'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி' - அது ஒரு டவுசர் காலம் | Epi 9

எல்லா பேச்சு போட்டிகளிலும் கலந்துக்கொண்டிருப்பார். சமையல் குறித்த பேச்சு போட்டியில் கலந்துக்கொண்டு, சமயம் குறித்தும், தீபாவளி குறித்த பேச்சு போட்டியில் திராவிடம் குறித்து பேசியிருப்பார்.
ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவிடைம்பாஸ்

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம்' தொடர்.

இந்த வாரம், 'சனாதன சக்திமான்', 'ராம ராஜ்ஜியத்தின் ராமராஜன்' தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பள்ளிக்காலத்தைதான் பார்க்கப் போகிறோம்.

Vasco Da Gama Discovered India in 1498 என சோசியல் சயின்ஸ் புத்தகத்தில் எழுதியிருந்தால், அதை அடித்து விட்டு, ரிஷிகளாலும், சனாதன தர்மத்தாலும் டிஸ்கவர் செய்யப்பட்டதுதான் பாரதம் என தன் புத்தகத்தில் மட்டுமல்ல, வகுப்பில் உள்ள அனைவரின் புத்தகத்திலும் எழுதியிருப்பார்.

அதேபோல், தமிழ் பாடப்புத்தகத்தில், 'தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்' எழுதியிருப்பதை அழித்துவிட்டு, 'திராவிடம் ஒரு பாவச் செயல், திராவிடம் ஒரு பெருங்குற்றம், திராவிடம் ஒரு மனிதத் தன்மையற்ற செயல்' என தன் புத்தகத்தில் மட்டுமல்ல, தமிழ் வாத்தியார் ராமசாமியின் புத்தகத்திலும் அடித்து எழுதி, பிரம்படி வாங்கியிருப்பார்.

ஆர்.என்.ரவி
'LCU: Lokesh Childhood Universe' - அது ஒரு டவுசர் காலம் | Epi 4

'Oh God Beautiful.. Oh God Beautiful..' என மொத்த வகுப்பும் English Poem படிக்கும்போது, திடீர் என்று எழுந்து, "வெளிநாட்டவர் உருவாக்கிய வழியில் படித்ததால் இந்திய வரலாறு மறைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, நாம் நம்முடைய சாமி பாடல்களைப் பாடுவோம்" எனக் கூறி, "திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலைக்கோட்டைடா.." என பாடியிருப்பார்.

எல்லா பேச்சு போட்டிகளிலும் தவறாமல் கலந்துக்கொண்டிருப்பார். சமையல் குறித்த பேச்சு போட்டியில் கலந்துக்கொண்டு, சமயம் குறித்து பேசியிருப்பார். தீபாவளி குறித்த பேச்சு போட்டியில் கலந்துக்கொண்டு, திராவிடம் குறித்து பேசியிருப்பார். பேச்சு போட்டி நடத்தியவர்களே பேச்சு மூச்சு இல்லாமல் தெறித்து ஓடியிருப்பார்கள்.

ஜெயம் ரவியைப் போல நாமும் நம் பெயருடன் ஒரு அடைமொழியை சேர்த்துக்கொள்ளலாம் என ஆசைப்பட்டு, 'ரனாதன ரவி' என மாற்றி மாஸ் காட்டியிருப்பார்.

ஆர்.என்.ரவி
'வேட்டை மன்னனா? கடத்தல் மன்னனா?' - அது ஒரு டவுசர் காலம் | Epi 6

'ரவி நீ இந்த ஸ்போர்ட்ஸ் டேல ப்ளாக் ஹவுஸ்' என பிடி வாத்தியார் சொன்னால், 'எனக்கு கறுப்பு ட்ரெஸ் புடிக்காது. நான் தனியா 'ராம ராஜ்ஜியம்'னு ஒரு ஹவுஸ் உருவாக்கியிருக்கேன். இந்தா பாத்தீங்களா காவி ஸ்போட்ஸ் டீசர்ட்' என பிடி வாத்தியாரை பேந்த பேந்த முழிக்க வைத்திருப்பார்.

பத்தாம் வகுப்பில் வரும் சச்சின் எஸ்ஸேவை ஆங்கில வாத்தியார் நடத்தும்போது ரவி எழுந்து, "சச்சின் எஸ்ஸேவில் சச்சினுக்குள் இருக்கும் ஆன்மீகம் சுத்தமாக மறைக்கப்பட்டு, வெறும் விளையாட்டு வீராக மாற்றப்பட்டுள்ளார். போன வாரம் கூட சச்சிதானந்த ரிஷிகள் எங்கள் தெருவுக்கு வந்தபோது, ஆன்மீகத்தைப் பற்றி நிறைய பேசினார். கிரிக்கெட்டைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது டீச்சர்" என பாவமாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

'பெரியவனா ஆனவுடனே என்ன ஆவிங்க?' என டீச்சர் கேட்டால், 'நானும் உங்கள மாதிரி டீச்சர் ஆவேன் மிஸ்' எனப் பதில் சொல்லியிருப்பார். 'டீச்சர் ஆகி, என்ன பண்ணுவீங்க?' என டீச்சர் திரும்பிக் கேட்டால், 'தினம் ஸ்கூலுக்கு வருவேன். ஆனா, எந்த பரிட்சைப் பேப்பரையும் திருத்தமாட்டேன், கையெழுத்து போடமாட்டேன் மிஸ். என் டேபிள்லயே அப்டியே போட்ருவேன் மிஸ்" என கெத்தாகச் சொல்லியிருப்பார்.

ஆர்.என்.ரவி
'முன்னாள் ச.ம.உ ஹெச்.ராஜா' - அது ஒரு டவுசர் காலம் | Epi 7

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com