ரெட் லைட் விவகாரங்கள்

ரோட்டில் போனால் சிவப்பு விளக்கு சைரன் கார்களில் தொல்லை தாங்க முடியவில்லை. உண்மையில் யார் யாரெல்லாம் சைரன் வைத்த கார்களில் போகலாம்?
சைரன் விளக்கு
சைரன் விளக்கு

ரோட்டில் போனால் சிவப்பு விளக்கு சைரன் கார்களில் தொல்லை தாங்க முடியவில்லை. வேகாத வெயிலில் நாம் டிராபிக்கில் காத்துக்கிடக்க, சைரன் ஒலிக்க விட்டு பறக்கிறார்கள். உண்மையில் யார் யாரெல்லாம் சைரன் வைத்த கார்களில் போகலாம்?

அரசு அறிவிப்பின்படி மொத்தம் 18 விதமான பதவிகளில் உள்ளவர்கள் தான் சிவப்பு விளக்கை பயன்படுத்தலாம்.

1. கவர்னர்
2. முதலமைச்சர்
3. துணை முதலமைச்சர்
4. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
5. உயர் நீதிமன்ற நீதிபதிகள்
6. சபாநாயகர்

7. கேபினட் அமைச்சர்கள்
8. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
9. மாநில அமைச்சர்கள்
10. அட்வகேட் ஜென்றல்
11. தலைமைச் செயலாளர்
12. போலீஸ் டிஜிபி
13. சட்டமன்ற மேல் சபை தலைவர்
14. மாநில தேர்தல் ஆணையர்
15. நீதித்துறையின் லோக்ஆயுக்தா
16. தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்ட ஆலோசனைக்குழு தலைவர்

17. ஆற்காடு நவாப் முகம்மது அப்துல் அலி
18. விஐபிக்களின் பாதுகாப்பு மற்றும் பைலட் வாகனங்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட போலீஸ் எஸ்பி-கள், மாவட்ட நீதிபதிகள், பெருநகர மாஜிஸ்திரேட், உயர்நீதிமன்ற பதிவாளர், தென்மண்டல சட்ட ஒழுங்கு ஐஜி, தலைமைச் செயலக அனைத்து அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள், தணிக்கைத்துறை அக்கவுண்டண்ட் ஜென்ரல், போக்குவரத்து ஆணையர், துறைத் தலைவர்கள், கருவூல அதிகாரிகள் ஆகியோர் மஞ்சள் விளக்கு பயன்படுத்த முடியும்.

- எம்.பரக்கத் அலி.

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com