஏகப்பட்ட பில்டப்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர் தமிழக பா.ஜ.க தலைவரானதில் இருந்தே எதையாவது உளறி ஏகப்பட்ட பல்புகள் வாங்கிவருகிறார்.

கட்சியில் சேர்ந்த முதல்நாளே 'பாரதிய ஜனதா கட்சி'யை 'பாரதிராஜா கட்சி' என்று தவறாக உச்சரித்து தமாஷ் செய்தார். அதுமுதல் நாள்தோறும் அண்ணாமலை பல பல்புகள் வாங்கினாலும் அதில் டாப் 5 பல்புகளை மட்டும் பார்ப்போம்.

'பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களைக் கேவலமாகப் பேசுபவர்களின் கையையும் நாக்கையும் வெட்டுவேன்' என்று வீராவேசமாகப் பேசினார் அண்ணாமலை. சில வாரங்களிலேயே பா.ஜ.க. திருச்சி சூர்யா, இன்னொரு பா.ஜ.க பிரமுகர் டெய்சியை மிக மிகக் கேவலமாகப் பேசினார். அண்ணாமலை நகம்கூட வெட்டவில்லை. அதுமட்டுமல்ல, நயன்தாராவைக் கேவலமாகப் பேசியதால் தி.மு.க.வில் இருந்து கட்டம் கட்டப்பட்ட ராதாராவி இப்போதும் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்.

'10% EWS இட ஒதுக்கீடு OBC க்கும் பொருந்தும்' என்பது அண்ணாமலையின் அடுத்த உருட்டு. ஆனால் முன்னேறிய சாதியினருக்கு மட்டும்தான் இந்தப் பொருளாதார இட ஒதுக்கீடு என்பதே உண்மை.

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் '10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காது கேட்கும் மிஷின்களை வழங்குவதாக' அண்ணாமலை பெருமையுடன் அறிவித்தார். ஆனால் இண்டர்நெட்டில் தட்டி, அதன் ஒரிஜினல் விலை 345 ரூபாய்தான் என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்தார்கள். 'மன்னிச்சூ' என்று அண்ணாமலையும் மன்னிப்பு கேட்டார்.

அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச், அதன் விலை, ரசீது பற்றிக் கேள்விகள் எழ, 'ரபேல் விமானத்தின் பாகங்களால் செய்யப்பட்டதுதான் ரபேல் வாட்ச்' என்று அண்ணாமலை வினோத விளக்கம் கொடுக்க, 'அப்போ சிலம்பரசன் எழுதினதுதான் சிலப்பதிகாரமாண்ணா?' என்று பதிலுக்குக் கேள்வி கேட்டது தமிழ்நாடு.

'இந்த வாட்சுல நீங்க மணி பார்க்கக்கூடாது, என் தேசபக்தியைத்தான் பார்க்கணும்' என்று அர்ஜூன் உருட்டு உருட்ட, 'அதெல்லாம் இருக்கட்டும். வாட்ச் பில் எடுங்க. நாங்க பார்க்கணும்' என்றார்கள். 'இந்தா தந்துடறேன், ஏப்ரல் வரைக்கும் பொறுத்துக்கங்க' என்று அடுத்த பல்பு வாங்கினார் அண்ணாமலை.

ரபேல் விமானத்துக்கு அடுத்து உள்ளூர் விமான விவகாரத்தில் அண்ணாமலை வாங்கியதுதான் லேட்டஸ்ட் பல்ப். அண்ணாமலையும் பா.ஜ.க. எம்.பி தேஜஸ்வி யாதவ்வும் விமானத்தில் பயணித்தபோது எமெர்ஜென்சி கதவைத் திறந்ததாக செந்தில் பாலாஜி பொளேர் குற்றச்சாட்டை முன்வைத்தார். முதலில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவேயில்லை என்று சூடம் கொளுத்தினார் அண்ணாமலை. ஆனால் தேஜஸ்வி மன்னிப்பு கேட்ட விவகாரம் நாடாளுமன்றத்திலேயே வெளியானது.

இப்போது 'எமெர்ஜென்சி கதவை ஸ்க்ரூ எல்லாம் வைத்துத்தான் திறக்க வேண்டும்' என்று பிரஸ்மீட்டில் விளக்கம் சொல்ல, அதை எப்படி ஈஸியாகத் திறக்கலாம் என்று வீடியோவே போட்டு அண்ணாமலையின் மூக்கை உடைக்கிறார்கள் இணையவாசிகள்.

இப்படியே லிஸ்ட் போட்டா எவ்வளவோ எழுதலாம். 'இப்படி அண்ணாமலை தொடர்ச்சியாக பல்பு வாங்கினா பா.ஜ.க தமிழகத்தில் பியூஸ் போன பல்பு ஆகிவிடும்' என்று கதறுகிறார்கள் காவி பாய்ஸ்.

Annamalai
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com