'பிரியாணி தொண்டன், ஐ.டி விங் தொண்டன்' - கட்சி தொண்டர் வகைகள்

தொண்டர்வாலா படையில் எத்தனை டைப் ஆட்கள் இருக்காங்கனு தெரிஞ்சுக்கலாமா? இது தரையில் படுத்துக் கும்பிடு போட்டுக்கிட்டே எழுதப்பட்ட ஓர் அரசியல் ஆய்வுக் கட்டுரை பாஸ்.
கட்சி தொண்டர்
கட்சி தொண்டர் டைம்பாஸ்

அரசியல்வாதிகள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. பட், அரசியல்வாதிகள் மட்டும் அப்படி இல்லை, நாங்களும் ஆறு வித்தியாசங்களோடதான் இருக்கோம்னு ஒவ்வொரு தொண்டரும் சொல்லாம சொல்லிட்டு இருக்காங்க.

அப்படி இந்தத் தொண்டர்வாலா படையில் எத்தனை டைப் ஆட்கள் இருக்காங்கனு தெரிஞ்சுக்கலாமா? இது தரையில் படுத்துக் கும்பிடு போட்டுக்கிட்டே எழுதப்பட்ட ஓர் அரசியல் ஆய்வுக் கட்டுரை பாஸ்.

கடைசி வரிசைத் தொண்டன் :

தொண்டர்கள்லயே ரொம்ப முக்கியமான தொண்டர்ஸ் க்ரூப் யார்னா அது இந்த அடிமட்ட `லாஸ்ட் ரோ' தொண்டர்களாத்தான் இருப்பாங்க.

கட்சிக்கு என்னதான் எப்பவும் உண்மையா உழைச்சாலும் கடைசிவரைக்கும் எந்த முன்னேற்றமும் கிடைக்காம அடிமட்டத் தொண்டனாவே இருந்து அப்படியே காணாமப் போறங்கதான் இந்த லாஸ்ட் ரோ செட்ல வருவாங்க பாஸ்.

இவங்களால என்னதான் முன்னேறவே முடியலைனாலும் ரொம்ப நேர்மையா கட்சியைக் கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காம இருப்பாங்க.

#அந்த மனசு இருக்கே... அதான் கடவுள்!

பிரியாணி தொண்டன் : இந்த பிரியாணி தொண்டர்கள் எல்லாம் எப்போ உருவாகுறாங்கனு யாருக்குமே தெரியாது. பார்த்ததும் காதல், இன்ஸ்டன்ட் காபி, மெசேஜ் பண்ணதும் ப்ளாக் அப்படிங்கிற மாதிரி திடீர்னு உருவாகுறவங்கதான் இந்த பிரியாணி தொண்டர்கள்.
கட்சி தொண்டர்
கட்சி ஆரம்பிக்கத் தேவையான ஏழு அம்சங்கள் இதான் பாஸ்!

ஒரு பாக்கெட் பிரியாணி, ஒரு பாட்டில் `குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு...' இதெல்லாம் கொடுத்தா போதும். எந்தக் கட்சியா இருந்தாலும் வந்து `வாழ்க வளர்க' சொல்வாங்க.

எந்தக் கட்சி பாகுபாடும் இல்லாத சமத்துவம் பேசுற தெய்வங்கள் பாஸ் இவங்க எல்லாம். #நீங்க பிரியாணி இல்லப்பா... மேகி மேகி!

அந்தக் காலத்து தொண்டன் :

அந்தக் காலத்து தொண்டர்கள் இருக்காங்கல்ல... அவங்க எல்லாம் எப்பவும் 80-கள்லேயே வாழுற மகான்கள். ஒரு கட்சி ஆரம்பிக்கிறப்போ அதில் தொண்டனா சேர்ந்து அதுலயே வளருவாங்க. அந்தக் கட்சியோட கொள்கை எல்லாம் மொத்தமா மாறி மாறி... பேர் மட்டும் மாறாம அப்படியே இருக்கும்.

கட்சி தொண்டர்
கிரிக்கெட்ல அரசியல் பண்ணலாமா?

இவங்களும் அந்தப் பேருக்காகவும், அந்தக் கட்சியை ஆரம்பிச்ச தலைவருக்காகவும் அந்தக் கட்சியிலேயே தொடருவாங்க. இப்போ நம் ஊரில் 80, 70 வயசுல சில கட்சிகளுக்கு தொண்டரா இருக்கிறவங்களைக் கேட்டா எல்லா `நாஸ்டால்ஜியா நோட்டும்' சொல்வாங்க ஃப்ரெண்ட்ஸ்.

#என்னது சிவாஜி செத்துட்டாரா?

ஐ.டி விங் தொண்டன் :

இந்த ஐ.டி தொண்டர்கள் இருக்காங்களே... அவங்களாம் நல்லா படிச்சுட்டு கட்சியோட ஐ.டி விங்ல கம்பு சுத்துற ஆட்கள் பாஸ். ஆஃப் லைன்ல நடக்கிற கட்சி சண்டையில் கலந்துக்கதான் நிறையத் தொண்டர்கள் இருக்காங்களே, ஆன்லைனை இவங்கதானே பார்த்துக்கணும்.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூடியூப்னு எல்லா சோஷியல் மீடியாவிலேயும் அவங்க கட்சிக்காக கம்பு சுத்துறது, கொடி பிடிக்கிறது, ராட்டினம் விடுறது எல்லாம் பண்ணுவாங்க.

கட்சி தொண்டர்
'இது அரசியல் டி.ஆர்.. லட்சிய டி.ஆர்'

இருக்கிற தொண்டர்கள்லேயே கொஞ்சமாச்சும் அறிவும், பணமும் இருக்கிற தொண்டர்கள்னா அது இந்த ஆன்லைன் ஐ.டி தொண்டர்கள்தான். இவங்க கட்சி மாறினா போதும்... அதுக்கு முன்னாடி போட்ட எல்லா போஸ்ட்டையும் டெலிட் பண்ணிட்டு சஞ்சய் ராமசாமியா மாறிடுவாங்க.

#சாமியோ ஓ கஜினி!

கட்சி தொண்டர்
'ஆளுநரிடம் அரசியல் பற்றி விவாதித்த ரஜினி' - டைம்பாஸ் மீம்ஸ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com