
புது டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் மாநிலத் தலைவர்கள் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், தலைவர்களுக்கு தங்க மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் உணவுகள் பரிமாறப்பட உள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள IRIS Metalware இன் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் பபுவால் கூறுகையில், இந்தியாவின் புகழ்பெற்ற கலாச்சார பாரம்பரியம், பூக்கள், மயில், நமது தேசிய விலங்கு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட சுமார் 15,000 வெள்ளிப் பொருட்கள் ஜெய்ப்பூர், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்ட கைவினைஞர்களை கொண்டு சுமார் 50,000 மணி நேரங்கள் செலவழிக்கப்பட்டு இவை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு விருந்தினர்கள் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் போது ஆடம்பரமான இரவு உணவிற்குப் பயன்படுத்தப்படும் மேட்-டு-ஆர்டர் டேபிள்வேர்கள் சில்வவேர்களில் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மதிய உணவுக்காக பெரும்பாலான மேஜைப் பாத்திரங்களில் எஃகு அல்லது பித்தளை அடித்தளம் அல்லது வெள்ளியின் நேர்த்தியான பூச்சுடன் இரண்டின் கலவையும் உள்ளது. அதே சமயம் வரவேற்பு பானங்களை வழங்குவதற்கு கண்ணாடிகளை எடுத்துச் செல்லும் தட்டுகள் போன்ற சில பொருட்களில் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும் என்று லக்ஷ் பபுவால் தெரிவித்தார்.
தலைவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் :-
G20 உச்சிமாநாட்டில் போது தலைவர்களுக்கு இரண்டு நாட்களும் முழுமையாக சைவ உணவுகளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2023ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டு என்பதால் தினை வகைகளில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியின் உள்ள தாஜ் மான்சிங், ராயல் பிளாசா, லீலா பேலஸ் உள்ளிட்ட 11 ஹோட்டல்களில் 7 வகை தினைகளை பயன்படுத்தி 500க்கும் மேற்ப்பட்ட உணவு வகைகள் 700க்கும் அதிகமான சமையல் நிபுணர்களால் தயாரிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்தியாவின் பிரதான உணவுகலான ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவான ராகி தோசை , வாழைப்பூ வடை போன்றவை பரிமாறப்படுகிறது.
- மு.குபேரன்.