2022-ன் விடை தெரியாத கேள்விகள்

அண்ணாமலையின் ரபேல் வாட்சுக்கு ரசீது இருக்கிறதா, இல்லையா?, திமுக தருவதாக சொன்ன குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் எப்போது வரும்?
2022
2022டைம்பாஸ்

* அண்ணாமலையின் ரபேல் வாட்சுக்கு ரசீது இருக்கிறதா, இல்லையா?

* திமுக தருவதாக சொன்ன குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் எப்போது வரும்?

* ஏற்கெனவே பிளாப் ஆன 'பாபா' படத்தை ரஜினிகாந்த் ஏன் ரீ-ரிலீஸ் செய்தார்?

* நித்யானந்தாவின் 'கைலாசா தீவு' எங்கேதான் இருக்கிறது?

* இந்த ஆண்டாவது நீட் தேர்வு ரத்து ரகசியம் உங்களுக்கு தெரிந்ததா?

* அதிமுகவில் இப்போது எத்தனை பொதுச்செயலாளர்கள்? எத்தனை இடைக்கால பொதுச்செயலாளர்கள்?

* தமிழகத்தின் எதிர்க்கட்சி யார் அதிமுக-வா? பாஜக-வா?

* இன்னும் பா.ஜ.கவிலிருந்து எத்தனை பலான ஆடியோ, வீடியோக்கள் ரிலீஸ் ஆகும்?

* அடுத்த கொரோனா சுற்றே வந்துவிட்டதே, நிர்மலா சீதாராமன் அறிவித்த கொண்டக்கடலை எப்போதுதான் வரும்?

* இந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸில் கார்த்தி சிதம்பரம் எத்தனை படங்கள் பார்த்தார்?

* இந்தாண்டு தமிழக காங்கிரஸில் 'கோஷ்டிகளின்' எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

* ஜெயலலிதா 'மறைந்த நன்னாள்' அப்போலோ மருத்துவமனை அறிக்கையின் படி டிசம்பர் 5-ஆ? சாட்சியங்கள் அடிப்படையில், ஆறுமுகசாமி ஆணையம் கூறிய டிசம்பர் 4-ஆ?

* TTF வாசன் இந்தாண்டு பைக் ஓட்டிய அதிகபட்ச வேகம் எவ்வளவு?

* நடிகர் பிரசாந்த் இந்த ஆண்டு எத்தனை 'அந்த கன்' பட போஸ்டர்களை வெளியிட்டார்?

2022
New Year's Resolution: அரசியல்வாதிகளின் கலகலப்பான சபதம் லிஸ்ட்

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com